Published:Updated:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Vikatan Correspondent
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில்  நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில்  நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு!

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதியை கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஜெயலலிதா தரப்பின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
 
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது 40வது நாளாக கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் செந்தில் ஆஜராகி, 177 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார்.
 
அதேபோல சொத்து மறு மதிப்பீடு பட்டியல் மற்றும் மார்பல் புனரமைப்பு பணிகள் குறித்த பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில், இரு தரப்பு ஒப்பீடு அறிக்கையும் இன்றைய விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டது.
 
பட்டியல்களின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார் மற்றும் செந்தில் பதில் அளித்தனர்.

இதற்கிடையே வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி, சுப்பிரமணியன் சாமி நாளை எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். நாளை தீர்ப்பு தேதியை நீதிபதி அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.