Published:Updated:

போலீசார் - இந்திய மாணவர் சங்கத்தினரிடையே மோதல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போலீசார் -  இந்திய மாணவர் சங்கத்தினரிடையே மோதல்!
போலீசார் - இந்திய மாணவர் சங்கத்தினரிடையே மோதல்!

போலீசார் - இந்திய மாணவர் சங்கத்தினரிடையே மோதல்!

விருதுநகர்: தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த வந்த இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீசார் -  இந்திய மாணவர் சங்கத்தினரிடையே மோதல்!

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று விருதுநகர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி, விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு கோஷமிட்டபடி இன்று காலை இந்திய மாணவர் சங்கத்தினர் வந்தனர்.

போலீசார் -  இந்திய மாணவர் சங்கத்தினரிடையே மோதல்!

அவர்கள், விருதுநகர் ஆட்சியர் அலுவலத்திற்குள் செல்ல முயன்றபோது, டி.எஸ்.பி. சக்ரவர்த்தி தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் இந்திய மாணவர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீசார் -  இந்திய மாணவர் சங்கத்தினரிடையே மோதல்!

இதையடுத்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியும், அவர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி சென்று ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.கார்த்தி

படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு