Published:Updated:

விடுப்பில்லாத வேலை: கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதபடைக் காவலர்!

திருச்சி: ஆல்அவுட் கொசு மருந்தை குடித்து ஆயுதப்படைக் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் தன்னை தொடர்ந்து பணி செய்ய கட்டாயப்படுத்திய  போக்குவரத்து அதிகாரியை கட்டிப்பிடித்து, அரசு பேருந்து டிரைவர் செந்தில் என்பவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று நடந்தது. இந்த அதிர்வுகள் அடங்குவதற்குள் கரூரில் விடுமுறையே தராமல் தொடர்ந்து பணியில் தொடர செய்வதாக கரூர் ஆயுதப்படைக் காவலர் ஒருவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது.

விடுப்பில்லாத வேலை: கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதபடைக் காவலர்!

கரூர் ஆயுதப்படையில் பணிபுரிபவர் காவலர் மகேந்திரன். இவர்  இன்று காலை தற்கொலை செய்ய திட்டமிட்டு கொசு விரட்டியான  ஆல்அவுட் பாக்ஸில் உள்ள மருந்தை குடித்துள்ளார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அறிந்தவுடன், மகேந்திரனை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து கரூர் மாவட்டம், பசுபதி பாளையம் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில், விடுமுறையே தராமல் தொடர்ந்து தன்னை பணி செய்யச் சொல்வதாக உயர் அதிகாரிகள் மீது மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளராம். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

அரசு  அதிகாரிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வதும், மாய்த்துக்கொள்ள முயற்சிப்பதும் தொடர்கதையாகி விட்டது. இதற்கு தமிழக அரசு முற்றுபுள்ளி வைக்குமா?

-சி.ஆனந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு