Published:Updated:

டாஸ்மாக்கில் திருட வந்தவர் குடித்து விட்டு தூக்கம்: தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்!

Vikatan Correspondent
டாஸ்மாக்கில் திருட வந்தவர் குடித்து விட்டு தூக்கம்: தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்!
டாஸ்மாக்கில் திருட வந்தவர் குடித்து விட்டு தூக்கம்: தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்!

சிவகங்கை: டாஸ்மாக் கடையில் திருட வந்தவர் நன்றாக குடித்து தூங்கினார். மறுநாள் அவரை போலீசார் தட்டி எழுப்பி கைது செய்துள்ளனர்.

சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூரில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விற்பனையாளர் மூடிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக்கில் திருட வந்தவர் குடித்து விட்டு தூக்கம்: தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்!

இதுபற்றி மதகுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், கடைக்குள் சென்று பார்த்தபோது, 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் மதுபானக் கடையின் மாடிக்கு சென்று போலீசார் பார்த்தபோது, அங்கு ஒருவர் நன்றாக குடித்து தூக்கிக் கொண்டிருந்தார். அவரை தட்டி எழுப்பிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், தனது பெயர் சுதந்திரமணி (30), ஒக்கூரைச் சேர்ந்தவன் என்றும், நள்ளிரவில் கடை பூட்டை உடைத்து திருட வந்ததும், ஆனால், அதிகமாக குடித்ததால், போதையில் அங்கேயே தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், சுதந்திர மணியுடன் வந்து மது பாட்டில்களை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.