Published:Updated:

இளங்கோவனை கைது செய்ய உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரரால் பரபரப்பு!

இளங்கோவனை கைது செய்ய உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரரால் பரபரப்பு!
இளங்கோவனை கைது செய்ய உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரரால் பரபரப்பு!

இளங்கோவனை கைது செய்ய உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரரால் பரபரப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இளங்கோவனை கைது செய்ய உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரரால் பரபரப்பு!

தேனி: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்யக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ்காரர் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன் (42). இவர் தற்போது ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது, சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு வேல்முருகன் தீக்குளிக்க முயன்றார். ஜெயலலிதா விடுதலை பெற்றபின்னர், தேனியில் போலீஸ் சீருடை அணிந்தபடி மொட்டை போட்டு காவல்துறை  வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அ.தி.மு.க. கொடி பறந்த ஒரு காரில் போலீஸ் சீருடையுடன் வேல்முருகன் வந்தார். காரில் இருந்து ‘அம்மா வாழ்க’ என்று கோஷமிட்டபடி இறங்கி வந்த அவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்யும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்தார்.

இவருடன் வந்த சிலரும் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். அங்கு வந்த போலீசார்,  வேல்முருகன் உள்ளிட்ட 10 பேரை போலீஸ் வேனில் ஏற்றி, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் கூறுகையில், "போலீஸ்காரர் வேல்முருகன் 2 நாட்களாக பணிக்கு வரவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு