Published:Updated:

இளங்கோவனைக் கைது செய்ய டெல்லி விரைந்தனர் தனிப்படை போலீசார்!

இளங்கோவனைக் கைது செய்ய டெல்லி விரைந்தனர் தனிப்படை போலீசார்!
இளங்கோவனைக் கைது செய்ய டெல்லி விரைந்தனர் தனிப்படை போலீசார்!

இளங்கோவனைக் கைது செய்ய டெல்லி விரைந்தனர் தனிப்படை போலீசார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரைக் கைது செய்ய தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.

பிரதமர் மோடி,  முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதை இளங்கோவன், சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் தமிழகம் முழுவதும்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், இளங்கோவன் மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஊழியராகப்  பணியாற்றி வந்த வளர்மதி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில், காமராஜர் அரங்கத்தில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் அதற்கு மாநில தலைவர் இளங்கோவன், நிர்வாகி நாராயணன் ஆகியோர்தான் காரணம் என்றும், தன்னை வேலையை விட்டு நீக்கியதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும்  தெரிவித்து இருந்தார். 

இந்தப் புகார் மீது உடனடியாகத் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். குறித்து இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சிவபாஸ்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் ஜாமீன் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், கைது செய்வதற்கு இடைக்கால தடை  பிறப்பிக்க முடியாது; விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலையில் திடீரென்று இளங்கோவன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவர், நண்பர்கள் வீட்டில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலிட தலைவர்களையும் அவர் நேற்று மாலை சந்தித்து, இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இளங்கோவன் மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசில் ஒரு பிரிவினர் இன்று காலை டெல்லி சென்றதாகவும், இளங்கோவனை அவர்கள் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு