Published:Updated:

அனுமதி, சம்பவ இடம், அபராதம்... டிசம்பர் 6-க்கு அரசாங்கத்தின் ஸ்கெட்ச்!

விகடன் விமர்சனக்குழு
அனுமதி, சம்பவ இடம், அபராதம்... டிசம்பர் 6-க்கு அரசாங்கத்தின் ஸ்கெட்ச்!
அனுமதி, சம்பவ இடம், அபராதம்... டிசம்பர் 6-க்கு அரசாங்கத்தின் ஸ்கெட்ச்!

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதியை ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய அமைப்பினர் நினைவு நாளாகக் கடைபிடித்து வருகின்றனர். மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று தங்கள் எதிர்ப்பை விதவிதமான  நடவடிக்கைகள் மூலம் பதிவு செய்வார்கள்.

அனுமதி, சம்பவ இடம், அபராதம்... டிசம்பர் 6-க்கு அரசாங்கத்தின் ஸ்கெட்ச்!

இப்படியான ஒரு போராட்டத்தின்போதுதான் சென்னையில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தூதரகம் அருகே அசம்பாவிதங்கள் அரங்கேறின. அப்போதிருந்து அந்தப் பகுதியில் எந்த போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்த தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்புக்காக நிரந்தரமாக ஆயுதமேந்திய போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இப்படி கடந்த கால அனுபவங்கள் காவல் அதிகாரிகளுக்கு ஞாபகம் வர, ’டிசம்பர் 6 -ம் தேதி வருமுன் திட்டமிடுவோம்’ என சில நாட்கள் முன்னர் ஒரு அவசரக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதே சமயம் வழக்கத்துக்கு மாறாக ’ராமர் கோயிலை அதே இடத்தில் கட்டுவோம்’ என்ற கோரிக்கையை முன் வைத்து டிசம்பர் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புக்கு இணையாக மனுக்களை கொடுத்துள்ளனர். உடனடியாக சுதாரித்த போலீஸ் அதிகாரிகளின் பெரும் விவாதத்துக்குப் பிறகு, இது தொடர்பான ஒரு விரிவான அறிக்கையை 'கோட்டை'க்கு அனுப்பியுள்ளனர்.

அனுமதி, சம்பவ இடம், அபராதம்... டிசம்பர் 6-க்கு அரசாங்கத்தின் ஸ்கெட்ச்!

அதற்கு கோட்டையிலிருந்து வந்த பதில் போலீசாரை 'அப்பாடா' என பெருமூச்சு விட வைத்துள்ளது. 'இஸ்லாமிய அமைப்புகள், இந்து அமைப்புகள் என்று எந்த அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி கேட்டாலும் மறுக்காமல் கொடுங்கள். ஆனால், ஆர்ப்பாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று பாதுகாப்பான இடத்தை தீர்மானித்துச் சொல்வது உங்கள் (போலீஸ்) பொறுப்பு’ என்பதே அந்தப் பதில். போலீஸ் அனுமதிக்காத இடத்தில் டிசம்பர் 6-ம் தேதி அன்று எவ்வளவு பெரிய அமைப்பினர் போராட்டம் நடத்தினாலும், கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விடுமாறும் அறிவுறுத்தியிருக்கிறார்களாம்.

அனுமதி, சம்பவ இடம், அபராதம்... டிசம்பர் 6-க்கு அரசாங்கத்தின் ஸ்கெட்ச்!

ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல்களில் ஈடுபடுகிறவர்கள் பொதுச் சொத்துக்களுக்கோ, தனிநபர் உடமைகளுக்கோ சேதம் விளைவித்தால் அதற்குரிய இழப்பீட்டை அமைப்பின் தலைவரிடமிருந்து சட்ட ரீதியாக வாங்கிக் கொடுக்க வேண்டியதும் போலீஸின் கடமை என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதனால் சின்ன சுதந்திரமும், பெரும் பொறுப்பும் போலீஸூக்கு ஒருசேர கிடைத்திருக்கிறது.

ஆக, டிசம்பர் 6... வழக்கத்தைவிட கூடுதல் களேபரத்தை எதிர்கொள்ளலாம்... அல்லது அமைதியாகவும் கடந்து செல்லலாம். என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள இன்னும் எட்டே நாட்கள்..!

- ந.பா.சேதுராமன்