Published:Updated:

பல கோடி ரூபாய் ஊழல்: சரத்குமார் மீது காவல்துறையில் புகார்

பல கோடி ரூபாய் ஊழல்: சரத்குமார் மீது காவல்துறையில் புகார்
பல கோடி ரூபாய் ஊழல்: சரத்குமார் மீது காவல்துறையில் புகார்

சென்னை; நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோது ஊழல் புரிந்ததாக நடிகர் சரத்குமார் மீது நடிகர் சங்கம் சார்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் சார்பில் பூச்சி முருகன்,   நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது புகார் மனு அளித்துள்ளார். நடிகர் சங்கம் சார்பில்  அதன் நிர்வாகிகளில் ஒருவரான பூச்சி முருகன் இன்று காலை,  காவல்ஆணையரிடம் தனது சட்ட ஆலோசகர் கிருஷ்ணா மூலம் குறைதீர்க்கும் அமைப்பிடம் புகார் மனு ஒன்றை சமர்ப்பித்தார்.

பல கோடி ரூபாய் ஊழல்: சரத்குமார் மீது காவல்துறையில் புகார்

அதில்,  நடிகர் சங்கத்தின் முன்னாள் அறங்காவலர்களாக இருந்த சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும்,  அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்  கூறப்பட்டுள்ளது. இந்த மனுவில் நடிகர் சங்கம் சார்பில் அதன் செயலாளரான விஷால் கையொப்பமிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில்,  சரத்குமார் ஆளும்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் அவர் மீது ஊழல் புகார் அளிக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட செயல் என்கிறது சரத்குமார் தரப்பு

அடுத்த கட்டுரைக்கு