Published:Updated:

காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்துக் கொடுங்கள்:போலீஸ் கமிஷனரிடம் புகார்

Vikatan Correspondent
காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்துக் கொடுங்கள்:போலீஸ் கமிஷனரிடம் புகார்
காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்துக் கொடுங்கள்:போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை: கடந்த 28ம் தேதிமுதல் காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்துத்தரும்படி  அவரின் தாயார் மற்றும் மனைவி ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேந்தர் மூவிஸ் மதன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று வாட்ஸ் அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மதன், காசிக்கு சென்று கங்கையில் சமாதி அடையப்போகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார் என்று தெரிகிறது.

இதனையடுத்து பதற்றம் அடைந்த அவரின் உறவினர்கள் வாரணாசி சென்று அவரைத் தேடினர். 5 படகுகள் அமைத்து கங்கை நதியில் தீவிரமாகத் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை என்பதால், சென்னை போலீசில் அவரின்  குடும்பத்தினர்,காணாமல் போன மதனைக்  கண்டுபிடித்துக் கொடுக்கும்படி புகார் தெரிவித்துள்ளனர்.