Published:Updated:

மதுரை காவல் நிலையத்தில் நடிகர் செந்தில் ஆஜர்!

விகடன் விமர்சனக்குழு
மதுரை காவல் நிலையத்தில் நடிகர் செந்தில் ஆஜர்!
மதுரை காவல் நிலையத்தில் நடிகர் செந்தில் ஆஜர்!

மதுரை: மதுரை சைபர் கிரைம் போலீஸில் நடிகர் செந்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

அண்மையில் நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது நகைச்சுவை நடிகர் செந்தில் இறந்து விட்டதாக கடந்த மாதத் தொடக்கத்தில் வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவின. இதையடுத்து, நான் 100 வருஷம் வாழ்வேன் என கடந்த மாதம் 7-ம் தேதி செந்தில் பேட்டி அளித்திருந்தார். பின்னர் அந்த வதந்திகள் பரவவில்லை.

இந்நிலையில், மீண்டும் கடந்த 30-ம் தேதி முதல் வாட்ஸ் அப்பில், அதே வதந்தி பரவி வருவதாக நடிகர் செந்தில் கூறினார். மேலும், இது தொடர்பாக மதுரை போலீஸாரிடம் "தான் இறந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தி.மு.க.வினரின் தூண்டுதல் பேரில் நடப்பதாக தெரிகிறது" என்று  புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், சைபர் கிரைம் போலீசில் நடிகர் செந்தில் இன்று ஆஜராகி, தனது புகார் குறித்து மேலும் சில ஆவணங்களை சமர்ப்பித்து கையெழுத்திட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், ''நான் கொடுத்த புகார் குறித்து விளக்கம் கேட்பதற்காக சைபர் கிரைம் போலீசார் அழைத்திருந்தனர். அதன் பேரில் வந்தேன். என் மீது அவதூறு பரப்பியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.