Published:Updated:

'சதிதிட்டம் முறியடிப்பு: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது'

Vikatan Correspondent

புதுடெல்லி: தலைநகரைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த லஷ்கர் - இ - தாய்பா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாக, டெல்லி காவல்துறை தெரிவித்தது.

டெல்லியில் முக்கிய இடங்களையும், மிக முக்கிய பிரமுகர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக, தலைநகரில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக, காவல்துறைக்கு உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

இதன் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் போலீஸ் உதவியுடன் பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டதாக, டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லஷ்கர் - இ - தாய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரும், டெல்லியில் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் வி.வி.ஐ.பி.கள் வசிக்கும் இடத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியிருந்ததாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தக் கைது நடவடிக்கையை உறுதி செய்துள்ள டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத், அவ்விருவர் குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

தேடுதல் வேட்டை தொடர்வதால், இப்போதைக்கு விவரங்களை வெளியிடுவது சரியானதல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.