Published:Updated:

ரெய்டுக்குச் சென்ற பெண் இன்ஸ்பெக்டர்! பதறவைத்த பாலியல் கும்பல்

ரெய்டுக்குச் சென்ற பெண் இன்ஸ்பெக்டர்! பதறவைத்த பாலியல் கும்பல்
ரெய்டுக்குச் சென்ற பெண் இன்ஸ்பெக்டர்! பதறவைத்த பாலியல் கும்பல்

ரெய்டுக்குச் சென்ற பெண் இன்ஸ்பெக்டர்! பதறவைத்த பாலியல் கும்பல்

சென்னையில் பாலியல் கும்பல் குறித்து தகவல் கிடைத்ததும், விபசார தடுப்பு பிரிவு போலீஸ் டீம் அங்கு நேற்றிரவு சென்றது. அப்போது அந்த கும்பலை பிடிக்கச் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியாக இருக்கும் பங்களா வீடுகளில் பாலியல் தொழில் படுஜோராக நடந்து வருவதாக விபசார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதுபோல நேற்றும் விபசார தடுப்புப் பிரிவு போலீசுக்கு சென்னை வளசரவாக்கம், சாய்நகரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான டீம் சம்பவ இடத்துக்குச் சென்றது. அந்த இடத்தில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது.

இதனால் அந்த கும்பலைப் பிடிக்க போலீஸ் டீம் களமிறங்கியது. அந்த இடத்தையே போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸ் சுற்றி வளைத்த தகவல் தெரிந்ததும் பாலியல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, அந்த கும்பலை விரட்டினார். அப்போது அவரும், அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரும் கீழே விழுந்தனர். இருப்பினும் ராஜேஸ்வரி, அவரை விடாமல் பிடித்துள்ளார். இதற்குள் போலீஸ் டீம் அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தது.

கீழே விழுந்ததில் ராஜேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் கடமையை நிறைவேற்றியுள்ளார் அவர். இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை பாராட்டியுள்ளனர். 

இதுகுறித்து விபசார தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் மதியிடம் பேசினோம். "நேற்றிரவு நடத்திய ரெய்டில் இரண்டு பேரை பிடித்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பாலியல் கும்பலை விரட்டி பிடிக்கச் சென்றபோது இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி காயமடைந்ததாக சொல்லும் தகவல் உண்மையல்ல" என்றார். 

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ஒருவரிடம் கேட்டபோது 'இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டது உண்மை' என்றார்.  

- எஸ்.மகேஷ்

அடுத்த கட்டுரைக்கு