Published:Updated:

'மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்
'மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்

'மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை : மாணவர்கள் போராட்டத்தில் நக்சல் ஆதரவு அமைப்பினர் இருந்ததாகவும், அதன் காரணமாகவே போராட்டம் திசைமாறியதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.

கோவையில் கடந்த ஒரு வாரகாலமாக அமைதி வழியில் போராடிய மாணவர்களை கைது செய்து போராட்டத்தை போலீஸார் முடிவுக்கு கொண்டு வந்தனர். கோவை காந்திபுரத்தில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியும் போலீஸார் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில், மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவு அமைப்பினர் இருந்ததாகவும், இதன் காரணமாகவே போராட்டம் திசைமாறியதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கோவை மாநகரில் 20 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். காவல்துறை 3 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். போலீஸை பற்றி மக்கள் உயர்வாக நினைப்பதிலும், உயர்வில்லாமல் நினைப்பதிலும் பத்திரிகைகளுக்கும் பங்கு இருக்கிறது. காவல்துறை மட்டும் நினைத்தால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியாது. மக்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டால்தான் சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற முடியும். இதில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது.

'மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை வ.உ.சி மைதானத்தில் ஒரு அரசியல் கட்சி கூட்டம் என்றால் 10, 15 ஆயிரம் பேர் வருவார்கள். ஆனால் இந்த போராட்டத்துக்கு 30 ஆயிரம் பேர் வரை வந்தார்கள். மாணவர்கள், இளைஞர்கள் கும்பல் கும்பலாக வந்து, கூட்டம் கட்டுக்கடங்காமல் போக  சமூக ஊடகங்களும், பத்திரிகை, தொலைக்காட்சிகளும்தான் காரணம்.  இப்படி கட்டுக்கடங்காமல் கூட்டத்தை கூட்டி, அதை போலீஸ் கட்டுப்படுத்தவில்லை என்ற வித்தியாசமான சூழலை உருவாக்கக் கூடாது. 5, 10 வருடங்களுக்கு முந்தைய செய்திகளை கூட குரூப் மெசேஜ்களில் பார்த்து, இத்தனை கூட்டம் வந்து விட்டது. மாணவர்கள் ஒன்று கூடியது நல்ல விஷயம் தான்.

ஆனால் மாணவர்களுடம் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டனர். அவர்கள் யார் யார்? எந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இருக்கிறது. வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. மதவாத அமைப்புகள், இனவாத அமைப்புகள் நக்சல் ஆதரவு அமைப்புகள் என எல்லோரும் இந்த போராட்டத்தில் இருந்தனர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் இல்லை. ஆனால் அரசியல் கட்சி வரக்கூடாது என சொன்ன மாணவர்கள், இந்த சிறிய சிறிய அமைப்புகள் சொல்வதை தான் கேட்கிறார்கள். மக்கள் அதிகாரம், நாம் தமிழர், மே 17, சிபிஐ (எம்.எல்), இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகள் மாணவர்களுடன் ஊடுருவியுள்ளனர். தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எல்லோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

'மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்

சமூக ஊடகங்களில் பரவிய விஷக்கருத்துகள் தான், போராட்டம் திசை மாற காரணமானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நோக்கம் காரியத்தை சாதிப்பதாக அல்லாமல், போராட்டம் நடத்த வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. பொதுமக்கள் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே நம்ப வேண்டாம். யாரும் செய்தியை திரித்து வெளியிடலாம் என்பதால் நம்ப வேண்டாம்.

போராட்ட களத்தில் மாணவர்களை தவறான வழித்தடங்களில் இழுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். மாணவர்கள் தங்களை தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் யார் என இனம் கண்டு, அவர்களோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். சமூக ஊடகங்களில் வருபவை அத்தனையும் உண்மை என நம்ப வேண்டாம். காவல்துறை பற்றியோ, அல்லது வேறு ஏதாவது பற்றியோ தவறான தகவலை உருவாக்குபவர் மட்டுமல்ல. அதை ஃபார்வேர்டு செய்தாலும் அது தவறு தான். உங்களுக்கு தெரியாத விஷயங்களை ஃபார்வேர்டு செய்ய வேண்டாம்," என்றவர் போலீஸ் தடியடி, அனுமதியில்லாத ரேக்ளா பந்தயத்தை போலீஸே நடத்தியது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தார்.

- ச.ஜெ.ரவி,

படங்கள் : தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு