Published:Updated:

நெல்லை அருகே துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

Vikatan Correspondent
நெல்லை அருகே துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!
நெல்லை அருகே துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!
நெல்லை அருகே துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே போலீஸ்  நடத்திய  துப்பாக்கிச்  சூட்டில் ஒருவர் பலியானார்; மேலும் ஒருவர் காயமடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முருகன் குறிச்சி ஐயங்கோவில்  என்ற இடத்தில் டிராக்டரில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஆற்று மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறு மற்றும் முறைகேடு  தொடர்பாக,நேற்று முருகன் குறிச்சி ஐயங்கோவில் அருகே ஒருவரை போலீசார் கைது  செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் மேலும் ஒருவரைத் தேடி  இன்ஸ்பெக்டர் விஜயகுமார்  உள்ளிட்ட போலீசார் மறுகால் குறிச்சி கிராமத்திற்கு சென்றனர்.

அப்போது போலீஸாருக்கும், மணல் அள்ளும் கும்பலுக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. இது பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில்,  அந்த கும்பலைச் சேர்ந்த வானமாமலை (32) என்பவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்;  மேலும் ஒருவர் காயமடைந்தார்.இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தம்மை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியால் சுட நேரிட்டதாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார்  தெரிவித்துள்ளார்.