முகங்கள்

மேகாலயா உயர் நீதிமன்றத்துக்குத் தன்னை இடமாற்றம் செய்ததன் காரணமாக, தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில் ரமானி. இவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்திருக்கிறார்கள். தமிழக நீதித்துறை வரலாற்றில் இது புதிய பக்கம். அதோடு, ஜனநாயகத்தின் மீது எழுந்துள்ள மிகப்பெரும் கேள்வியும்கூட.

நீதித்துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்து வரும் நிலையில் தனக்கான நீதிக்காகவும் உரிமைகளை நிலைநிறுத்தவும் போராடிக் கொண்டிருக்கிறார் ஒரு பெண் நீதிபதி. இந்தியாவின் தலைமை நீதிபதிகளிலேயே மிகவும் மூத்தவர் ரமானி.

இவரைப் பற்றி ஓர் அறிமுகம்...

1958 அக்டோபர் 3 அன்று மும்பையில் பிறந்தவர் தஹில் ரமானி. தந்தையின் வழியிலேயே வழக்கறிஞர் ஆனவர். சட்ட முதுகலைப் படிப்பு வரை மும்பையில் படித்துவிட்டு, 1982-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். பத்தாண்டுகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உயர்ந்தபின், இவர் நடத்திய வழக்குகள் பலவும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்டையே உலுக்கிய பல்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளிகளின் தண்டனையை உறுதிசெய்தார் அப்போது வழக்கறிஞராக இருந்த தஹில் ரமானி.

19 ஆண்டுகள் வழக்கறிஞராகச் செயல் பட்டபின் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது பெண் சிறைக் கைதிகளுக்கான நலனுக்காக முக்கியப் பங்காற்றினார். கருவுற்றிருக்கும் பெண் கைதிகளின் நலனுக்காக இவர் அளித்த வழிகாட்டுதல்கள் காலம்காலமாக போற்றத்தக்கவை.

நீதிபதி தஹில் ரமானி தீர்ப்பு வழங்கிய வழக்குகளிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பில்கிஸ் பானோ வழக்கு. குஜராத் மாநிலத்தில், 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோ, குஜராத் கலவரக் கும்பலால் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வன்முறைச் சம்பவத்தில் அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர். குஜராத்தில் வழக்கு விசாரணை முறையின்றி நடப்பதாக எழுந்த புகாரின்பேரில், இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரித்தது நீதிபதி ரமானி. அதிகாரத்துக்கும் அரசியலுக்கும் அஞ்சாமல் நேர்மையாக வழக்கை விசாரித்த இவர், குற்றவாளிகளுக்கு உதவி செய்த அரசு டாக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் அனைவருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அந்த வழக்கில் இவர் எழுதிய 400 பக்கத் தீர்ப்பை நீதியைக் கற்போருக்கு உதவும் போதிமரம் என்றே சொல்லலாம்.

2015 முதல் 2018-ம் ஆண்டு வரை மூன்று முறை மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தற்காலிகப் பதவி வகித்தவர், 2018 ஆகஸ்ட் 12 அன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீதித்துறையின் மீதும், பெண் வழக்கறிஞர்கள் நலனிலும், மாணவர்களின் வளர்ச்சியிலும் இவர் கொண்டிருக்கும் அக்கறை, இவருடைய பல்வேறு உரைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. நீதிமன்ற வளாகத்தில் நடந்த மனுநீதிச்சோழன் விழாவில் ரமானி ஆற்றிய உரையில், “எந்த நிலையிலும் நீதியை நிலைநிறுத்துவோம், நேர்மையிலிருந்து வழுவாதிருப்போம், நீதி வேண்டுவோருக்கு நன்மை செய்வோம். மிக முக்கியமாக, நீதி வழங்கப்பட்டதாக மட்டும் இருக்கக்கூடாது. நீதி வழங்கப்பட்டதாக அறியப்படவும் வேண்டும்” என்றார். இவர்தான் இப்போது நீதிவேண்டி நிற்கிறார்!