Published:Updated:

9 மாதக் குழந்தைக்கும் ஹெல்மெட் அவசியம்! எடுபடுமா சார் உங்க சட்டம்?

Helmet Rule Mandatory

9 மாதத்திலிருந்து 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் இனி ஹெல்மெட் அவசியம்; 40 கிமீ–க்கு மேல் பைக்கில் போகக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம். இது எந்தளவுக்கு எடுபடும்?

9 மாதக் குழந்தைக்கும் ஹெல்மெட் அவசியம்! எடுபடுமா சார் உங்க சட்டம்?

9 மாதத்திலிருந்து 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் இனி ஹெல்மெட் அவசியம்; 40 கிமீ–க்கு மேல் பைக்கில் போகக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம். இது எந்தளவுக்கு எடுபடும்?

Published:Updated:
Helmet Rule Mandatory

‘அபியும் நானும்’ என்றொரு படத்தில் ஒரு பெற்றோரைப் பார்த்து பள்ளி ஆசிரியர் கேட்பார். ‘உங்க பொண்ணுக்கு ஸ்விம்மிங் தெரியுமா?’

‘அவ இப்போதாங்க நடக்கவே பழகிருக்கா!’ என்று கிலியோடு சொல்வார் குழந்தையின் தந்தை.

இப்போது போக்குவரத்துத் துறையில் கொண்டு வரும் சட்டங்கள், வாகன ஓட்டிகளுக்கு… அதுவும் பெற்றோர்களுக்கு இப்படித்தான் கிலி கிளப்புகின்றன. ஆம், இனிமேல் 9 மாதக் குழந்தைகள் முதல் மானுடராய்ப் பிறந்த அனைவரும் பைக்கில் போகும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் எனும் புதிய சட்டத்தை அறிவிப்பானை வெளியானதிலிருந்து ஓராண்டுக்குள் அமல்படுத்தவிருக்கிறது MoRTH (Ministry of Road Transport and Highways).

ஒரு புள்ளிவிவரப்படி இந்தியாவில், 14 வயதுக்குட்பட்ட 2,700 குழந்தைகளும்; 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 14,000 பேரும் 2020 சாலை விபத்தில் இறந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் பொருட்டு, மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், ஒரு புதுச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989–ல் ஒரு திருத்தம் செய்து வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பாணையில் இப்படிச் சொல்லியிருக்கிறது.

கூட்டுக்குடும்பமாக ஒரே பைக்கில்
கூட்டுக்குடும்பமாக ஒரே பைக்கில்

இனி டூ–வீலரில் பின்னால் அமர்ந்து செல்லும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளும்… அதாவது 9 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதேபோல், Safety Harness என்று சொல்லக் கூடிய Vest ஸ்டைல் பாதுகாப்புச் சாதனத்தை குழந்தைக்கு அணிவித்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுபவருடன் கொக்கிகள் மூலம் அதை இணைத்திருக்க வேண்டும். குழந்தை, வாகன ஓட்டியின் உடலுடன் ஒட்டியிருக்க வேண்டும். அது தளர்த்துவதற்கு எளிதாக இருக்க வேண்டும்.

மேலும், உங்கள் டூ–வீலரின் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஏற்றிச் சென்றால், 40 கிமீ டாப் ஸ்பீடுக்கு மேல் போகக்கூடாது.

இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. இதில் பாதுகாப்புச் சாதனம்… 40 கிமீ வேகம் எல்லாம் ஓகே! ஆனால்.. அந்த ஹெல்மெட் விஷயம்தான் கொஞ்சம் மண்டையைச் சொறிய வைக்கிறது வாகன ஓட்டிகளிடம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு வீல்கள் என்பதால் மட்டுமே டூ-வீலர் இல்லை; இரண்டு பேர் மட்டுமே போக வேண்டும் என்று தயாரிக்கப்பட்டதே டூ-வீலர். அப்படியென்றால் குழந்தையை எக்ஸ்ட்ரா பயணியாக ஏற்றிக் கொண்டு செல்வதே சட்டப்படி தவறுதான் எனும்பட்சத்தில், சிலர் கூட்டுக்குடும்பமாக ஒரே பைக்கில் ரைடு போவதெல்லாம் நம் ஊரில் நடக்கும்.

இந்தச் சட்டம் பற்றி பல வாகன ஓட்டிகளிடம் கருத்துக் கேட்டோம். ‘‘நான் ஹெல்மெட் போடுறதே கடுப்பா இருக்கு. இதுல என் பையனை வேற போடச் சொல்லணுமா?’’ என்றார் மதுரையைச் சேர்ந்த சுப்ரமணியன்.

‘‘இந்த லாக்டெளன்லதாங்க எனக்குப் பொண்ணு பொறந்துச்சு! பத்து மாசம் இப்போதான் முடியப் போகுது! அதுக்குள்ள அவளுக்கும் ஹெல்மெட்டா!’’ என்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த கோவிந்தன்.

‘‘என் பொண்ணுக்கு 2 வயசாகுது. குளிருதுன்னு சொல்லி மங்க்கி குல்லா போட்டாலே கடுப்பு ஆகும் அவளுக்கு. எடுத்து எடுத்து விடுவா! ஹெல்மெட்லாம் எப்படிச் சாத்தியம்னு தெரியலை!’’ என்றார், சென்னையைச் சேர்ந்த சுந்தர்.

‘‘குழந்தைகள் பாதுகாப்புக்காகத்தானே கொண்டு வந்திருக்காங்க. ஆனாலும், 4 வயசுக்கு மேல் என்றால் ஓகே.. 9 மாதக் குழந்தை எனும்போதுதான் பயமா இருக்கு.’’ என்றார், ஒரு வழக்கறிஞர்.

வர்மக்கலை மருத்துவர் பிரேம்குமார்
வர்மக்கலை மருத்துவர் பிரேம்குமார்

இது பற்றி மருத்துவத் துறையில் விசாரித்தோம். நாகர்கோவிலில் வர்மக்கலை நிபுணராக இருந்துவரும் பிரேம்குமார், டெக்னிக்கலாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘நம் தலையில் 25 வர்மப் புள்ளிகள் இருக்கின்றன. அது எப்போதுமே தளர்வாக இருக்க வேண்டும். அதில் முக்கியமானது, புருவ மையத்திலிருந்து உச்சி வரைக்கும் பயணிக்கும் கொண்டைக் கொள்ளி வர்மம். இதுதான் நம் உடம்புக்கே மூல ஆதாரப் புள்ளி. அதுவும் குழந்தைகளின் மண்டை எலும்பு மிகவும் மென்மையாக இருக்கும். இது அழுத்தப்படும்போது, காற்றுப் போகாமல்… உள்நாக்கிலிருந்து கழுத்து முறிதலில் தொடங்கி உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பித்து, கால் பாதம் வரை பிரச்னைகள் தொடங்கும்!’’ என்றார்.

தேர்தலுக்காக தீவிரப் பிரச்சாரத்தில் இருந்த முன்னாள் மேயரும், மருத்துவத் துறை அமைச்சருமான மா.சுப்ரமணியனிடம் பேசினேன். ‘‘தலைதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஹெல்மெட் போட்டால்தான் தலையைக் காக்க முடியும். விபத்துகளில் உயிர் பிழைத்தவர்கள் ஹெல்மெட் போட்டவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் சட்டம் என்பது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமே! என்ன, குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் ஹெல்மெட்களைத் தயாரிக்க வேண்டியதுதான். மற்றபடி ஹெல்மெட் போடுவதால், குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதெல்லாம் பொய்!’’ என்றார் மா.சுப்ரமணியன்.

மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்

ஆட்டோமொபைல் ஏரியாவில் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டோ ஜர்னலிஸ்ட்டாகப் பணிபுரிந்து வரும் பார்கவ், ‘‘சத்தியமா இதுக்குலாம் வாய்ப்பே இல்லை பாஸ். குழந்தைகளுக்கு கொரோனா பீரியட்ல மாஸ்க்கே சட்டம் கொண்டு வரலை. ஹெல்மெட் எப்படி..? என் கருத்து என்னன்னா… குழந்தைகளுக்கு 8 வயசுக்கு மேல் என்றால் இந்தச் சட்டம் பொருந்தும்! பிஞ்சு உடம்பு தாங்காதுங்க!’’ என்றார்.

பார்கவ்
பார்கவ்

நம் ஊரில்தான் இப்படியா… வெளிநாடுகளில் எப்படி என்று பார்த்தால்.. சிங்கப்பூர் போன்ற கிழக்காசிய நாடுகளில் ஒரு வித்தியாசமான சட்டம் இருக்கிறது. அதாவது, பார்கவின் கருத்துப்படி, குழந்தைகள் 7 வயது வரை பைக்கில் போகவே அனுமதி இல்லை. 8 வயதுக்கு மேல்தான் பில்லியன் ரைடராகவே முடியும். அதற்கு ஹெல்மெட் அவசியம். காரணம், இங்கே பொதுப்போக்குவரத்தில் காத்திருப்புக்கே அவசியமில்லை.

நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளை டூ–வீலரில் பில்லியன் ரைடராக அவ்வளாக ஏற்றிப் போகமாட்டார்களாம். ‘Bike’ என்று சொல்லக்கூடிய சைக்கிளில் வேண்டுமானால் ஏற்றிப் போவார்களாம். ஆனால், அதற்கும் ஹெல்மெட் என்பது கட்டாயமாக்கப்படவில்லை.

இந்தச் சட்டம் எடுபடுமானு உங்க கருத்தைச் சொல்லுங்க கமென்ட்டில்!