Published:Updated:

`திருமணமாகாத மகள் கல்யாணத்துக்கு பெற்றோரிடம் பணம் கேட்க உரிமை உண்டு!'-சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்

Court -Representational Image

அப்பா புனு ராம் பணி ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு ரூபாய் 75 லட்சம் ஓய்வூதியப் பணமாகக் கிடைக்கும். அதில், தன் திருமணத்துக்காக 25 லட்சம் ரூபாயை ராஜேஸ்வரி கேட்டுள்ளார். ஆனால், திருமண செலவுக்காக ராஜேஸ்வரிக்கு அவரின் தந்தை பணம் தர மறுத்துள்ளார்.

`திருமணமாகாத மகள் கல்யாணத்துக்கு பெற்றோரிடம் பணம் கேட்க உரிமை உண்டு!'-சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்

அப்பா புனு ராம் பணி ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு ரூபாய் 75 லட்சம் ஓய்வூதியப் பணமாகக் கிடைக்கும். அதில், தன் திருமணத்துக்காக 25 லட்சம் ரூபாயை ராஜேஸ்வரி கேட்டுள்ளார். ஆனால், திருமண செலவுக்காக ராஜேஸ்வரிக்கு அவரின் தந்தை பணம் தர மறுத்துள்ளார்.

Published:Updated:
Court -Representational Image

35 வயதுடைய திருமணமாகாத மகளுக்கு பெற்றோர் களிடமிருந்து திருமணத்துக்கான செலவைப் பெற `இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்' கீழ் உரிமை உள்ளது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Marriage (Representational Image)
Marriage (Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு 35 வயதாகிய நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். அவரின் அப்பா புனு ராம் பணி ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு ரூபாய் 75 லட்சம் ஓய்வூதியப் பணமாகக் கிடைக்கும். அதில், தன் திருமணத் துக்காக 25 லட்சம் ரூபாயை ராஜேஸ்வரி கேட்டுள்ளார். ஆனால், திருமண செலவுக்காக ராஜேஸ்வரிக்கு அவரின் தந்தை பணம் தர மறுத்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் திருமண செலவுக்கான பணத்தை தந்தையிடமிருந்து பெறுவதற்காக, ராஜேஸ்வரி குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், `திருமணச் செலவுக்காகத் தந்தை சம்பாதித்த பணத்தை மகள் பெறுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை’ எனத் தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜேஸ்வரி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

supreme court
supreme court

வழக்கு நீதிபதிகள் சஞ்சய் எஸ்.அகர்வால், கௌதம் பாதுரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் உட்பிரிவு 20-ன் கீழ், குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டி, `இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் திருமணம் ஆகாத மகள் பெற்றோரிடமிருந்து திருமணச் செலவைப் பெறலாம்' எனத் தீர்ப்பளித்துள்ளனர் நீதிபதிகள்.

1956-ம் ஆண்டின் சட்டத்தின் பிரிவு 20-ன் உட்பிரிவு மூன்றின் படி, ஒரு நபர் தன் வயதான பெற்றோரையோ, திருமணமாகாத மகளையோ பராமரிக்க முடியாவிட்டால், அந்நபரின் சொத்துகளில் இருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism