Published:Updated:

Alert: குடிச்சவங்ககூட பைக்ல போகாதீங்க; சத்தமா ஹார்ன் அடிக்காதீங்க; ஹெல்மெட் இல்லாம டபுள்ஸ் வேணாம்!

Traffic Police ( Vikatan )

தமிழக அரசின் புதுப் போக்குவரத்துச் சட்ட அரசாணை; முன்பைவிட 10 மடங்கு உயரும் அபராதக் கட்டணம்!

Alert: குடிச்சவங்ககூட பைக்ல போகாதீங்க; சத்தமா ஹார்ன் அடிக்காதீங்க; ஹெல்மெட் இல்லாம டபுள்ஸ் வேணாம்!

தமிழக அரசின் புதுப் போக்குவரத்துச் சட்ட அரசாணை; முன்பைவிட 10 மடங்கு உயரும் அபராதக் கட்டணம்!

Published:Updated:
Traffic Police ( Vikatan )
தமிழக அரசு சார்பாக இயற்றப்படும் சில சட்டங்கள் அதிரடியாகவும் இருக்கும்; சில காமெடியாகவும் இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு ‘பெண்களை பஸ்களில் சில விநாடிகள் உற்றுப் பார்த்தால்… அபராதம்’ என்றொரு சட்டம் கொண்டு வந்தார்கள். மோட்டார் வாகனச் சட்டப் பிரிவில் இப்படியொரு சட்டம் வந்ததைக் கண்டு, மீம்களால் வெச்சு செய்தார்கள் நெட்டிசன்கள்.

இப்போது, அதிரடியாக 2019–ல் மத்திய அரசால் திருத்தப்பட்டுக் கொண்டு வரப்பட்ட சட்டங்களையும் அபராதங்களையும் அரசாணை விதித்து தமிழகத்தில் இன்று முதல் அறிவித்திருக்கிறது அரசு.

* ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்… இதற்கு முன்பு வரை 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த சட்டம், இன்று முதல் 10 மடங்கு வரை அபராதக் கட்டணம் ஏற்றப்பட்டிருக்கிறது. அதாவது, 1,000 ரூபாய்.

* கூடவே தலைக்கவசம் அணியாத பில்லியன் ரைடர்களுக்கும் 1,000 ரூபாய் கட்டணம்.

* ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றால்… 10,000 ரூபாய் அபராதம்.

* ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், இன்ஷூரன்ஸ் போன்ற உரிம விவரங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால்.. 5,000 ரூபாய். (இதற்கு முன்பு 500 ரூபாய் இருந்தது.)

மாதிரி படம்
மாதிரி படம்

* சாலைகளில் பைக் ரேஸ்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை 5,000 ரூபாயும்; இரண்டாம் முறை ரூ.10,000–ம் அபராதம்.

* சிக்னலை மதிக்காமல் செல்வோருக்கு, முதல் முறை 500 ரூபாயும், இரண்டாவது முறை 1,500 ரூபாயும் அபராதம்.

* 18 வயதுக்குட்பட்ட வாண்டுகளை பைக் ஓட்டவிட்டு ஊக்கப்படுத்தும் பெற்றோர்களுக்கும் சில ஆயிரங்களில் அபராதம், கூடவே சிறைத் தண்டனையும் உண்டு.

* குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், முதல் தடவை 10,000 ரூபாய்… இரண்டாவது தடவை சிக்கினால் 15,000 ரூபாய் அபராதம். கூடவே உங்கள் அப்பாவி பில்லியன் ரைடருக்கும் அபராதம் கட்ட வேண்டும். (டாக்ஸி போன்றவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு!)

* போன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினால்… அபராதம் ரூ.10,000.

* கார்களில் சீட் பெல்ட்டை அணியவில்லை என்றால், 1,000 ரூபாய் அபராதம்.

* கார்கள், ஜீப்புகள் – அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக ஓட்டினால்… ரூ.2,000 அபராதம்.

* கனரக வாகனங்களை வேகமாக ஓட்டினால் ரூ.4,000 அபராதம்.

இது தவிர, இன்னும் சில கொசுறு அபராதங்களும் உண்டு. வாகனங்களை வெறித்தனமாக ரீ–மாடிஃபிகேஷன் செய்வது, அதிகப்படியான ஹார்ன் அடித்துக் கடுப்பேற்றுவது, பேருந்துகளில் ஃபுட்போர்டு அடிப்பது, ட்ரிப்பிள்ஸ் அடிப்பது, நம்பர் பிளேட்டுகளில் ஜிகினா வேலை செய்வது, ஆளில்லாத ரயில்வே க்ராஸிங்குகளில் பேரிகேடுக்குக் கீழே குனிந்து ஆசனம் போட்டு பைக்குடன் கடப்பது என குறும்புத்தனமான விதிமீறல்களுக்கும் அபராதங்கள் வரக் காத்திருக்கின்றன.

Traffic Police fine
Traffic Police fine

‘எதுக்குய்யா இந்தக் கடுமையான சட்டம்’ என்றால்… NCRB (National Crime Records Bureau)-வின் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் சுமார் 11,419 இறப்புகள், சாலை விபத்துகளால் மட்டும் நடந்திருக்கின்றனவாம். இதைத் தடுக்கத்தான் இப்படியொரு கடுமையான சட்டம் என்கிறார்கள்.

உத்தேசமாக, 9,18,573 சாலை விதிமீறல் வழக்குகள் தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் ரிப்போர்ட் செய்யப்பட்டிருக்கின்றனவாம். இதன் அபராதத் தொகை மட்டும் சுமார் 23 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டதாம். இன்னைக்கு இரவு 12 மணியில் இருந்து இது 10 மடங்காக உயரக் காத்திருக்கிறது.