Published:Updated:

சசிகலாவின் சொத்து பறிமுதல்... பினாமி சட்டம் என்ன சொல்கிறது?

பினாமி சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
பினாமி சட்டம்

ஒரு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரையான சிறைத் தண்டனையும் அபராதத் தொகையுடன் விதிக்கப்படும்!

சசிகலாவின் சொத்து பறிமுதல்... பினாமி சட்டம் என்ன சொல்கிறது?

ஒரு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரையான சிறைத் தண்டனையும் அபராதத் தொகையுடன் விதிக்கப்படும்!

Published:Updated:
பினாமி சட்டம்
பிரீமியம் ஸ்டோரி
பினாமி சட்டம்
பினாமி சட்டம் நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சகிகலாவின் சில சொத்துகள் மீது இந்தச் சட்டம் பாய்ந்திருக்கிறது.
சசிகலாவின் சொத்து பறிமுதல்... பினாமி சட்டம் என்ன சொல்கிறது?

1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம், 72 புதிய பிரிவுகளுடன் திருத்தப்பட்டு 2016-ம் ஆண்டு சட்டமானது. சொத்து ஒருவர் பெயரில் இருக்கும். அதன் பரிவர்த்தனைக்கான கிரயத் தொகை, பதிவுச் செலவு, முத்திரைத் தீர்வை என அனைத்தும் மற்றொரு நிழல் நபரால் செலுத்தப்பட்டு இருக்கும். கணக்கில் கொண்டுவராத, வர இயலாத அளவுக்கு மிஞ்சிய கறுப்புப் பணம் இருக்கும்போதுதான் ‘இரவல் நபர்’ என்ற பினாமி பெயரில் சொத்து பதிவு செய்யப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட அல்லது அடையாளம் காண்பிக்கப்பட்ட சொத்துகளின் உண்மை, பினாமி உரிமையாளர் இருவருக்கும் முதலில் அது குறித்த விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பிறகு, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அந்தச் சொத்தைப் பறிமுதல் செய்யவும் இந்தத் திருத்தப்பட்ட சட்டத்தில் வழிசெய்யப்பட்டுள்ளது.

பினாமி சட்டம்
பினாமி சட்டம்

பினாமியாகப் பெறப்பட்டதும், அதன் மூலமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதும் நிரூபணமானால், அந்தச் சொத்தை அரசு எடுத்துக்கொள்வதுடன், அந்தச் சொத்தின் நியாய சந்தை மதிப்பில் 25% அபராதமாகச் செலுத்தவும் நேரிடும். மேலும், ஒரு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரையான சிறைத்தண்டனையும் அபராதத் தொகையுடன் விதிக்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism