Published:Updated:

சட்டம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம்... உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு அல்ல!

சட்டப்பஞ்சாயத்து
பிரீமியம் ஸ்டோரி
சட்டப்பஞ்சாயத்து

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... 11

சட்டம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம்... உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு அல்ல!

சட்டப்பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர்... 11

Published:Updated:
சட்டப்பஞ்சாயத்து
பிரீமியம் ஸ்டோரி
சட்டப்பஞ்சாயத்து

சிவ.இளங்கோ

சட்டப் பஞ்சாயத்து வழிகாட்டும் தொடர் குறித்து வாசகர்கள் கேட்ட முக்கியமான கேள்விகளையும் அதற்கு அளித்த பதில்களையும் கடந்த இதழில் பார்த்தோம். பல வாசகர்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் நடக்கும் ஊழல்கள் குறித்துதான் கேள்வி எழுப்புகிறார்கள்.

 கூட்டுறவுச் சங்க பதிவாளர் அலுவலகத்தில் சிவ.இளங்கோ
கூட்டுறவுச் சங்க பதிவாளர் அலுவலகத்தில் சிவ.இளங்கோ

‘தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் மற்றும் பயிர்க் காப்பீட்டில் நடக்கும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதற்காகத் தகவல் பெறும் உரிமைச் சட்டம்மூலம் கேள்வி கேட்கும்போது… உச்சநீதிமன்ற வழிகாட்டல்படி மாநிலத் தகவல் ஆணையம் வழங்கிய ஓர் உத்தரவைக் காட்டி தகவல் கொடுக்க மறுக்கிறார்கள் அதிகாரிகள். கூட்டுறவுத்துறையின் இணைப் பதிவாளர் செயல்முறை ஆணைப்படி (ந.க.எண் 95879/ 2013/நி.அ1 நாள் 18/ 1/ 2014), கூட்டுறவுச் சங்கங்கள் தகவல் கொடுக்க மறுக்க முடியாது என்று நீங்கள் எழுதி இருந்தீர்கள். இதைக் குறிப்பிட்டாலும், தகவல் கொடுக்க மறுக்கிறார்கள். எப்படித் தகவல்களை வாங்குவது’ என்று பல வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டால் கொடுக்க மறுக்கக் கூடாது. அப்படி அதிகாரிகள் மறுத்தால் இச்சட்டத்தை அவர்கள் அவமதிப்பதாகும். அதிகாரிகள் காட்டும் உத்தரவு, கேரளாவில் உள்ள அரசு நிதிஉதவி பெறாத ஒரு கூட்டுறவுச் சங்கம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவாகும். ‘அரசின் நிதியை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறாத ஒரு கூட்டுறவுச் சங்கம், பொது அதிகார அமைப்பு ஆகாது. அப்படிப்பட்ட சங்கம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது’ என்பதுதான் நீதிமன்ற உத்தரவு. இது கேரளாவில் உள்ள அந்தக் கூட்டுறவுச் சங்கத்துக்கு மட்டுமே பொருந்தும். தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பொருந்தாது.

சட்டம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம்... உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு அல்ல!

கூட்டுறவுத்துறையின் இணைப் பதிவாளர் செயல்முறை ஆணையைப் பல கூட்டுறவு வங்கிகள் மறைத்து, தகவல் கொடுக்க மறுத்து வருகின்றன. இந்தச் செயல்முறை ஆணையை நடைமுறைப்படுத்தாமல் தகவல் கொடுக்க மறுக்கும் சங்க அலுவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரைச் (பொறுப்பு) சந்தித்து, கோரிக்கைக் கடிதத்தைக் கொடுத்தோம். உடனே, ‘அனைத்து மண்டலப் பதிவாளர்களுக்கும், மாவட்ட இணை, துணைப் பதிவாளர்களுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கொடுக்க அறிவுறுத்தப்படும். மீண்டும் செயல்முறை ஆணை அனுப்பப்படும்’ என்று அவர் உறுதியளித்தார். கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும் என்பது குறித்த கடிதத்தை https://bit.ly/2LwEzGb என்ற இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே, இனி ‘பசுமை விகடன்’ இதழின் வாசகர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும்போது செயல்முறை ஆணையின் நகலை இணைத்து அனுப்ப வேண்டுகிறோம். அப்போதும் தகவல் கொடுக்க மறுத்தால் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரைத் தொலைபேசி அல்லது செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அல்லது அவரது அலுவலகத்துக்குப் புகார் கடிதம் அனுப்பலாம். மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள், சட்டப்பஞ்சாயத்து இயக்க உதவி மையத்தைத் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

சட்டம்: தகவல் அறியும் உரிமைச் சட்டம்... உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு அல்ல!

1. தொடர்புக்கு: பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், 170 பெரியார் ஈ. வே.ரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 600010 தொலைபேசி: 044 28364858, 28364848

செல்போன்: 73388 50001

2. சட்டப் பஞ்சாயத்து இயக்க

உதவி மையம், செல்போன்: 76671 00100.