Published:Updated:

``கட்டாயப்படுத்தி மனைவியுடன் உறவுகொள்வது குற்றமா?" - மத்திய அரசு பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்

மனைவியின் சம்மதமின்றி அவரை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொள்வது என்பது திருமண பாலியல் வன்கொடுமையாகக் கருத வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

``கட்டாயப்படுத்தி மனைவியுடன் உறவுகொள்வது குற்றமா?" - மத்திய அரசு பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

மனைவியின் சம்மதமின்றி அவரை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொள்வது என்பது திருமண பாலியல் வன்கொடுமையாகக் கருத வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

திருமணம் செய்துகொண்டாலும் கட்டாயப்படுத்தி மனைவியுடன் உறவுகொள்வதைக் குற்றமாக அறிவிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் அத்துமீறல்கள் அதிக அளவில் நடக்கின்றன. பாதிக்கப்படும் பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களே, அத்துமீறல்களில் ஈடுபடுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்க பல்வேறு சட்டப்பிரிவுகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 375-ல், மனைவி 15 வயதுக்குட்பட்ட வராக இல்லாவிட்டால், கணவன், தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்ற விதிவிலக்கு உள்ளது.

பலாத்காரம்
பலாத்காரம்

இந்நிலையில், மனைவியின் சம்மதமின்றி அவரை கட்டாயப்படுத்தி கணவன் உறவுகொள்வது என்பது திருமண பாலியல் வன்கொடுமையாகக் கருத வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இதைக் குற்றச் செயலாக அறிவிக்க வேண்டும்; பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் கணவருக்கு விலக்கு தரக்கூடிய சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டுமென்று , டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவ்வழக்கில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.ஹரி ஷங்கர் மற்றும் ராஜீவ் ஷக்தேர் ஆகியோர், கடந்த மே 11-ம் தேதி இருவித தீர்ப்புகளை வழங்கினர். தனது தீர்ப்பில் நீதிபதி ராஜு ஷக்தேர் ``மனைவியின் சம்மதமின்றி கணவன் உறவு கொள்வதைக் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்; மாறாக, நீதிபதி ஹரி வழங்கிய தீர்ப்பில், ``இந்திய தண்டனைச் சட்டம் 375வது பிரிவின்படி அவ்வாறு குற்றமாகக் கருத முடியாது” என்றார்.

Court (Representational Image)
Court (Representational Image)
Image by miami car accident lawyers from Pixabay

இருவேறு தீர்ப்புகள் வந்ததை அடுத்து, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகர்த்தனா, அஜய் ராஸ்தோகி அமர்வு இதை விசாரணைக்கு ஏற்றது. வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.