Published:Updated:

சிக்னலில் ஆட்டோமேட்டிக் கேமராக்கள்... பீ கேர்ஃபுல்!

சாலைப் பாதுகாப்பு: டிராஃபிக் கேமரா தொழில்நுட்பம்

பிரீமியம் ஸ்டோரி

ஹூண்டாய்க்கு, கார் தயாரிப்பைத் தாண்டி எப்போதுமே சாலை விழிப்புஉணர்விலும் அதிகம் அக்கறை இருக்கும். அண்மையில் சென்னையில் சுமார் 3.6 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு ANPR கேமராக்களைப் பொருத்த உதவியுள்ளது ஹூண்டாய். முதல் கட்டமாக, சென்னை அண்ணாநகர், மாதவரம் போன்ற ஏரியாக்களில் சுமார் 64 சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளது தமிழக காவல்துறை.

சிக்னலில் ஆட்டோமேட்டிக் கேமராக்கள்... பீ கேர்ஃபுல்!

சிக்னலை மீறினாலோ – அதிவேகத்தில் சென்றாலோ – எல்லைக் கோட்டைத் தாண்டினாலோ – ஒன்வேயில் புகுந்தாலோ – இந்த கேமராக்கள் உங்கள் வாகன நம்பர் ப்ளேட்டை ஆட்டோமேட்டிக்காகப் படம் பிடித்து, NIC (National Informatic Centre)–க்கு அனுப்பிவிடும். நீங்கள் அடுத்த சிக்னலை வயலேட் செய்வதற்குள் உங்கள் மொபைலுக்குக் குறுந்தகவல் வந்துவிடும். நீங்கள் கோர்ட்டுக்குச் சென்று கப்பம் வேண்டியது மட்டும்தான் பாக்கி.

control room
control room

இந்த கேமராக்களை டிசைன் செய்தவர், சென்னையைச் சேர்ந்த ஆல்கோ சிஸ்டம்ஸ் நிறுவனர் அரவிந்த் பிரபு. ‘‘இதற்கு முன்பு இருந்த அதே சிசிடிவி கேமராக்களிலேயே PTZ (Pan Tilt and Zoom), RLVD (Red Light Violation Detection) போன்ற சில தொழில்நுட்பங்களைப் சேர்த்துள்ளோம். இதை NIC சர்வருடன் இன்டக்ரேட் செய்துள்ளதால், வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபட்ட அடுத்த 10 நிமிடத்துக்குள் மொபைலுக்கு மெசேஜ் அனுப்புவதுபோல் இதை டிசைன் செய்துள்ளோம்!’’ என்கிறார் அரவிந்த் பிரபு.

டிராஃபிக் கேமரா
டிராஃபிக் கேமரா

வயலேட்டர்கள் இனி வாலைச் சுருட்டிக் கொண்டு சாலைவிதிகளைக் கடைப்பிடித்தாக வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு