ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்கள் மட்டுமிருந்தால் போதாது, திறன்மிக்க நிர்வாகமும் அவசியம். இன்றைய நிலையில், நிறுவனங்களின் நிர்வாகப் பதவிகளை வகிப்பது பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எல்லோரும் ஒரே மாதிரியான அணுகுமுறையிலேயே விஷயங்களைப் பார்க்கும் நிலை உருவாகும்.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்று பார்த்த கண்காணிப்பு அமைப்புகள், ஒவ்வொரு நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் குறைந்தபட்சம் 33% பதவிகளைப் பெண்கள் வகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கோரிக்கையானது நிறைவேறாமலே இருக்கிறது. ஒரு நிறுவனத்தை நடத்தும் திறன் பெண்களுக்கு இல்லையா என்று கேட்டால், நிறையவே இருக்கிறது என்பதே பதில். இன்றைக்கு முக்கியமான பல நிறுவனங்களைப் பெண்கள் தலைமையேற்று நடத்துகின்றனர். பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஸும்தான் ஷா, டாஃபே நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மல்லிகா ஸ்ரீனிவாசன், அப்போலோ மருத்துவக் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி எனப் பலரைப் பார்க்க முடிகிறது.

இருந்தாலும் ஆண், பெண் விகிதத்தை ஒப்பிடும்போது நிர்வாகப் பொறுப்புகளில், இயக்குநர் குழுக்களில் பெண்களின் விகிதம் குறைவாகவே காணப்படுகிறது. இயக்குநர் குழுவில் பெண்கள் இடம்பெறுவதற்கு சட்டபூர்வமான வழி இருக்கிறதா என்று அறிந்துகொள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியாவின் தென் இந்திய மண்டலக் கவுன்சிலின் தலைவர் எஸ்.கண்ணனிடம் பேசினோம்.

“இந்தியாவில் 2013-ம் ஆண்டு கம்பெனிகள் சட்டம் (Companies Act 2013) கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாக இந்தியாவில் நிறுவனங்களில் பெண் இயக்குநர்களை நியமிப்பது என்ற கருத்தாக்கம் பெரிதாக இல்லை. கம்பெனிகள் சட்டம் இயற்றப்பட்ட பிறகுதான், அதில் பெண்களுக்கான ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதில் பிரிவு 149-ன்படி, ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் (Listed Companies) மற்றும் ரூ.300 கோடி டேர்ன்ஓவர் வருமானமுள்ள நிறுவனங்களில் கண்டிப்பாக ஒரு பெண் இயக்குநர் நியமிக்கப்பட வேண்டும். அவர் சுயாதீனமான இயக்குநராக (Independent Director) இருக்க வேண்டும் என்ற அம்சமும் சேர்க்கப்பட்டது.

இந்தியாவில் சுமார் 4,300 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குநர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். கம்பெனிகள் சட்டத்தின்படி, பெண் இயக்குநர்களை நியமிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய சட்டமாகும். அதேபோன்று ஒரு பெண் இயக்குநர் அந்தப் பதவியைவிட்டு அல்லது வேலையை விட்டுச் சென்றுவிட்டார் என்றால், மூன்று மாதங்களுக்குள் புதிய பெண் இயக்குநரை நியமிக்க வேண்டும்.

பெண் இயக்குநர்களைக் குறிப்பிட்ட காலத்தில் நியமிக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் தலைமைக்கு ரூ.50,000 அபராதம், மேலும் நாளொன்றுக்கு ரூ.1,000 அபராதம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, பெரும்பாலான நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்.

சில நிறுவனங்களில் உறுப்பினர்களான மனைவி, சகோதரிகள் ஆகியோரை இயக்குநர் களாக நியமிக்கின்றனர். அப்படிச் செய்வதில் தவறில்லை. அதுபோன்ற நியமனங்கள் சுயாதீனம் என்ற வரையறைக்குள் வரும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்குதான் சுயாதீன பெண் இயக்குநர்கள் நியமனம் என்ற வரையறை பொருந்தும். அதனால்தான் பிற தனியார் நிறுவனங்கள், லிமிடெட் நிறுவனங்கள் பெண் உறவினர்களையே நியமித்துக்கொள்கின்றன. குடும்பமாக அல்லது பரம்பரை பரம்பரையாக ஒரு நிறுவனத்தை நடத்தி வரும்போது குடும்பத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களை இயக்குநர்களில் ஒருவராக நியமித்துக் கொள்ளலாம். ஆனால், சுயாதீன இயக்குநராக நியமிக்க முடியாது.

பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் சுயாதீன பெண் இயக்குநர் என்றால், அந்த நபர் நிறுவனத் தலைமையின் உறவினராக இருக்கக் கூடாது; ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் பணியாற்றியிருக்கக் கூடாது; நிறுவனத்தின் வர்த்தகத்தில் தொடர்பு உடையவராக இருந்திருக்கக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. சுயாதீனமாக இயக்குநர்களை நியமிக்கும்போது மூன்றாவது நபராகப் பார்த்து நியமித்தால் நிறுவனத்தின் கொள்கை, தீர்மானங்கள், புதிய முன்னெடுப்புகள், சாதக பாதகங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதுதான் அதன் உள்ளடக்கம்.

இயக்குநர் பதவிக்கென்று பிரத்யேக கல்வித் தகுதி எதுவும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், அவர் பணியாற்றப்போகும் துறை பற்றிய அடிப்படை அறிவு, வர்த்தக நுணுக்கம் பற்றிய புரிந்துகொள்ளல் இருக்க வேண்டும்.

பெண்கள் ஏன் குறைவு?

2013-ல் சட்டம் இயற்றப்பட்டாலும் சுமார் ஐந்து ஆண்டுகளாகத்தான் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, பல்வேறு நிறுவனங்கள் பெண் இயக்குநர்கள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பட்டியலிடப் பட்ட நிறுவனங்கள், ரூ.300 கோடி மொத்த வருமானம் ஈட்டும், வருமானம் என்ற வரையறைக்குள் வராத சுமார் 12 லட்சம் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் 40-50% நிறுவனங்கள் ஆக்டிவ்வாக செயல்படாத நிறுவனமாக இருக்கும். இதுபோன்ற நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் நியமனம் என்பது வரையறுக்கப்படாமல் உள்ளது. இருந்தாலும் பல நிறுவனங்கள் பெண் இயக்குநர்களின் தேவையை உணர்ந்து அவர்களைப் பணியமர்த்தி வருகின்றனர்” என்கிறார் எஸ்.கண்ணன்.

பெண்களின் முன்னேற்றத்துக்கான சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்பட்டே வந்திருக்கின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.