வெளியிடப்பட்ட நேரம்: 07:12 (10/11/2017)

கடைசி தொடர்பு:10:53 (10/11/2017)

மற்றவர்கள் 'முடியாது' என்று சொன்னதை நீ்ங்கள் முடியுங்கள்... அது பேரானந்தம்! # FridayMotivation

உலகத்தில் இன்றைக்கு எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிகின்றன. ஆனாலும், எல்லோராலும் எல்லா விஷயங்களையும் ஃபாலோ பண்ண முடிவதில்லை. அதற்குக்  காரணம் என்னவென்று பார்த்தோம் என்றால், நாம் எந்தவித ஹோம் ஒர்க்கும் செய்யாமல் அந்த நாளை அணுகுவதுதான். #FidayMotivation

Motivation

காலையில் எழுந்திருக்கும்போதே, 'அன்றைய நாளில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும்' என ஒரு லிஸ்ட் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக அன்றைய தினம் 7 வேலைகள் செய்யவேண்டியிருந்தால், அவற்றை அப்படியே எழுதிக்கொள்ள வேண்டும். அந்த 7 வேலைகளில் எது முக்கியம் என்று வரிசைப்படுத்தி  'செகண்ட் லிஸ்ட்' தயாரிக்க வேண்டும்.

செகண்ட் லிஸ்ட்தான் ரொம்பவும் முக்கியம். முதலில் எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்ய வேண்டும். அடுத்தடுத்து இரண்டாவது வேலை 3 - வது வேலை என்று செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அந்த நாள் சிறப்பானதாக அமையும். இப்படி ஒவ்வொரு நாளையும் சிறப்பாகச் செய்தால் நிச்சயம் வெற்றிகள் நம் விலாசம் தேடி வரும். அதைத் தேடி நாம் போக வேண்டிய அவசியமிருக்காது. 

''ஒவ்வொரு நாள் காலையிலும் நம்மைத் தேடி இரண்டு விருந்தினர்கள் வருகிறார்கள். ஒருவர் நேர்மறை எண்ணம் கொண்டவர், இன்னொருவர் எதிர்மறை எண்ணம் கொண்டவர். இவர்களில் நாம் யாரை வரவேற்கிறோமோ, அதன்படியே அந்தநாள் பயணிக்கும்'' என்று சொல்வார்கள்.   
 உலகின் ஆகச்சிறந்த தன்னம்பிக்கையாளர்களில் முக்கியமானவர் ஷிவ் கேரா. இவரது தன்னம்பிக்கை கட்டுரைகள் அடங்கிய நூல்கள் 20 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. அவரது குட்டிக்கதைகள் நமக்கு வலிவும் பொலிவும் தரக்கூடியவை.

மனநிலையின் முக்கியத்துவம்
ஒரு சந்தையில் பலூன்களை விற்றுப் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை எனப் பல வண்ண பலூன்கள் இருந்தன. வியாபாரம் மந்தமாகும் நேரங்களில் எல்லாம் வானத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் ஒன்றைப் பறக்க விடுவார். அது மேலே எழும்பிச் செல்வதைப் பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் பலூன் வாங்க ஆசைப்படுவார்கள். அவர்கள் உடனே  அவரிடம் ஓடி வந்து பலூன்களை வாங்குவார்கள். அதனால், அவரது விற்பனை மீண்டும் உயரும். நாள் முழுவதும் அவர் இது மாதிரியே செய்வார். அவருக்கும் வியாபாரம் நன்றாக நடக்கும்.  

ஒரு நாள், அவரது சட்டையை யாரோ பின்னால் இருந்து பிடித்து இழுப்பது போன்று உணர்ந்து திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அவன், ''நீங்கள் ஒரு கறுப்பு பலூனை விட்டால் அந்த பலூன்கூட இதேபோல பறக்குமா?'' என்று அவரிடம் கேட்டான்.  

அக்கேள்வியில் உள்ள அர்த்தத்தை உணர்ந்து நெகிழ்ந்த அவர், ''மகனே! இந்த பலூன் மேலெழும்பிச் செல்வதற்கு இந்த பலூனின் வண்ணம் காரணமில்லை. மாறாக அதற்கு உள்ளே என்ன உள்ளதோ அதுவே காரணமாகும்'', என்று பரிவுடன் பதில் சொன்னார். 

இந்தக் கதையைப் போல் ஒவ்வொருவரையும் அவரவர் எண்ணங்களே தீர்மானிக்கின்றன. அவர்களை உயர்த்துகின்றன. ஒவ்வொரு நாளையும்  நாம் எப்படி அணுகுகிறோமோ அப்படியே அமைகின்றது.

வெற்றிக்கு வழிகள் பத்து:

* எந்த வேலையைச் செய்தாலும், ஒரு சமயத்தில் ஒரே வேலையை மட்டும் முழுகவனத்துடன் சிறப்பாகச் செய்யுங்கள்.

* உங்களுடைய பிரச்னைகள், உங்களை நோக்கி வரும் பந்துகள். அவை எப்படி வருகின்றன என்பதை கணித்து அதற்கேற்ப  எதிர்கொள்ளுங்கள். 

*  உங்கள் காதுகளுக்குச் சொல்லப்படும் தகவல்களை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு, அதன் பிறகு செயல்படத் தொடங்குங்கள். 

* மற்றவர்கள்  உங்களிடம் பேச நினைக்கும்போது, அவர்களை முழுவதும் பேசவிடுங்கள்.

* எல்லாச் சூழ்நிலைகளிலும், மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

* தவறுகளைத் திறந்தமனதுடன் ஒப்புக்கொண்டு, அவற்றைக் களைவதற்கு முயலுங்கள்.

* சிரமமில்லாத வாழ்க்கை வேண்டுமென கடவுளிடம் வேண்டாதீர்கள். எந்தச் சிரமத்தையும் எதிர்கொள்ளும் வலிமையை இறைவன் தர வேண்டுமென வேண்டிக்கொள்ளுங்கள்.

* நீங்கள் எங்கே இருந்தாலும், அங்கே உள்ளவர்கள் உங்களிடம் பழக ஆர்வம்கொள்ளும் வகையில் நடந்து கொள்ளுங்கள்.  

* பலமுள்ள சிங்கத்தால் மரம் ஏற முடியாது. குறும்புத்தனமுள்ள அணில் மரம் ஏறும். எவ்வளவு சிறியவராக இருந்தாலும், நம் செயல்களால் சிறந்தவர்களாக முடியும். 

* 'உங்களால் முடியாது' என்று மற்றவர்கள் சொன்னதைச் செய்து முடிக்கும்போது கிடைக்கும் பேரானந்தம் தனித்துவமானது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க