Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்களைப் போல பெண்கள் ஏன் தங்கள் காதல் தோல்வியை வெளிப்படையாகப் பேசுவதில்லை?

ண்களைப் போல பெண்கள் எப்போதுமே பொதுவெளியில் தங்கள் காதல் தோல்வியை உரக்கச் சொல்வதில்லை. ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா ஆண்களே..? 

காதல்

''நான் பத்தாவது படிக்கிறப்போ என் டியூஷன் மிஸ்ஸோட பொண்ணை லவ்வோ லவ்வு. என்ன, அந்தப் பொண்ணு அப்ப காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர் படிச்சிட்டிருந்தா. அப்புறம் லீவுக்கு எங்க பாட்டி வீட்டுக்குப் போறப்போ, பக்கத்து வீட்ல ஒரு பொண்ணு. அவள நான் பார்க்க, என்னை அவ பார்க்க... ஸ்கூல் ஃபைனல்ல ஆரம்பிச்ச காதல் காலேஜ் செகண்ட் இயர் வரைக்கும் தொடர்ந்துச்சு. ஃபைனல் இயர் படிக்கிறப்போ அவளுக்குக் கல்யாணமாகிடுச்சு. எனக்கு அரியர்ஸ்தான் மிச்சம். ப்ச், ஊருக்குப் போறப்போ எல்லாம் அவளைப் பார்க்கிறப்போ மனசுல பழசெல்லாம் அப்படியே ஓடும். ம்ஹூம்..!''

ஆண் நண்பர்கள் நாலைந்து பேர் டீ பிரேக், லன்ச் பிரேக், அவுட்டிங் என்று ஒன்றாகச் சேர்ந்து சென்றால், அந்தச் சிறு கூட்டத்தில்  மேலே சொன்னதுபோல தன்னுடைய காதல் தோல்விகளைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்வதிலோ, வலிக்க வலிக்க சொல்வதிலோ நிபுணனான ஆண் ஒருவன் நிச்சயம் இருப்பான். இப்படி தன் காதலைச் சிரிக்கும்படிகூட வேண்டாம், வலிக்கும்படியாகவாவது ஒரு பெண் பொதுவெளியில் பகிரக் கேட்டிருக்கிறீர்களா..? 

லவ்

சரி, மேலே சொன்னது போலவே பெண்கள் தங்கள் காதல் தோல்விகளைச் சொன்னால் எப்படியிருக்கும்..? ட்ரை பண்ணிப் பார்க்கலாமா..!?

''நான் காலேஜ் படிக்கிறப்போ என் ட்யூஷன் மிஸ்ஸோட பையனை லவ்வோ லவ்வு. என்ன அந்தப் பையன் அப்போ ப்ளஸ் டூ படிச்சிட்டிருந்தான்.''

''லீவுக்கு எங்க பாட்டி வீட்டுக்குப் போறப்போ, பக்கத்து வீட்ல ஒரு பையன். அவனை நான் பார்க்க, என்னை அவன் பார்க்க... ஸ்கூல் ஃபைனல்ல ஆரம்பிச்ச காதல் காலேஜ் செகண்ட் இயர் வரைக்கும் தொடர்ந்துச்சு. ஃபைனல் இயர் முடிஞ்சதும் அவங்க அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர்னு ஊரைவிட்டே போயிட்டான். எனக்கு அரியர்ஸ்தான் மிச்சம். ப்ச், ஊருக்குப் போறப்போ எல்லாம் அவனைப் பார்க்கிறப்போ மனசுல பழசெல்லாம் அப்படியே ஓடும். ம்ஹூம்..!"

என்ன படித்துவிட்டீர்களா? ஓர் ஆண் தன் தோற்ற காதலைப் பற்றிச் சொல்லும்போது வருகிற அதே உணர்வு, ஒரு பெண் சொல்லும்போதும் வருகிறதா? காதல் உணர்வும் சரி, காதலில் தோல்வியுற்ற உணர்வும் சரி, ஆணுக்கு ஒரு மாதிரியும், பெண்ணுக்கு ஒரு மாதிரியும் என இங்கு இயற்கை படைக்கவில்லை. கண்ணீரும் ரத்தமும்போல... உலகமெல்லாம் அன்பு ஒரே சுவைதான்.

லவ்

காதலில் தோல்வியுற்ற ஓர் ஆணின் அடுத்த காதலியோ அல்லது மனைவியோ அந்த ஆணின் லவ் ஃபெயிலியரை ஒரு சம்பவமாகவோ அல்லது அவனுடைய இறந்த காலத்தின் வலியாகவோ மட்டும்தான் பார்க்கிறார்கள். ஆனால், ஓர் ஆணின் மனமோ, 'லவ்னா..? முத்தம், செக்ஸ்னு லிமிட் கிராஸ் பண்ணியிருப்பாளா?' என்று, ஒரு பெண்ணின் காதலையும் சரி, அதன் தோல்வி தந்த வலியையும் சரி, அவள் உடல்மேல் மட்டும்தான் ஏற்றிப் பார்க்கிறது. 

நீங்கள் உணராத பெண்ணின் மாதவிடாய் வலியைப் பற்றியும், பிரசவ வலியைப் பற்றியும் சமூக வலைதளங்களில் பக்கம் பக்கமாகப் பேசுகிற, எழுதுகிற எங்கள் தோழன்களே, என்றைக்குப் பெண்களின் காதல் தோல்விகளில் எங்கள் ஒழுக்கத்தை ஆராயாமல், அதன் வலிகளைப் புரிந்துகொள்ளும் வெளிக்கு வரப்போகிறீர்கள்?! 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

நீங்கள் கீழே விழுபவரா, கெட்டியாகப் பற்றிக்கொள்பவரா? - பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை! #MotivationStory
Advertisement

MUST READ

Advertisement