வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (03/05/2018)

கடைசி தொடர்பு:12:25 (03/05/2018)

ஹேர் ஸ்ட்ரேய்ட்னர், கர்லர்... முறையாக உபயோகப்படுத்தினால் முடி கொட்டாது! #HairCare

கொப்பரைத் தேங்காயை (காய்ந்த தேங்காய்) அரைத்து, அதை அப்படியே தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குளித்தால் கூந்தல் பட்டுப் போல ஜொலிக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.   

ஃப்ரீ ஹேர்

நயன்தாராவின் பன் ஹேர்ஸ்டைல், 

நீர் வீழ்ச்சியைத் தோளில் போட்டதுபோல ஸ்ட்ரேய்ட்னிங் செய்யப்பட்டக் கூந்தல், 

கடல் அலைகளை கை நிறைய  அள்ளி கழுத்தோரம் வழிய விட்டதுபோல கர்லி செய்யப்பட்டக் கூந்தல், 

 பட்டுத் துணியை தோளில் போட்டது போன்ற க்ரிப்பர் ஸ்டைல்

தலையைச் சரியாக வாராமல் பின்னலிட்டது போன்ற ஹேர்ஸ்டைல்கள் என ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு ஹேர்ஸ்டைல் பிரபலமாகி வருகிறது. கூந்தலை பேக் கோம் அல்லது ஹீட்டரால் மாற்றினால் நமக்கு விருப்பப்பட்ட ஹேர்ஸ்டைலைப் பெற முடியும். ஹீட்டரால் மாற்றப்படும்போது கூந்தல் அதன் தன்மையை நிச்சயம் இழக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

ஹேர்

''தலைமுடியைப் பின்னால், க்ளிப் குத்தாமல் அப்படியே விடுகிற ஃப்ரீ ஹேர்ஸ்டைல்தான் சில காலங்களாக ட்ரெண்டாக இருக்கிறது. வசுந்த்ராமுடியை ஃப்ரீயாக விரித்துவிடும் முன், உங்கள் தலைமுடி எண்ணெய்ப்பசை தன்மை கொண்டதா அல்லது வறண்டக் கூந்தலா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்கள் தலைமுடியின் தன்மைக்கேற்ற ஷாம்புவை பயன்படுத்தி, முடியைச் சுத்தம் செய்து கண்டிஷனர் செய்த பிறகே ஃப்ரீ ஹேர்ஸ்டைல் விட வேண்டும். கண்டிஷனர் செய்யப்படாத கூந்தலை ஃப்ரீ ஹேராக விரித்துவிடும்போது முடி வறண்டு சிக்கலுக்குள்ளாகும். முடியின் அடிப்பகுதி சிக்காகி சீவும்போது அவை உடையக்கூடும். இறுதியாகக் கொத்து கொத்தாக உதிர ஆரம்பிக்கும். எனக்கு கெமிக்கல் கண்டிஷனர் எல்லாம் ஒத்துக்காதே என்பவர்கள், கொப்பரைத் தேங்காயை (காய்ந்த தேங்காய்) அரைத்து, அதை அப்படியே தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குளித்தால் கூந்தல் பட்டு போல ஜொலிக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.   

நயன்தாராவின் பன் ஹேர்ஸ்டைல் ட்ரை பண்ணாத பெண்களே இல்லை. நீண்ட முகம் கொண்ட பெண்களுக்கும், பெரிய நெற்றி கொண்ட பெண்களுக்கும் இந்த ஹேர்ஸ்டைல் பொருந்தாது. இவர்கள் பன்னை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி வைத்தால் ஓ.கே.வாக இருக்கும். சீப்பால் பேக் கோம்ப் செட் செய்ய நினைத்தால் தலைமுடியில் சிக்கு விழும். அதற்குப் பதில், கடைகளில் கிடைக்கும் 'ஃபிரன்ட் பஃப்' கொண்டு தலையின் முன் செட் செய்து அதன் மேல் உங்கள் தலைமுடியால் மூடினால் பேக் கோம்ப் ரெடி. இப்படிச் செய்தால் முடி கொட்டாது. பஃப் உபயோகப்படுத்தாமல் சீப்பால் தலைமுடியை பஃப் போல செய்பவர்கள், அதை இரவு கலைக்கும்போது தலையில் எண்ணெய் தடவிவிட்டு பிறகு சீப்பால் வாரினால் சிக்கு வராது.

முடி

ஸ்ட்ரேய்ட்னிங் செய்ய விரும்பும் பெண்கள், நேரடியாக ஐயர்ன் ராடு மெஷினை தலைமுடியில் பயன்படுத்தாமல், அதற்கு முன்னால் முடியில் ஸ்ட்ரேய்னருக்கான க்ரீம், லோஷன் அல்லது ஸ்பிரேவை அப்ளை செய்வது முடிக்கு நல்லது. ஏனென்றால் ஐயர்ன் ராடின் ஹீட் 220 டிகிரி சென்டிகிரேட். இதை நேரடியாக முடியில் உபயோகப்படுத்தும்போது, ஒவ்வொரு தடவையும் 100 முடிகள்வரை கொட்டி விடும். 

முடியைச் சுருட்டி 'கர்லியாக்க' விரும்புகின்ற பெண்களும், கர்லரை பயன்படுத்துவதற்கு முன்னால் க்ரீம், லோஷன் அல்லது ஸ்பிரேவை முடியில் அப்ளை செய்தால் முடி அழகாகச் சுருளுமே தவிர, முறிந்து விழாது. க்ரீப்பர் ஹேர்ஸ்டைலுக்கும் மேலே சொன்ன வழிமுறைகளை ஃபாலோ செய்வதுதான் முடியின் ஆயுசுக்கு நல்லது

 மெஸி ஹேர்ஸ்டைல் என்பது அழகாக ஜடை போட்டுவிட்டு அதைக் கவனமாக கலைத்து விடுகிற ஹேர்ஸ்டைல் இது. அப்படிக் கலைத்துவிடும்போது, சிக்கு விழுகிற அளவுக்குக் கலைத்துவிடாதீர்கள். இந்த ஹேர்ஸ்டைலைச் செய்தவர்கள் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், முடியை நன்கு சீவி சிக்கெடுத்தப் பிறகு உறங்கச் செல்லுங்கள். கூந்தல் எப்போதும் அடர்த்தியாக, அழகாக இருக்கும்...


டிரெண்டிங் @ விகடன்