விற்பனைக்கு வந்தது டாடா டிகோர் Buzz edition

மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. எல்லாமே காஸ்மெடிக் அப்டேட்டுகள்தான்.

டாடாவின் டிகோர் காம்பாக்ட் செடான் விற்பனைக்கு வந்து ஒரு ஆண்டு முடிந்துள்ளதால் டிகோர் காரில் Buzz எனும் லிமிடட் எடிஷனை வெளியிட்டுள்ளது டாடா. XT வேரியன்டில் வரும் இந்த எடிஷன் ரூ.5.68 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ.6.57 லட்சம் (டீசல்) எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

டாடா டிகோர் Buzz

கிளாஸி பிளாக் ரூஃப், பியானோ பிளாக் நிற மிரர்கள், டூயல் டோன் வீல் கவர், முன்பக்க க்ரில்லில் சிவப்பு நிற வேலைப்பாடுகள் போன்றவை வெளிப்புற மாற்றங்கள். லிமிடட் எடிஷன் மெட்டல் பேட்ஜும் பொருத்தப்பட்டுள்ளது. காரின் உள்பக்கத்தில் ஏசி வென்டுகளை சுற்றிச் சிவப்பு வண்ணமும், முன்பைவிட விலைஉயர்வான சீட் கவர்களும் மாற்றங்களாக இடம்பெற்றுள்ளன. 

Tata Tigor Buzz Interior

மெக்கானிக்கலாக காரில் எந்த மாற்றமும் இல்லை. 85bhp பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ரெவட்ரான் பெட்ரோல் இன்ஜினும், 70bhp பவர் தரும் ரெவ்டார்க் டீசல் இன்ஜினும் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த காரில் உள்ளது. இதே காரை அடிப்படையாகக் கொண்ட ஹேட்பேக் மாடலான டியாகோவின் விற்பனைக்கு இணையாக டிகோர் விற்பனையாகவில்லை என்பதால், லிமிடட் எடிஷன் மாடல்களை வெளியிட்டு கார்களின் விற்பனையை உயர்த்த முயற்சிசெய்து வருகிறது இந்நிறுவனம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!