வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:25 (07/07/2018)

பல வகை பலாசோ... யார் யார் பயன்படுத்தலாம்?! - ஸ்டைலிஸ்ட் டிப்ஸ்

பலோசோவில் நிறைய வகைகள் இருக்கின்றன. அதில் நமக்குப் பொருத்தமானவற்றைச் சரியாகத் தேர்வு செய்தால் டிரண்டு செட்டராகத் திகழலாம்.

பல வகை பலாசோ... யார் யார் பயன்படுத்தலாம்?! - ஸ்டைலிஸ்ட் டிப்ஸ்

பலாசோ டிரெண்டு பெண்களிடம் குறையவில்லை. டிரெண்டி லுக், ஈஸி கேரிங் என்பதே பலாசோ அணியும் இன்றைய பெண்களின் கருத்து. ஆனால், பலாசோ அறிமுகமில்லாத பல பெண்களுக்கு அவற்றைப் பார்க்கும்போதே... அச்சோ... உயரம் கம்மியா இருக்கிற நமக்கெல்லாம் இது செட் ஆகாது போல' என்கிற நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியாது.

ஆனால், பலாசோ ஒல்லியான, பருமனான, உயரம் குறைவான என அனைத்துப் பெண்களும் அணியலாம் என்கிறார் ஸ்டைலிஸ்ட் கல்பனா ஜானு. பலாசோவை அணிவதற்கு முன்பு அதைப் பற்றிய டிப்ஸ்களைத் தருகிறார் கல்பனா.

``பலாசோவில் நிறைய வகைகள் இருக்கின்றன. அதில் நமக்குப் பொருத்தமானவற்றைச் சரியாகத் தேர்வு செய்தால் டிரெண்டு செட்டராகத் திகழலாம். சில வகை ஆடைகளை மிக்ஸ் மேட்ச் மூலம் நமக்குப் பொருந்தும் வகையில் அணியலாம். அந்த மிக்ஸ் மேட்ச் செய்கிற டெக்னிக் மட்டும் தெரிந்திருந்தால் போதும்'' என்கிறார் கல்பனா

பலாசோ சூட்ஸ்: (  palazzo suits)

ஃப்ரீ ஃபிட்டிங்கில் இருக்கக்கூடிய பலாசோ சூட்ஸ் உயரமாக இருக்கிற பெண்களுக்கு மட்டும் பொருந்தும். மேலாடையாக காட்டன் சல்வார்களை இதற்கு அணியலாம். ஜீட்டிஸ் (juttis) கோலாபூரி (kolhapuri) வகையான காலணிகள் இந்த உடைக்கு ஸ்டன்னிங் லுக் கொடுக்கும். ஃப்ரீ ஹேர்ஸ்டைல், ஆக்ஸிடைஸ்டு ஜுவல்லரி மாஸ் லுக் கொடுக்கும். பலாசோவுடன் டிரெண்டி சல்வார் டாப்ஸைத் தேர்ந்தெடுத்தால் பார்டிகளுக்குச் செல்ல அருமையான உடையாக இருக்கும். 

பலாசோ ஃபேஷன்

 

க்ளாட்ஸ் பலாசோ ; (Culottes palazzo)

அலுவலகத்துக்கும் அணிந்து செல்லும் வகையிலான ஃபார்மல் டைப் பலாசோக்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். இதற்கு மேலாடையாக உயரமான பெண்கள் ஸ்ர்க்( shrug), உயரம் குறைவான பெண்கள் கிராப் டாப்புடன் (crop top)மிக்ஸ் மேட்ச் செய்து அணியலாம். வெட்ஜஸ் (wedges)வகையான காலணிகள் இதற்குப் பக்காவாக இருக்கும்.

பலாசோ ஃபேஷன்

ஸ்ட்ரைட் கட் பலாசோ:( stright cut palazzo)

ஸ்ட்ரைட் கட் பலாசோவுக்கு குர்தாக்கள் பொருத்தமாக இருக்கும். உயரமான பெண்கள் லாங் டைப் ஸ்லிட் குர்தாவுடனும் உயரம் குறைவான பெண்கள் ஷார்ட் குர்தாக்களுடன் அணிந்தால் நீட் லுக் கிடைக்கும். கோலாபூரி காலணிகள் அணிந்து, ஹை போனிடெயில் ஹேர்ஸ்டைல் செய்து கொண்டால் ஸ்மார்ட் லுக்கில் கலக்கலாம். லாங் நெக் பீஸ், லாங் இயரிங்ஸ் பொருத்தமாக  இருக்கும்.

பலாசோ ஃபேஷன்

பூட் கட்  பலாசோ: (boot cut palazzo)

உயரமான ஒல்லி - பெல்லி பெண்களுக்கு பூட் கட் பலாசோக்கள் டிரெண்டு அண்டு மாஸ் லுக் கொடுக்கும். ஷார்ட் சர்டுகள், கிராப் டாப், பிளேசர்கள் போன்றவற்றை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். ஹை-பன் ஹேர் ஸ்டைல் நியூ லுக் கொடுக்கும். பலாசோவின் நிறத்துக்கு ஏற்ப ஷூக்களை தேர்வு செய்து அணியலாம்.

பலாசோ ஃபேஷன்

ட்ரவுசர் பலாசோ:(  Trouser palazzo)

90's லுக் கொடுக்கும் ட்ரவுசர் பலாசோக்கள் உயரமான ஒல்லியான பெண்களுக்குப் பொருத்தமாக இருக்கும். ஷெர்வாணி மெட்டீரியல் டிசைனர் டாப்களை இதற்கு மிக்ஸ் மேட்ச் செய்து கொள்ளலாம். மியூல்ஸ்( mules) வகை காலணிகள் பர்ஃபெக்ட் தேர்வாக இருக்கும். ஹை - பொனிட்டெயில் டிரண்டி லுக் கொடுக்கும்.

ஸ்கர்ட் டைப் பலாசோ:

உயரமான, உடல் பருமனான பெண்கள் ஸ்லிட் டைப் குர்தா, கிராப் டாப் அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.ஹை - பன் ஹேர் ஸ்டைல், எத்னிக் காலணிகள் அணிந்தால் சூப்பரான அவுட்ஃபிட்டில் நீங்கள் கலக்கலாம்.

பலாசோ

 

ஃப்ளார்டு பலாசோ: (  flared palazzo)

உயரமான பெண்களுக்கு மட்டும் இதுபொருந்தும். இவ்வகை பலாசோ பேன்ட்களுக்கு ஸ்பெகட்டி (sphagetti) டேன்க் டாப் ( (tank top) போன்றவற்றை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். ஜூட்டிஸ் (juttis)டைப் காலணிகள் இதற்குப் பக்கா மேட்ச். லாங் நெக் பீஸ் வகைகள் பொருத்தமாக இருக்கும்.

பலாசோ ஃபேஷன்

அப்புறமென்ன... இனி நீங்களும் பலாசோ அணிந்து அதகளம் செய்யலாம். 


டிரெண்டிங் @ விகடன்