காட்டன் குர்தா,மல்டி கலர்ஸ்,சிம்பிள் அக்ஸசரீஸ் 'சின்னத்தம்பி' பவானி ரெட்டியின் ஃபேஷன் பக்கங்கள்! | TV actress pavani reddy reveals her fashion style!

வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (21/07/2018)

கடைசி தொடர்பு:17:03 (21/07/2018)

காட்டன் குர்தா,மல்டி கலர்ஸ்,சிம்பிள் அக்ஸசரீஸ் 'சின்னத்தம்பி' பவானி ரெட்டியின் ஃபேஷன் பக்கங்கள்!

எல்லாமே வெஸ்டர்ன் டிரஸ்தான். `சின்னத்தம்பி' கதைக்களம் வேறு. அதுக்கு ஏற்ப சிம்பிள் குர்தாக்கள், புடவைகளைத் தேர்வுசெய்யறேன் இந்த சிம்பிள் லுக், மக்களிடம் அவங்க வீட்டுப் பெண்ணுக்கான இடத்தைப் பெற்றுத்தருது.

காட்டன் குர்தா,மல்டி கலர்ஸ்,சிம்பிள் அக்ஸசரீஸ் 'சின்னத்தம்பி' பவானி ரெட்டியின் ஃபேஷன் பக்கங்கள்!

சின்னச் சின்ன எக்ஸ்பிரசன் மூலம் மக்கள் மனதைக் கொள்ளையடித்தவர், `சின்னதம்பி' சீரியலின் பவானி ரெட்டி. `ஆபீஸ்', `ரெட்டைவால் குருவி', என ஒவ்வொன்றிலும் பவர்ஃபுல் கேரக்டர்களில் அசத்துபவர். சிம்பிள் அணி நீட் லுக்கில் கலக்கும் இவரின் வார்ட்ரோப் பற்றி பகிர்கிறார்...

ஆடைத் தேர்வு:

நான் எப்பவும் இதுதான் என் டிரஸ்ஸிங் ஸ்டைல்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டது கிடையாது. அப்போதைய மனநிலைக்கு ஏற்ப ஆடைகளைத் தேர்வுசெய்வேன். வெஸ்டர்ன் டைப் டிரஸ்ஸில் என்னை கம்பர்டபிளா ஃபீல் பண்றேன். ஆனாலும், புடவைகள் ரொம்பப் பிடிக்கும். எல்லா வகை புடவைகளின் கலெக்‌ஷன் இருக்கு. சீரியலில் என் கேரக்டருக்கு என்ன மாதிரியான ஆடைகள் பொருந்துமோ, அதையே தேர்வுசெய்யறேன். `ஆபீஸ்' சீரியலில் எல்லாமே வெஸ்டர்ன் டிரஸ்தான். `சின்னத்தம்பி' கதைக்களம் வேறு. அதுக்கு ஏற்ப சிம்பிள் குர்தாக்கள், புடவைகளைத் தேர்வுசெய்யறேன் இந்த சிம்பிள் லுக், மக்களிடம் அவங்க வீட்டுப் பெண்ணுக்கான இடத்தைப் பெற்றுத்தருது.

அக்ஸசரிஸ்:

Pavani reddy

எனக்கு வாட்ச் என்றால், கொள்ளைப் பிரியம். நிறைய கலெக்‌ஷன்கள் வெச்சிருக்கேன். ஷாப்பிங் போகும்போதெல்லாம் கண்ணுக்கு அழகாகச் சிக்கும் அக்ஸசரிஸை வாங்கிடுவேன். அது எந்த ஆடைக்குப் பொருந்துமோ, அதுக்கு மிக்ஸ் மேட்ச் செய்துப்பேன். இன்னும் சில நகைகள், மேட்சான ஆடைகளுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கு. சீரியலில் சிம்பிளான ஜிமிக்கி வகைகள், பாலி கம்மல்களை தேர்வுசெய்து அணிகிறேன்.

நிறத் தேர்வு:

அதிக நிறங்களோடு இருந்தால், நம் மனமும் வண்ணமயமாக இருக்கும் என்பது என் எண்ணம். அதனால், இந்த நிறம்தான் என இல்லாமல், எல்லா நிறமும் பிடிக்கும். என் வார்ட்ரோப்பில் எல்லா நிறங்களுக்கும் இடம் உண்டு. மனநிலைக்குத் தகுந்த நிறங்களைத் தேர்வுசெய்வேன். சீரியலிலும் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. எபிசோடுகளில் சூழ்நிலைக்குத் தகுந்த வண்ண ஆடைகளைத் தேர்வுசெய்து அணிவேன்.

பவானி ரெட்டி

 

டிசைனிங்:

எனக்கான ஆடைகளை நானே டிசைன் செய்துப்பேன். எது பொருத்தமாக இருக்கும் என எனக்கு நல்லாவேத் தெரியும். அதை மற்றவர்களுக்குப் புரியவெச்சு நாம் நினைச்ச மாடலை கொண்டுவருவது கஷ்டம் என நானே எனக்கு டிசைனர் ஆகிட்டேன். அதில் ஒரு திருப்தியும் இருக்கு.

ஷாப்பிங்:

சாதாரண சிறிய கடைகளில் ஷாப்பிங் செய்வது எனக்குப் பிடிச்ச விஷயம். கொஞ்சம் தேடினால், நிறைய யூனிக் டிசைன்களை சாதாரண கடைகளிலேயே பார்க்கலாம். நாம் தேர்வுசெய்யும் விதத்தில்தான்  இருக்கு. சில ஆடைகள் பார்த்ததுமே மனசுக்கு ரொம்பப் பிடிச்சுடும். உடனே பில் போட்டு வாங்கிடுவேன். அதை, சில வருடங்கள் கழிச்சும் மிக்ஸ் மேட்ச் செய்து பயன்படுத்துவேன். இப்போ என்ன டிரெண்டு  எனப் பார்க்க மாட்டேன். எப்பவும் சிம்பிள் அண்டு நீட் லுக் நம்ம ஸ்பெஷல்.

செலிபிரெட்டி டிரஸ்ஸிங்:

மத்தவங்க டிரஸ்ஸிங்கைப் பார்த்து இமிடேட் செய்யறதை எப்பவும் பண்ண மாட்டேன். ஆனால், மற்றவர்களின் ரசனையை ரசிச்சுப் பாராட்டுவேன். அந்த வகையில் என் மனதைக் கொள்ளையடிச்ச செலிபிரெட்டி, தீபிகா படுகோன். எந்த டிரஸ் போட்டாலும், அவங்களின் மெனக்கிடல் தெரியும். அதுதான் அவங்களுக்கு நிறைய ரசிகர்களைப் பெற்றுக்கொடுக்குது.

ஃபேவரைட்  டிரஸ்:

எனக்குச் சின்ன வயசிலிருந்தே ஃப்ளோயிங் கவுன்ஸ் பிடிக்கும். நிறைய கவுன் கலெக்‌ஷன் வெச்சிருந்தேன். இப்பவும் கவுன்ஸ் மீது தனி ஈர்ப்பு இருக்கு.

பவானி ரெட்டி

ஆன்லைன் ஷாப்பிங்:

ஆன்லைனில் நிறைய மாடல் இருக்கும். நானும் நிறைய டைம் ஆர்டர் பண்ணியிருக்கேன். ஆனால், அளவும் கலரும் அடிக்கடி மாறியே வரும். அதை ஆல்டர் பண்றதுக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருக்கு. ஸோ, அக்ஸசரிஸை மட்டும் ஆன்லைனில் வாங்குவது பெஸ்ட் சாய்ஸ். நிறையப் புது மாடல்களைப் பார்த்து வாங்கலாம்.

மேக்கப்:

ஆபரணங்கள்

அதிகமான மேக்கப் செய்துக்க எனக்குப் பிடிக்காது. எனக்கான மேக்கப்பை, நானே லைட்டாகச் செய்துப்பேன். ஃப்ரீ ஹேர்ஸ்டைலே என் ஆல்டைம் ஃபேவரைட்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close