வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (13/08/2018)

கடைசி தொடர்பு:14:54 (13/08/2018)

பேட்டர்ன் பிளவுஸ் முதல் டிசைனர் புடவை வரை... பிசினஸ் வெற்றியைச் சொல்லும் இளவஞ்சி

`எந்த விஷயத்தை நம்மால் ரசிக்க முடியுதோ, அதில்தான் நம் தனித்துவமும் ஒளிந்திருக்கும். அப்படி நான் ரசித்த ஃபேஷன்தான் இன்னைக்கு என்னுடைய அடையாளமாக மாறியிருக்கு.

``ந்த ஆடையில்தான் நாம அழகுன்னு ஒரு கம்ப்ர்ட் ஜோனுக்குள் யோசிக்காமல், எல்லா ஆடையையும் நமக்கு ஏற்ற மாதிரி மாத்திக்க முடியும்னு யோசித்தால், நாமதான் ட்ரெண்ட் செட்டர். நம் தன்னம்பிக்கையும் வேற லெவலில் இருக்கும்" என உற்சாகமாகப் பேசுகிறார், `யோஸ்னாஸ் பொட்டிக்' உரிமையாளரான, சென்னையைச் சேர்ந்த காஸ்டியூம் டிசைனர், இளவஞ்சி. சைத்ரா, ஜனனி எனப் பல சீரியல் செலிபிரெட்டிகளுக்கு ஆடை வடிவமைப்பாளர் என்பது இவருடைய அடையாளம்.இளவஞ்சி

``எந்த விஷயத்தை நம்மால் ரசிக்க முடியுதோ, அதில்தான் நம் தனித்துவமும் ஒளிந்திருக்கும். அப்படி நான் ரசித்த ஃபேஷன்தான் இன்னைக்கு என்னுடைய அடையாளமாக மாறியிருக்கு. எனக்கான ஆடைகளில் நான் நிறைய மெனக்கிடுவேன். சின்னச் சின்ன ஜமிக்கி வேலைப்பாடுகள், ஸ்டோன் வொர்க் என ஏதாவது ஒரு ஸ்பெஷல் என் ஆடையில் இருக்கும். அந்த ரசனைதான் இன்னைக்கு என்னை ஒரு செலிபிரெட்டி டிசைனராக மாற்றியிருக்கு'' எனத் தொடர்கிறார் இளவஞ்சி.

``எனக்குச் சொந்த ஊரு காரைக்குடி. படிச்சதும் அங்கேதான். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துட்டிருந்தேன். ஐடி கம்பெனியில் பர்சனாலிட்டியில் அதிகம் கவனம் செலுத்தவேண்டி இருக்கும். என்னுடைய டிரஸ்ஸிங்கிலும் மாற்றத்தை உணர்ந்தேன். ஆனாலும், பணியில் பெருசா ஈடுபாடு உண்டாகலை. ஏதாவது புதுசா பண்ணணும்னு ஆர்வம்  இருந்தது. அதனால், துணிந்து வேலையை விட்டுட்டு எனக்கான அடையாளத்தைத் தேட ஆரம்பிச்சேன். ஆடை விஷயத்தில் எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, பொட்டிக் ஆரம்பிக்கலாமே என ஐடியா சொன்னது என் கணவர்தான்.

டிரஸ் டிசைனிங் சாதாரண விஷயமா. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட், ஒரு தனித்துவம் இருக்கும். அதையெல்லாம் நம்மால் திருப்திபடுத்த முடியுமானு தயக்கம் இருந்துச்சு. அந்தத் தயக்கத்தை உடைக்க, டிசைனிங் பற்றி அடிப்படை விஷயங்களைத் தெரிஞ்சுக்க, அடுத்தடுத்த டிப்ளோமா கோர்ஸில் சேர்ந்து படிச்சே. படிச்சுட்டிருக்கும்போதே டிரஸ் டிசைன் செய்ய ஆரம்பிச்சேன். படிப்பு முடிச்சதும் பொட்டிக் ஆரம்பிக்க களத்தில் இறங்கினேன். ஒரு பொட்டிக் திறக்க நாம் தேர்வுசெய்யும் இடம் ரொம்ப முக்கியம். அது பிசினஸின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கும். சரியான இடத்தைத் தேர்வுசெய்ய ஆறு மாசம் ஆச்சு. வேலைப்பாடுகள் செய்வதற்கு ஆறு மாசம். எதையும் அதிரடியா செய்யறதைவிட, சரியா செய்யறது முக்கியம் என்பது என் பாலிஸி. 

ஃபேஷன்

பொட்டிக் திறந்தபோது ஆரம்பத்தில், ஆர்டர் குறைவு என்பதால் நானும் பணியாளர் பெண் ஒருவரும்தான் எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டோம். இப்போ 20 பேருக்கு மேலே வேலை செய்றாங்க .டெய்லரிங், எம்ராய்டரிங், ஆரி ஒர்க், ஜமிக்கி வேலைப்பாடு என ஒவ்வொரு வேலையிலும் பெஸ்ட்டா இருக்கிறவங்களை செலக்ட் பண்ணியிருக்கேன். ஆரம்பத்தில், காலேஜ் பெண்கள்தான் எங்க ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தாங்க. அப்புறம், சீரியல் நடிகை வந்தனாவுக்கு டிரஸ் டிசைன் செய்யும் வாய்ப்பு கிடைச்சது. அவங்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஏகப்பட்ட டிசைன்களை உருவாக்கிக் கொடுத்தோம். அது அவங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப்போய் அடுத்தடுத்த வாய்ப்புகள் கொடுத்தாங்க. 

அடுத்து, சைத்ரா ரெட்டிக்கு டிசைனிங் செய்யும் வாய்ப்பு கிடைச்சது. சைத்ராவைப் பொறுத்தவரை, எந்த ஆடையையும் தனக்கு செட் ஆகாதுனு ஒதுக்கவே மாட்டாங்க. அதனால், நிறைய மாடல்கள் ட்ரையல் செய்யும் வாய்ப்பு கிடைச்சது. `யாரடி நீ மோகினி' சிரியலில் அவங்க அணிந்துவரும் பேட்டர்ன் பிளவுஸ்கள் தனித்துவமாகப் பேசப்படுது. அந்த பிளவுஸ்களுக்காகவே நிறைய ரசிகைகள் இருக்காங்க. அடுத்து, `நெஞ்சம் மறப்பதில்லை' நிஷாவுக்குத் தனித்துவமான புடவைகள் வடிவமைச்சுக் கொடுத்தோம். அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்போ பத்துக்கும் மேற்பட்ட சீரியலுக்கு டிரஸ் டிசைனிங் செய்யறோம். ஒவ்வொரு சீரியலிலும் அந்த சீரியல் கேரக்டர்களின் தன்மை, நடிகைகளின் உடல்வாகுக்கு ஏற்ப டிசைன் செய்வோம். பொட்டிக் ஆரம்பிச்ச புதுசுல நிறைய நஷ்டங்களைச் சந்திச்சேன். சில சமயம் பொட்டிக்கை மூடிவிடலாமான்னு தோணுச்சு. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி நம்மால் ஜெயிக்க முடியும்னு நம்பினேன். அந்தத் தன்னம்பிக்கை என்னை மீட்டு எடுத்துச்சு. இப்போ மாசம் 4 லட்சம் வருமானம் பார்க்க முடியுது. சீக்கிரமே சினி செலிபிரெட்டிகளுக்கும் ஆடை வடிவமைக்கணும். அதுதான் என் கனவு'' என்கீறார் இளவஞ்சி.

கடின உழைப்பின் கனவுகளுக்கு என்றும் வெற்றிதான்!


டிரெண்டிங் @ விகடன்