ஜம்ப் சூட், பலாசோ, கிராப் டாப்... கோடைக்கால ஆடைகள்... உங்களுக்கு எது பொருந்தும்?! | Palazzo, jump suit, crop top.. wat about your summer dress?

வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (18/03/2019)

கடைசி தொடர்பு:17:46 (18/03/2019)

ஜம்ப் சூட், பலாசோ, கிராப் டாப்... கோடைக்கால ஆடைகள்... உங்களுக்கு எது பொருந்தும்?!

கோடைக்காலத்தில் பெண்களுக்குத் தோதான ஆடை எது... எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்கிற டிப்ஸ்

ஜம்ப் சூட், பலாசோ, கிராப் டாப்... கோடைக்கால ஆடைகள்... உங்களுக்கு எது பொருந்தும்?!

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இனி, பெண்கள் உடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே... சரி சம்மரில் பெண்களுக்குத் தோதான ஆடை எது... எப்படித் தேர்வு செய்ய வேண்டும் டிரெண்ட் என்ன என்கிற அடிப்படைத் தகவலைத் தருகிறார் சென்னையைச் சேர்த்த ஆடை வடிவமைப்பாளர் வினோதினி.

கேஷுவல் லுக்:

சம்மர்



கேஷுவல் லுக் பிரியைகள் பலாசோ, ஜம் சூட் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். பலாசோ உங்களுடைய சாய்ஸ் எனில் உயரமானவர்கள் பிரின்டட் டிசைன்களையும், உயரம் குறைந்தவர்கள் பிளைன் பேன்ட்களையும் தேர்வு செய்தால் பொருத்தமாக இருக்கும். நீங்கள் தேர்வு செய்யும் பலாசோவை விட கான்ட்ராஸ்டான நிறத்தில் லாங் அல்லது ஷார்ட் டாப்பினை மிக்ஸ் மேட்ச் செய்தால் கூல் லுக் கிடைக்கும்.

பிரின்டட் மெட்டீரியல் ஜம்ப் சூட் கூடுதல் அழகைக் காட்டும். கேஷ்வல் ஜம்ப் சூட் எனில் பேஸ்டல் நிறங்களைத் தேர்வு செய்து அணியலாம். நீங்கள் அணியும் ஆடையின் நிறத்திற்கு ஏற்ற ஃபெதர் பேஷன் நகைகளைத் தேர்வு செய்து அணிந்தால் ஸ்மார்ட்டாக இருக்கும்.

டிரெடிஷனல் லுக் : 

டிரெண்ட்

 

கல்யாணி காட்டன், சில்க் காட்டன் போன்ற மெட்டீரியலில் ஸ்கர்ட் அல்லது சல்வார்களை வடிவமைத்துக் கொள்ளலாம் ஸ்லீவ்களிலும், ஆடையின் கீழ்ப் பகுதியிலும் சில்க் மெட்டீரியலை பார்டர் அல்லது பைப்பிங்காக வைத்து வடிவமைத்தால் சம்மரிலும் டிரெடிஷனல் லுக்கில் அசத்தலாம்.சல்வார் தேர்வு செய்பவர்கள் காட்டன் மெட்டீரியலில் ஆடையை வடிவமைத்து, சில்க் துப்பட்டாவை மிக்ஸ் மேட்ச் செய்தால் பொருத்தமாக இருக்கும்.உங்களுடைய சாய்ஸ் புடவை எனில் பிளைன் புடவைகளை தேர்வு செய்து, பிளவுஸ்களை புரொகேட் மெட்டீரியலில் டிசைன் செய்து கொள்ளலாம். சம்மரில் நீங்கள் தேர்வு செய்யும் டிரெடிஷனல் ஆடைகளுக்கு டெரகோட்டா, சில்க் த்ரெட் நகைகள் பொருத்தமான தேர்வாக இருக்கும்.


 

 

 

வெஸ்டர்ன் லுக் :

வெஸ்டர்ன் லுக் பிரியைகளுக்கு ஸ்லீவ்லஸ் ஷார்ட் கவுன் பெஸ்ட் சாய்ஸ். லாங் டிரெஸ் அணிய விரும்பும் பெண்கள் ஓவர் லேவுடன் கூடிய கிராப் டாப், குர்தி போன்றவற்றைத் தேர்வு செய்து அதற்கு மேட்சாக பலாசோ, லெகிங்ஸ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். வெஸ்டர்ன் லுக்கினை விரும்பும் பெண்கள் நியான் வண்ணங்களில் உங்களின் ஆடையை வடிவமைத்தால் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும். நீங்கள் அணியும் ஆடைகளுக்கு மேட்சான லைட் வெயிட் ஆக்ஸிடைஸ்டு நகைகளைத் தேர்வு செய்து அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

ஆபீஸ் கோயிங் லுக் :

டிரெ


அலுவலகம் செல்லும் பெண்கள் மைல்ட் கலர் ஆடைகளைத் தேர்வு செய்து அணியுங்கள். சல்வார் விரும்பும் பெண்கள் பட்டன்கள் நிறைந்த ஒவர் கோர்ட் ஆடைகளைத் தேர்வு செய்யலாம். டாப்ஸ் அண்ட் பேன்ட் ஒரே நிறத்தில் தேர்வு செய்து, அதற்கு கான்ட்ராஸ்ட்டான நிறத்தில் ஃப்ரீ ஓவர் லேவை மிக்ஸ் மேட்ச் செய்தால் நீட் லுக் கிடைக்கும். கூடுமானவரை டெனிம் மெட்டீரியலைத் தவிர்த்து, இப்போது டிரெண்டில் உள்ள இக்கட், செக்டு மெட்டீரியலில் ஆடைகளை வடிவமைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் அணியும் ஆடைகளுக்கு ஏற்ற லைட் வெயிட் ஃபேஷன் நகைகளைத் தேர்வு செய்து அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்