ஜெல்லுக்கு `நோ', தாடிக்கு `யெஸ்' - மெல்லிய முடிகளுக்கேற்ற ஸ்டைலிங் டிப்ஸ்! | Mens hairstyles and tips to cover up thin hair

வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (29/03/2019)

கடைசி தொடர்பு:16:24 (29/03/2019)

ஜெல்லுக்கு `நோ', தாடிக்கு `யெஸ்' - மெல்லிய முடிகளுக்கேற்ற ஸ்டைலிங் டிப்ஸ்!

மெல்லிய தலைமுடியை மறைக்க முடியவில்லை என்றாலும் அதைத் திசைதிருப்பிவிடும் செயல்களில் மிக முக்கியமான ஒன்று, தாடி வளர்ப்பது. முழுநீள அடர்த்தியான தாடி இல்லையென்றாலும் சிறியளவு stubble வைத்துக்கொள்ளலாம்.

ஜெல்லுக்கு `நோ', தாடிக்கு `யெஸ்' - மெல்லிய முடிகளுக்கேற்ற ஸ்டைலிங் டிப்ஸ்!

மெல்லிய முடிகளைக் கையாள்வது மிகவும் கடினமான வேலை. தலையின் மேற்பகுதியில் சிறிதளவு அடர்த்தி குறைந்து காணப்பட்டாலே பலருக்கும் பதற்றம் வந்துவிடும். விதவிதமாக முடிகளைப் பராமரிக்கும் பொருள்கள் சந்தையில் இருந்தாலும், சிலருக்கு மட்டுமே அவை கைகொடுக்கும். பலருக்கு, செலவுதான் பரிசு. சரியான ஹேர்ஸ்டைலைத் தேர்வுசெய்வதன்மூலம், மெல்லிய தலைமுடிகளை மறைத்து, அடர்த்தியான தோற்றம் பெற்ற மாயையை உருவாக்க முடியும்.

மெல்லிய முடி

மெலிதான முடி கொண்டவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்னையே அடர்த்தி குறைந்து காணப்படுவதுதான். இது பலரின் தன்னம்பிக்கையையும் குறைத்துவிடுகிறது. ஆனால், சில விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இந்தப் பிரச்னையை எளிதில் கடக்கலாம்.

ஸ்டைலிங் டிப்ஸ்:

மெல்லிய தலைமுடிகளைக்கொண்டவர்கள், நிச்சயம் நீளமான ஹேர்ஸ்டைலைப் பின்பற்றக் கூடாது. 

`ஜெல்' வகைகளைப் பயன்படுத்தவே கூடாது.

தலையின் இரண்டு பக்கங்களிலும், குறுகிய அளவுக்கு முடியைச் சவரம் செய்யலாம்.

மெஸ்ஸி (Messy) அல்லது கூர்மையான ஹேர்கட்டைத் தேர்வுசெய்யலாம்.

முகத்தில் தாடி வைத்துக்கொள்ளலாம்.

பளபளவென இல்லாமல் மேட் (Matte) பினிஷ் முடி பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.

Hairstyles for thin hair

தலைமுடி பராமரிப்புப் பொருள்களைத் தேர்வுசெய்யும்போது `கிரீஸி (Greasy)' பொருள்களைத் தேர்வுசெய்யக் கூடாது.

அடிக்கடி தலைமுடிகளைச் சீவுதல் கூடாது.

மெல்லிய முடிகளோடு, முடி உதிரும் பிரச்னையும் இருந்தால் அவர்களுக்கான சரியான ஹேர்ஸ்டைலைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

இவை, மெல்லிய தலைமுடிகள் இருப்பதை மறைக்க திசைதிருப்பும் தந்திரம் எனவும் சொல்லலாம்.

ஹேர்ஸ்டைல்ஸ் - ஷார்ட் சைடு கட்:

தலையின் பின்பக்கம் மற்றும் இரு பக்கங்களிலும் குட்டையான அளவு முடியை வெட்டிக்கொள்வதுதான் ஆண்களின் கிளாசிக் ஹேர்ஸ்டைல். இது மெல்லிய முடிகளைக்கொண்டிருப்பவர்களுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும். இது, உச்சந்தலையின் மெல்லிய முடிகளை மறைப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் உதவும். அதோடு மேட் பினிஷ் ஹேர் பொருள்களை உபயோகிப்பது சிறந்தது.

Short side cut

மிலிட்டரி கிளாசிக் கட்:

மிகவும் குறுகிய சைடு கட் கொண்டிருக்கும் ஹேர்ஸ்டைல்தான் `மிலிட்டரி கட்'. மெல்லிய முடிப்பகுதி தலையின் கீழ்நோக்கி இருந்தால், கிரீடம் சூட்டும் உச்சந்தலைப் பகுதியில் சிறிதளவு முடி இருக்கும் வகையில் முடி திருத்தம் செய்வது சிறந்தது. அதேபோல, உச்சந்தலையிலிருந்து நெற்றிப் பகுதி வரை மெல்லிய தலைமுடிகளைக் கொண்டிருந்தால், மெஸ்ஸி தோற்றம் கொண்டுவருவது சிறந்த தோற்றத்தைத் தரும். `ஜெல்' போன்றவற்றை உபயோகித்தால், அதிகப்படியான அழுத்தம் கொடுக்காமல் இருக்கவேண்டும்.

Military Classic Cut

பஸ் கட் (Buzz Cut):

முடிகளை முழுமையாக ஷேவ் செய்யாமல், சிறிதளவு இருக்கும் அளவுக்கு ஷேவ் செய்வதுதான் `பஸ் கட்'. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களின் `கிளாசி' ஹேர்ஸ்டைல் என்றே சொல்லலாம். சரிசமமான ஷேவிங்கைவிட உச்சந்தலையில் சிறிதளவு முடிகள் இருக்கும் அளவில் சீரற்ற ஷேவிங் செய்தால், ட்ரெண்டி தோற்றம் பெறலாம். சிறிதளவு முடிதானே எனப் பராமரிக்காமல் இருந்தால், மேலும் பிரச்னைகள் வரலாம். எனவே, அடிக்கடி கண்டிஷனிங் செய்துகொள்வது அவசியம்.

Buzz Cut

மேலும், டெக்ஸ்ட்சர் (Texture) மற்றும் ஸ்வெப்ட் பேக் (Swept Back) ஹேர்கட் ஸ்மார்ட்டான தேர்வு. மெல்லிய தலைமுடியை மறைக்க முடியவில்லை என்றாலும் அதைத் திசைதிருப்பிவிடும் செயல்களில் மிக முக்கியமான ஒன்று, தாடி வளர்ப்பது. முழுநீள அடர்த்தியான தாடி இல்லையென்றாலும் சிறியளவு stubble வைத்துக்கொள்ளலாம்.


டிரெண்டிங் @ விகடன்