'நான் பயன்படுத்தும் ஹேண்ட் பேக்' சின்னத்திரை நாயகிகளின் ஷாப்பிங் பக்கங்கள்! | celebrity favorite handbag collections

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (14/04/2019)

கடைசி தொடர்பு:10:10 (14/04/2019)

'நான் பயன்படுத்தும் ஹேண்ட் பேக்' சின்னத்திரை நாயகிகளின் ஷாப்பிங் பக்கங்கள்!

பெண்களுடைய ஃபேவரைட் கலெக்‌ஷன்களுள் ஒன்று, ஹேண்ட் பேக். நமக்குப் பிடித்தமான சின்னத்திரை நடிகர்கள், எந்த மாதிரியான ஹேண்ட்பேக்கைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

ஶ்ரீதேவி (ராஜாராணி) :

நான் பெரும்பாலும் baguette bag பேக்தான் யூஸ் பண்ணுவேன். ரிச் லுக்கில் வெளியில் போறப்போ michael kors bag யூஸ் பண்ணுவேன்.  baguette bag  கொஞ்சம் பெரிய சைஸ்ல வைச்சிருக்கேன். டிராவலிங் நேரத்துல தேவையான பொருள்களை எடுத்துட்டு போகுறதுக்கு அது ரொம்பவே வசதியா இருக்கும். 

ஶ்ரீதேவி

 michael kors bag கொஞ்சம் காஸ்ட்லி. பங்ஷன்களுக்குப் போகும்போது இந்த பேக் யூஸ் பண்றது ரிச் லுக் கொடுக்கும். எங்கே பேக் நல்லா இருக்குன்னு ஷாப்பிங் போகும்போது பார்ப்பேன். இப்போ நான் யூஸ் பண்ற இந்த ரெண்டு பிராண்டும் சென்னையிலுள்ள பீனிக்ஸ் மாலில் வாங்கினேன். அடிக்கடியெல்லாம் பேக் மாற்ற மாட்டேன். baguette bag யூஸ் பண்ண ரொம்ப வசதியாக இருக்கு. அதனால, அடுத்து பேக் வாங்கினாலும் இதே பிராண்டில் வாங்கலாம்னு இருக்கேன். 

நீலிமா ராணி (அரண்மனைக்கிளி) :

இப்போ coach bag யூஸ் பண்றேன். பர்ஸ்ல niche fine பிராண்ட் யூஸ் பண்றேன். நான் ஹேண்ட் பேக்கோ வாலட்டோ நிறைய யூஸ் பண்ண மாட்டேன். இப்போ, நாம வெளியில் போறோம்னா ஒரே ஒரு ஏடிஎம் கார்டு போதும்! வெளியூருக்கு டிராவல் பண்ணும்போது ஹேண்ட் பேக் கண்டிப்பா  தேவை. அதில், அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுபோக வேண்டியிருக்கும்.  டிராவல் சமயத்தில் இப்படி எல்லாப் பொருள்களையும் கொண்டுபோக வசதியா ஒரு ஹேண்ட் பேக் இருந்தால் போதும்னு நினைப்பேன்.

நீலிமா ராணி

பொதுவாக ஹேண்ட் பேக்கை ஆன்லைனில் வாங்க மாட்டேன். நேர்ல பார்த்து வாங்குறதில் ஆர்வம் காட்டுவேன். நான் வெச்சிருக்கிற பேக்கின் விலை கிட்டத்தட்ட 30,000. நிறைய பேர் இவ்வளவு விலை கொடுத்து வாங்கணுமான்னு கேட்பாங்க.. ஒரு தடவை வாங்கப் போகிறது நல்லதா வாங்கிறதுல தப்பில்லையே! அதே மாதிரி இந்தப் பேக்கை ஒரே நாளிலெல்லாம் வாங்கல. கிட்டத்தட்ட ஆறு மாசம் சேமித்து வைத்திருந்த பணத்தில்தான் வாங்கினேன்.

சித்ரா ( பாண்டியன் ஸ்டோர்ஸ்)  :

நான் coach bag யூஸ் பண்றேன். என்கிட்ட அஞ்சு ஹேண்ட் பேக் இருக்கு. நான் பிராண்ட் பைத்தியம். ஒவ்வொரு ஹேண்ட் பேக்கும் ஒவ்வொரு பிராண்ட். அஞ்சும் ஒரே மாதிரி இருக்காது. சின்ன சைஸ்லேருந்து பெரிய சைஸ் வரை வெச்சிருக்கேன்.  24 மணி நேரம் டிராவல் பண்ணப் போகிறோம்னா பெரிய பேக் தேவைப்படும். அதனால, எந்த இடத்துக்குப் போகிறோமோ அதுக்கு ஏற்ற பேக்கை எடுத்துட்டுப் போவேன்.

சித்ரா

நான் மலேசியாவுக்குப் போயிருந்தேன். எனக்கு coach பிராண்ட் ரொம்ப பிடிக்கும். அங்கே ஷாப்பிங் போயிருந்தப்போ அந்த பேக் பார்த்தேன். பார்த்ததும் பிடிச்சிருந்துச்சு. சரின்னு பில்லைப் போட்டுட்டேன். பில் போட்டதுக்கு பிறகுதான், இந்தப் பை இவ்வளவு காஸ்ட்லியான்னு தெரிஞ்சது. இந்த அளவுக்கு காஸ்ட்லியா இருக்கும்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல. சரி வாங்கிட்டோம்.. நாம சம்பாதிக்கிறதே நமக்குப் பிடிச்சதை பண்றதுக்காகத் தானேன்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.  மீடியாவைப் பொறுத்தவரை அவுட் லுக் ரொம்பவே முக்கியம். இந்த பேக் அதுக்கு ரொம்பவே உதவும்.

ஸ்ரேயா ( திருமணம் ) :

ஸ்ரேயா

நான் ரொம்ப குறைவாகத்தான் ஹேண்ட் பேக் யூஸ் பண்ணுவேன். பெரும்பாலும் டிரஸஸ் கொண்டு போகிற மாதிரியான பேக்தான் பயன்படுத்துவேன். இப்போ zara bag தான் யூஸ் பண்றேன். பெங்களூரில் மாலுக்கு ஷாப்பிங் போகும்போது இந்த பேக் வாங்கினேன். ஹேண்ட் பேக் அடிக்கடி எனக்குத் தேவைப்படாதுங்குறதுனால எப்போவாச்சும்தான் வாங்குவேன். 

விஜே அக்ஷயா ( சன் மியூசிக் ) :

விஜே அக்‌ஷயா

நான் code bag யூஸ் பண்றேன். ஒரே பிராண்ட் தொடர்ந்து யூஸ் பண்ண மாட்டேன். அடிக்கடி பிராண்ட்டை மாத்திட்டே இருப்பேன். ஷாப்பிங் போகும்போது இந்த மாதிரி பேக், ஷூட்டிங் போகும்போது இந்த பேக்ன்னு மாத்தி மாத்தி யூஸ் பண்ணுவேன். பெரும்பாலும் டிரஸ்ல்லாம் ஆன்லைனில் பார்த்து செலக்ட் பண்ணி வாங்குவேன். ஆனா, பேக் ஐட்டம் வாங்கும் போது மட்டும் நேர்ல போய்தான் வாங்குவேன். நான் வைச்சிருக்கிற பேக் கிட்டத்தட்ட 5000 முதல் 7000 ரூபாய் வரை விலை இருக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்