வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (10/02/2017)

கடைசி தொடர்பு:15:22 (09/07/2018)

மிஸ் அழகி... மிஸ்டர் அழகன் ஆக ஆசையா? ஃபேஷன் போட்டிக்கு தயாரா?

'அட, ஆண்டவா... என்னை ஏன்டா இவ்ளோ அழகா படைச்சே?' என்று அலுத்துக்கொள்ளும் ஒரு மனிதரை உங்களால் கண்டுபிடிக்கமுடியுமா? சான்ஸே இல்லை. அப்படி ஒருவரை இந்த உலகில் கண்டுபிடிக்கவே முடியாது. 'ச்சே! இன்னும் கொஞ்ச கலரா இருந்திருக்கலாம்', 'முடி மட்டும் இவ்ளோ குட்டையா இல்லைன்னா, நானும் ஐஸ்வர்யா ராய்தான்', 'எனக்கு மட்டும் ஏன்தான் முகத்துல பருவா வந்து தொலைக்குதோ' என்று விதவிதமாகவும், வித்தியாசமாகவும் அங்கலாய்ப்பவர்கள், அலுத்துக்கொள்பவர்கள்தான் நம்மிடையே அதிகம். ஏனென்றால் நம் புறஅழகு (ஃபேஷன்) பற்றிய தன்னம்பிக்கைதான் நமது உடல்மொழியைத் தீர்மானிக்கிறது. எனவே அழகாய் இருக்க ஆசைப்படுவதில் தவறில்லை! 

பேஷன்

உங்களைப்பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர்களுக்கு, உங்கள் முகம்தான் விசிட்டிங் கார்டு. இன்றைய கார்ப்பரேட் உலகில் நாம் மறுத்தாலும் வெறுத்தாலும், ஒருவரது பளிச் தோற்றம்தான் அவருக்கு முன்னிலை பெற்றுக் கொடுக்கும். ஆகவே அழகாய் இருக்க ஆசைப்படுங்கள்! ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா... இந்த உலகில் பிறந்த அனைவருமே அழகுதான்! தங்களுக்குள் ஒளிந்திருக்கும் அழகுக்கு அங்கீகாரம் பெற விரும்புபவர்கள், 'மிஸ் யுனிவர்ஸ்', 'மிஸ்டர் வேர்ல்டு', 'மிஸ் சென்னை' ஆகிறார்கள். அவ்வளவே! நீச்சல், பாட்டு, நடனம், நடிப்புபோல அழகைப் பராமரிப்பது ஒரு கலை. தக்க முறையில் அழகை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டால், நாம் அனைவரும் அழகு குட்டிச் செல்லங்கள்தான்! உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த அழகு ராணி / அழகு ராஜாவை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வந்திருக்கிறது!

மாடலிங்கில் புகழ்பெற்ற சென்னை மாடல்ஸ் நிறுவனம் நடத்தும் ''Mr & Miss Fashion Icon Of Chennai - 2017, A Fashion Contest'' எனும் ஃபேஷன் நிகழ்ச்சி, ராயப்பேட்டையில் உள்ள Royal Orchid - Regenta Central Deccan ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதற்கான ஆடிஷன், வருகின்ற பிப்ரவரி  19 அன்று  நடைபெறுகிறது. முன்பதிவு வருகின்ற பிப்ரவரி 17, 2017 அன்றுடன் நிறைவடைகிறது. 16 முதல் 28 வயது வரையிலான ஆண் மற்றும் பெண்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், http://www.chennaiyil.com வலைதளத்திற்குச் சென்று, முன்பதிவு தொகையாக ரூ.999/- மட்டும் செலுத்தி முன்பதிவு செய்யலாம். அவரவர் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து, முதல் பரிசு (30 ஆயிரம் ரூபாய்) - இரண்டாம் பரிசு (20 ஆயிரம் ரூபாய்) - மூன்றாம் பரிசு (10 ஆயிரம் ரூபாய்) வழங்கப்படும். இத்துடன் ஆண், பெண் ஆகிய பிரிவுகளில், 5 ஸ்பெஷல் விருதுகளும் வழங்கப்பட உள்ளன. 

பேஷன்

ஆடிஷனில் வெற்றி பெறுபவர்கள், பிப்ரவரி 26, 2017 அன்று இரண்டு சுற்றுகளாக நடக்கும் காலிறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்கள், மார்ச் 12, 2017 அன்று இரண்டு சுற்றுகளாக நடக்கும் அரையிறுதியில் பங்கேற்பார்கள். அதனைத் தொடர்ந்து, மார்ச் 26, 2017 அன்று இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. அரையிறுதி வரை, இந்த ஃபேஷன் போட்டியில் பங்கேற்பவரே தனது மேக்-அப் மற்றும் உடைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும், சென்னை மாடல்ஸ் நிறுவனம் மேக்-அப் மற்றும் உடைகளுடன், பரிசுக் கூப்பன்களையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காலிறுதி முதலே, ஃபேஷன் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான முறையான பயிற்சியினை Choreographer-கள் வழங்குவார்கள். இந்த ஃபேஷன் போட்டியில் முதல் 3 இடம் மற்றும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும், சென்னை மாடல்ஸ் நிறுவனம் நடத்தும் போட்டோ ஷூட் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். 

பேஷன்

 www.facebook.com/ChennaiiModels என்ற பேஸ்புக் பக்கத்தில், இந்த ஃபேஷன் போட்டி பற்றிய தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. இந்தப் போட்டியின் விளம்பரத் தூதுவர்களாக, ''அதே கண்கள்'' படப்புகழ் நடிகை ஷிவதா நாயர் மற்றும் ''Miss South India - 2016'' பட்டத்தை வென்ற மீரா மிதுன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பரிசுத் தொகையாக 1.5 லட்ச ரூபாயைக் கொண்டிருக்கும் இந்த ஃபேஷன் போட்டியைப் பற்றி, சென்னை மாடல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காவேரி மாணிக்கம் அவர்களிடம் கேட்ட போது, ''தமிழகத்தைப் பொறுத்தவரை, மாடலிங் துறை மீதான அச்சம் மற்றும் மனத்தடை மிக அதிகமாக இருக்கிறது. தென்னிந்தியாவின் முக்கிய ஃபேஷன் நகரமாக இருக்கும் சென்னையில், இதுபோன்ற ஃபேஷன் போட்டிகளை நடத்துவதால், இதில் ஆர்வமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பெருமளவில் இத்துறைக்கு ஈர்க்கப்படுவார்கள் என நம்புகிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை, எங்கள் நிறுவனம் வழங்கும்'' என்றார். 

 - ராகுல் சிவகுரு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்