வெளியிடப்பட்ட நேரம்: 21:16 (07/04/2017)

கடைசி தொடர்பு:18:06 (18/04/2017)

வீட்டைக் காக்கும் ‘ஹவுஸ் ஹோல்டர் பாலிசி' பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

‘நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்' எனும் வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் இயற்கை சீற்றங்களுக்குப் பொருந்தும். ஏனெனில் நம்மில் யாருக்குமே இயற்கை சீற்றங்கள் எப்போது வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது. திடீர் தீ விபத்து, கன மழை, நில நடுக்கம், பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் நம்மை ஒரே நாளில் நிர்கதியாக்கிவிடும். நம் வீட்டைச் சேதப்படுத்தி ஒரே நாளில் நம்மை வீடற்றவர்களாக மாற்றக்கூடிய சக்தி படைத்தது. ஆகையால் இதுபோன்ற சமயங்களில் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் வீட்டைக் காக்க ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டியது அவசியம்.

 


பாலிசி, இன்ஷூரன்ஸ், insurance, policy

வீட்டு உபயோகப் பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான காப்பீடு நம்முடைய இழப்பைப் பெருமளவு குறைக்கிறது. இப்போது நகரங்களில் மட்டுமே பெரும்பாலும் வீட்டு உரிமையாளர் பாலிசி எடுத்து வருகின்றனர்.

வீட்டு உரிமையாளர் பாலிசி!

வீட்டு உரிமையாளர் பாலிசி (ஹவுஸ் ஹோல்டர் பாலிசி) என்பது, வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் கட்டிடத்திற்கு சேர்த்து காப்பீடு கிடைக்கும். இதில் தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்கள், ஃபர்னிச்சர் போன்ற அனைத்திற்கும் கவரேஜ் கிடைக்கும். இந்த காப்பீட்டுக்கு, நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுக்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப பிரீமியம் இருக்கும். ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முக்கியமானவை வீட்டு உரிமையாளர் பாலிசி. 

சொந்த வீடு வைத்திருப்பவர்கள், காப்பீடு எடுத்திருக்கும்போது நில நடுக்கம், நிலச் சரிவு, தீவிரவாதிகள் தாக்குதல், மழை வெள்ளத்தால் பாதிப்பு, திருட்டு போன்ற சமயத்திலும் இழப்பீடு பெற முடியும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். கட்டிடத்துக்கு எடுக்க முடியாது. பெரும்பாலும் நகைகள், மின்னணு சாதனங்கள், வீட்டுச் சாதனங்கள் ஆகிய மதிப்பு மிக்கப் பொருட்களுக்கு பாலிசியாக எடுக்கலாம்.  ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் என எந்த எலாக்ரானிக் சாதனமாக இருந்தாலும் பாதிக்கப்பட்டால் அதற்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. 

ரூபாய் நோட்டுகள், பத்திரங்கள், பங்குகள், ஃபாண்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள், தங்க நகைகளில் சேர்க்காத வைரம் மற்றும் வைடூரியம், சான்றிதழ்கள், தோல் பொருட்கள், கலைப் பொருட்கள் போன்றவற்றுக்கு வீட்டு உரிமையாளர் பாலிசியில் இழப்பீடு கோர முடியாது. முடிந்தவரை வீட்டு உரிமையாளர் பாலிசியைத் தேர்வு செய்யும் முன் அதுகுறித்து நன்றாகத் தெரிந்து கொண்டு காப்பீட்டைத் தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு ஆண்டும் பாலிசியைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, மொத்தமாக 10 வருடத்துக்கு என நீண்ட கால பாலிசியைத் தேர்வு செய்யலாம். இது உங்களுடைய பிரீமியத்தை வெகுவாகக் குறைக்கும்.

பாலிசி எடுப்பவர்கள் கவனத்துக்கு...! 

வீட்டு உரிமையாளர் பாலிசி எடுக்க நினைப்பவர்கள், உங்கள் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இன்ஷூரன்ஸ் செய்துவிட்டீர்களா என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை எல்லாப் பொருட்களையும் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. விலைமதிப்பற்ற சின்ன, சின்ன பொருட்களை இன்ஷூரன்ஸ் எடுக்காதீர்கள். இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை பட்டியலிட்டு அதன் பின் பாலிசியை எடுங்கள். இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட பொருட்களுக்கான பில்லை பத்திரமாக வைத்திருங்கள். நாளை ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அந்தச் சமயத்தில் இந்த பில் உதவும்.

-சோ.கார்த்திகேயன் 


டிரெண்டிங் @ விகடன்