Published:Updated:

வாழ்நாள் சாதனையாளர்... இந்தியாவின் எஃகு மனிதர்.. ஜம்ஷெட் ஜே இரானி!

ஜம்ஷெட் ஜே இரானி
News
ஜம்ஷெட் ஜே இரானி

2007-ம் ஆண்டு பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. மெட்டலர்ஜி துறையில் சிறப்பான பங்கு வகித்ததற்காக மத்திய அரசு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. ஜம்ஷெட் ஜே இந்தியாவின் எஃகு மனிதர் (ஸ்டீல் மேன்) என்று அழைக்கப்பட்டார்.

வாழ்நாள் சாதனையாளர்... இந்தியாவின் எஃகு மனிதர்.. ஜம்ஷெட் ஜே இரானி!

2007-ம் ஆண்டு பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. மெட்டலர்ஜி துறையில் சிறப்பான பங்கு வகித்ததற்காக மத்திய அரசு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. ஜம்ஷெட் ஜே இந்தியாவின் எஃகு மனிதர் (ஸ்டீல் மேன்) என்று அழைக்கப்பட்டார்.

Published:Updated:
ஜம்ஷெட் ஜே இரானி
News
ஜம்ஷெட் ஜே இரானி

டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஜம்ஷெட் ஜே இரானி திங்கள் கிழமை (அக்டோபர் 31) இரவு காலமானார். 1936-ம் ஆண்டு நாக்பூரில் பிறந்தவர். நாக்பூரில் இளங்லை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற இவர் அதனை தொடர்ந்து மேல் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். Sheffield பல்கலைக்கழகத்தில் உலோகவியல் பிரிவில் மேல் படிப்பும் அங்கேயே பிஹெச்டியும் முடித்தார்.

ஜம்ஷெட் ஜே இரானி
ஜம்ஷெட் ஜே இரானி

அதனை தொடர்ந்து அங்கேயே தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை தொடங்கினார். பிரிட்டீஷ் ஸ்டீல் அண்ட் அயர்ன் என்னும் நிறுவனத்தில் 1962-ம் ஆண்டு இணைந்தார். அதனை தொடர்ந்து 1968-ம் ஆண்டு டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தில் ( பின்னாளில் டாடா ஸ்டீல் என மாற்றம் செய்யப்பட்டது) ஆராய்ச்சி பிரிவில் சேர்ந்தார். ஆனால் ஆறு மாதத்தில் வேலை பிடிக்கவில்லை என்றும் மீண்டும் இங்கிலாந்து திரும்ப விரும்புவதாகவும் ஜேஆர்டி டாடாவிடம் கூறியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து வேறு பொறுப்புகள் இரானிக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக இரானி உயர்ந்தார். பொதுமேலாளர், தலைவர் இணை நிர்வாக இயக்குநர், நிர்வாக இயக்குநர் என தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தார்.

1992-ம் ஆண்டு இரானி நிர்வாக இயக்குநராக இருக்கும்போது டாடா ஸ்டீல் அதுவரை இல்லாத அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது. டாடா ஸ்டீல் தொடங்கப்பட்ட 80 ஆண்டுகளில் முதல் முறையாக 180 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம்.

இதனால் நிறுவனத்தை சீரமைக்கும் பெரிய பொறுப்பு இரானி வசம் வந்தது. ஒரு டன்னுக்கு ரூ.500 என்னும் அளவுக்கு செலவினை குறைத்தால் மட்டுமே நிறுவனத்தை மீட்க முடியும் என்னும் சூழல் இவர் தலைமை பொறுப்பை ஏற்கும் போது இவரிடம் வந்தது. இந்த நஷ்டத்தில் இருந்து மீட்டவர் இரானி.

ஜம்ஷெட் ஜே இரானி
ஜம்ஷெட் ஜே இரானி

அதனை தொடர்ந்து மொத்த தர மேலாண்மையில் (total quality management)  கவனம் செலுத்தினார். நிறுவனத்தை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.

2001-ம் ஆண்டு இவர் பதவி விலகி முத்துராமன் நிர்வாக இயக்குநராக பதவி ஏற்றார். 1992-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை இரானி காலம் என்றே டாடா ஸ்டீல் வரலாற்றில் இருக்கும். 2001-ம் ஆண்டில் சர்வதேச அளவில் முதல் ஸ்டீல் நிறுவனம் என்னும் பெயரை பெற்றது டாடா ஸ்டீல். அப்போது ஆர்செலர் (ஐரோப்பா), போஸ்கோ (தென் கொரியா), நிப்பான் ஸ்டீல் (ஜப்பான்) ஆகிய நிறுவனங்கள் அடுத்த இடத்தில் இருந்தன.

1992-ம் ஆண்டு டாடா ஸ்டீல் உற்பத்தி திறன் 2 மில்லியன் டன் ஆக இருந்தது. ஆனால் 2001-ம் ஆண்டு 3.4 மில்லியன் டன்னாக மாறியது. அதேபோல 78000 பணியாளர்கள் இருந்த சூழலில் 48000 பணியாளர்களை வைத்து இந்த சாதனையை நிகழ்த்தினார் இரானி.

ஜம்ஷெட் ஜே இரானி
ஜம்ஷெட் ஜே இரானி

2001-ம் ஆண்டு நிர்வாக இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றாலும் இயக்குநர் குழுவில் 2011-ம் ஆண்டு வரை இருந்தார். டாடா ஸ்டீல் மட்டுமல்லாமல் டாடா குழுமத்தின் வேறு சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் இருந்தார். டாடா சன்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

சிஐஐ உள்ளிட்ட அமைப்புகளின் தலைவராக இருந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு பத்மபூஷன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. மெட்டலர்ஜி துறையில் சிறப்பான பங்கு வகித்ததற்காக மத்திய அரசு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. ஜம்ஷெட் ஜே இந்தியாவின் எஃகு மனிதர்  (ஸ்டீல் மேன்) என்று அழைக்கப்பட்டார்.

அக்டோபர் (2022) 31-ம் தேதி  ஜம்ஷெட்பூரில் உள்ள டாடா மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவிற்கு மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன். டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் டிவி நரேந்திரன் ஜேஎஸ்டபியூ குழுமத்தின் சஜன் ஜிண்டால் உள்ளிட்ட தொழில்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.