Published:Updated:

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - சிகாகோவில் களைகட்டும் தமிழர் விழா!

Stone engraving
News
Stone engraving

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், இலக்கியம், கலாசாரம் குறித்தும் கீழடி ஆய்வு பற்றியும் விவாதங்கள் மாநாட்டில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு நாள்கள் கலாசார நிகழ்ச்சிகளும் பின்னர் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் நடைபெற உள்ளது.

Published:Updated:

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - சிகாகோவில் களைகட்டும் தமிழர் விழா!

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், இலக்கியம், கலாசாரம் குறித்தும் கீழடி ஆய்வு பற்றியும் விவாதங்கள் மாநாட்டில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு நாள்கள் கலாசார நிகழ்ச்சிகளும் பின்னர் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் நடைபெற உள்ளது.

Stone engraving
News
Stone engraving

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடானது 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நேற்று தொடங்கியுள்ளது. உலகத் தமிழ் மாநாடானது வருகிற 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழ் மாநாடு
தமிழ் மாநாடு

உலகின் பல நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த மாநாடுகளை நடத்தி வருகிறது. 1966-ம் ஆண்டு தனிநாயக அடிகளாரின் முயற்சியால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடானது கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பாரீஸ், யாழ்ப்பாணம், கோலாலம்பூர், மொரீசியஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் பின்னர் நடத்தப்பட்டது. சிகாகோவில் தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், இலக்கியம், கலாசாரம் குறித்தும் கீழடி ஆய்வு பற்றியும் விவாதங்கள் இம்மாநாட்டில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு நாள்கள் கலாசார நிகழ்ச்சிகளும் பின்னர் தமிழ் ஆராய்ச்சி மாநாடும் நடைபெற உள்ளது.

தமிழ் மாநாடு
தமிழ் மாநாடு

தமிழகத்தின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன், எழுத்தாளர் சு.வெங்கடேசன் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆளுமைகள், தமிழக அரசின் சார்பில் 20 தமிழ் அறிஞர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் உட்பட பலர் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். குறும்பட போட்டி, கவியரங்கம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசைக் கச்சேரி உட்பட பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாநாட்டில் சிறப்பம்சமாக சிகாகோவில் திருவள்ளுவரின் சிலையும் நிறுவப்பட உள்ளது கவனிக்கத்தக்கது.

``தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்” என்னும் மைய ஆய்வுப் பொருளை முன்வைத்து ஜூலை 3 முதல் 7-ம் நாள் வரை 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் நடைபெற உள்ளது.

தமிழ் மாநாடு
தமிழ் மாநாடு

இந்த மாநாட்டில் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் ``கீழடி நம் தாய்மடி“ என்னும் அமர்வும், ஜூலை 4-ம் தேதியான நேற்று ``வீரயுக நாயகன் வேள்பாரி” குறித்த சிறப்பு அமர்வில் ஓவியர் மணியன் செல்வம், எழுத்தாளர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு உரையாற்றினர். இன்று ஜூலை 5-ம் தேதி ``நாளைய தலைமை “ என்னும் தலைப்பில் மொரீசியஸ், கனடா, அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முக்கிய அரசியல் ஆளுமைகள் பங்கேற்கிறார்கள்.