Published:Updated:

``இந்தப் புத்தகம் படிங்க... உலகமே நல்லாருக்கும்..!” - பில் கேட்ஸ் பரிந்துரை

``இந்தப் புத்தகம் படிங்க... உலகமே நல்லாருக்கும்..!” - பில் கேட்ஸ் பரிந்துரை
News
``இந்தப் புத்தகம் படிங்க... உலகமே நல்லாருக்கும்..!” - பில் கேட்ஸ் பரிந்துரை

தான் வாசிக்கும் புத்தகங்களை பிறருக்குப் பரிந்துரைக்கவும் அவர் தவறுவதில்லை. ஒவ்வொரு வருடமும் தனக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றி, ‘கேட்ஸ் நோட்ஸ்’ (Gates Notes) என்ற தனது வலைப்பூவில் (Blog) பதிவிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

‘பில் கேட்ஸ் ’- அமெரிக்கத் தொழிலதிபர், உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர், முதலீட்டாளர், மனிதநேயமிக்கவர்- இவை தாம் அவரின் பெயரைக் கேட்டதும் நமக்கு தோன்றுபவை. ஆனால், இவையனைத்தையும் தவிர ஒன்று சொல்ல வேண்டும் என்றால் அது ‘அவர் ஒரு சிறந்த புத்தக வாசிப்பாளர்’ என்பதாகத்தான் இருக்கும். தொழில்நுட்பத்தைத் தவிர அவருடன் விவாதிப்பதற்கு வேறு விஷயம் உண்டென்றால் அது புத்தகங்கள் பற்றியதாகத்தான் இருக்கமுடியும். எவ்வளவு பிஸியான வேலைகள் இருந்தாலும் ஒரு நாளில் குறைந்தபட்சம் ஒருமணிநேரம் புத்தக வாசிப்பில் செலவழிப்பதைக் வழக்கமாகக் கொண்டுள்ள பில் கேட்ஸ், ஒரு வருடத்தில் குறைந்தது 50 புத்தகங்கள் வாசிக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தான் வாசிக்கும் புத்தகங்களைப் பிறருக்குப் பரிந்துரைக்கவும் அவர் தவறுவதில்லை. ஒவ்வொரு வருடமும் தனக்குப் பிடித்த புத்தகங்களைப் பற்றி, ‘கேட்ஸ் நோட்ஸ்’ (Gates Notes) என்ற தனது வலைப்பூவில் (Blog) பதிவிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். அவ்வாறு அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள் விற்பனையில் சக்கை போடு போடுவதும் அவ்வப்போது நடப்பதுண்டு. 


அந்த வகையில் இந்த ஆண்டு அவர் பரிந்துரைத்த புத்தகம், “Factfulness: Ten Reasons We’re Wrong About the World- and Why Things Are Better Than You Think”.  இதைப் பற்றி சமீபத்தில் வெளியிட்டுள்ள யூடியூப் வீடியோ பதிவில், “நான் இதுவரை படித்துள்ள கல்வி தொடர்பான புத்தகங்களிலேயே மிகச்சிறந்த புத்தகம் இதுதான்,” என்று குறிப்பிட்டுள்ள அவர்  மேலும் கூறுகையில், ``சுலபமாகப் புரிந்துகொள்ளமுடியாத நுட்பமான ஒரு தளத்தை இது உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது”, என்றும், “உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் உண்மையில் மில்லியன் கணக்கான மக்கள் இந்தப் புத்தகத்தை வாசித்தால் போதும்”, என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், “I give it my highest recommendation” (எனது உட்சபட்ச பரிந்துரையாக இதைத் தருகிறேன்) என்றும் சொல்லி எல்லோருடைய ஆர்வத்தையும் தூண்டியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுவீடன் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் புள்ளியியல் வல்லுநரும் உலக சுகாதார நிபுணருமான ‘ஹான்ஸ் ரோஸ்லிங்’ (Hans Rosling) என்பவர்தான் இந்தப் படைப்பின் சொந்தக்காரர். இவர்  பில் கேட்ஸின் உற்ற நண்பரும்கூட. இந்தப் புத்தகம் அவரின் இறப்புக்குப் பிறகு அவரது மகன், ‘ஓலா’ (Ola), மற்றும்  மருமகள், ‘அன்னா’ (Anna) ஆகியோரது முயற்சியால் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தைக் குறித்து தனது ப்ளாகில் எழுதியுள்ள பில் கேட்ஸ்,  “நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்ப்பது பற்றிய ஒரு புதிய அணுகுமுறையை இந்தப் புத்தகம் அளிக்கும். மேலும், “வளர்ந்த” (developed) மற்றும் “வளரும்” (developing) நாடுகள் மீது உலக நாடுகள் கொண்டுள்ள கருத்தாக்கங்கள் அனைத்தையும் சிதறடிக்கும் வகையில் ரோஸ்லிங்-ன் கருத்துக்கள் உள்ளன”, என்கிறார். 

இந்த ‘Factfulness’ புத்தகமானது,  நமது உட்புற இயல்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாக அல்லது கேட்ஸ் எழுதுவதைப் போல் சொல்லவேண்டுமானால், “உலகத்தை உண்மையாகக் கண்டுகொள்ள விடாமல் நம்மைத் தடுக்கும் பத்து உள்ளுணர்வினை வெளிக்காட்டும் ஒரு கருவியாக இது உதவும்,” என்கிறார்.

‘பயம் பற்றிய உள்ளுணர்வு’ (the fear instinct), ‘அளவு பற்றிய உள்ளுணர்வு ( the size instinct) மற்றும் இடைவெளி பற்றிய உள்ளுணர்வு (the gap instinct) போன்றவை ரோஸ்லிங் குறிப்பிட்டுள்ள பத்து உள்ளுணர்வுகளில் சிலவாகும். இவற்றைப் பற்றி அவர் விளக்கிய முறையே இந்தப் புத்தகத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.

பில் கேட்ஸ் சொல்வதைப்போல இந்தப் புத்தகம் உலகத்தை உண்மையாகக் கண்டுகொள்ளவும், சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கும் உதவுமானால் நாமும் இதை வாங்கி படித்துப் பார்க்கலாம்.