Published:Updated:

``நாலு பேருக்கு முன்னாடி கெளரவமா வாழணும்!'' - வேலைக்காகப் போராடும் மாற்றுத்திறனாளி

``நாலு பேருக்கு முன்னாடி கெளரவமா வாழணும்!'' - வேலைக்காகப் போராடும் மாற்றுத்திறனாளி

மாவட்ட ஆட்சியரிடம் வேலை கேட்டு ஒரு மனுவைக் கொடுத்துவைப்போம் எனப் பலமுறை முயன்றும், தற்போது வரை ஆட்சியரைச் சந்திக்க முடியாமல் நடையாய் நடந்துவருகிறார்.

``நாலு பேருக்கு முன்னாடி கெளரவமா வாழணும்!'' - வேலைக்காகப் போராடும் மாற்றுத்திறனாளி

மாவட்ட ஆட்சியரிடம் வேலை கேட்டு ஒரு மனுவைக் கொடுத்துவைப்போம் எனப் பலமுறை முயன்றும், தற்போது வரை ஆட்சியரைச் சந்திக்க முடியாமல் நடையாய் நடந்துவருகிறார்.

Published:Updated:
``நாலு பேருக்கு முன்னாடி கெளரவமா வாழணும்!'' - வேலைக்காகப் போராடும் மாற்றுத்திறனாளி

ரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் கடுக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (25). கால்களில் ஒருசில குறைபாடுகளுடன் பிறந்தவர், தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அறிந்தும், ஒரு வட்டத்தினுள் முடங்கிக்கிடக்காமல் ஒரு டிகிரி முடித்திருக்கிறார். `படித்தால் நல்ல ஒரு வேலை கிடைக்கும். சோர்ந்துபோன இந்த மனதுக்கு அந்த வேலை ஒரு மருந்தாக இருக்கும்’ என நினைத்த மகுடேஸ்வரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வேலை தேடி பல படிக்கட்டுகள் ஏறி இறங்கியவரை, மாற்றுத்திறனாளி என்ற காரணத்துக்காக வேலை கொடுக்காமல் பலர் நிராகரிக்கின்றனர். இருந்தும் நம்பிக்கை இழக்காதவர், வேலை தேடி தினமும் பல இடங்களுக்கு அலைந்துவருகிறார்.

மாவட்ட ஆட்சியரிடம் வேலை கேட்டு ஒரு மனுவைக் கொடுத்துவைப்போம் எனப் பலமுறை முயன்றும், தற்போது வரை ஆட்சியரைச் சந்திக்க முடியாமல் நடையாய் நடந்துவருகிறார். கொளுத்தும் வெயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த மகுடேஸ்வரனிடம் பேசினோம்...

``தினமும் என் அப்பாதான் என்னை ஸ்கூல்ல விட்டுட்டு, சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்குக் கூட்டிட்டு போவாரு. என்னால சிரமப்பட்டுதான் நடக்க முடியும். அப்படிக் கஷ்டப்பட்டு ஸ்கூல் படிப்பை முடிச்சிட்டு, கோபிச்செட்டிபாளையத்துல உள்ள ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.பி.ஏ சேர்ந்தேன். எப்படியாவது ஒரு டிகிரி முடிச்சிட்டா ஒரு வேலை கிடைச்சிடும். வாழ்க்கையில இதுவரை பட்டக் கஷ்டத்துக்கு ஒரு விடிவு வந்திடும்னு நினைச்சேன். ஆனா, நான் ஒரு மாற்றுத்திறனாளிங்கிறதாலயும், மற்றவர்களைப்போல என்னால வேலைபார்க்க முடியாதுங்கிறதாலயும் யாருமே எனக்கு வேலை கொடுக்கலை. ஒருகட்டத்துல, `படிச்சிட்டு வேலையில்லாம வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்குறோமே!' என்கிற உணர்வு, எனக்கு மனரீதியா அழுத்தத்தை ஏற்படுத்துச்சு.

அப்பா, அம்மா ரெண்டு பேருமே கூலி வேலைக்குத்தான் போறாங்க. அவங்களுக்கு இப்போ வயசாகிடுச்சு. இருந்தாலும் குடும்பச் சூழ்நிலையால் அவங்க சிரமப்பட்டு வேலைக்குப் போயிட்டு வர்றாங்க. அப்படியிருக்க, எனக்கு ஒரு வேலை கிடைச்சா அவங்களுக்குக் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும். நானும் பல இடங்கள்ல வேலை கேட்டும், அரசு வேலைக்காக பரீட்சை எல்லாம் எழுதிக்கிட்டும் வர்றேன். இதுக்கிடையில, 100 நாள் வேலைக்கும் கொஞ்ச நாள் போனேன். இப்போ அதையும் நிப்பாட்டிட்டாங்க. சரி, கலெக்டரைச் சந்திச்சு குடும்பச் சூழ்நிலையைச் சொல்லி, ஏதாவது வேலை கேட்கலாம்னு பலமுறை முயன்றேன். நான் ஒவ்வொரு முறை கலெக்டரைச் சந்திக்கலாம்னு வரும்போதும், அவரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கலை. `மனுவைக் கொடுத்துட்டுப் போங்க, கூப்பிடுவாங்க'னு சொல்லி அனுப்பிடுவாங்க. ஆனா, இதுவரைக்கும் யாருமே கூப்பிடலை. அதேமாதிரி ஸ்கூட்டி கேட்டு விண்ணப்பிச்சிருக்கேன். அதுவும் கிடைக்கலை. இப்போ வரைக்கும் யாரோட கையையாவது எதிர்பார்த்திருக்கக்கூடிய சூழல்லதான் நான் இருக்கேன். என் வீட்டுலேயே ஒருசில நேரம் என்னை ஒரு மாதிரி பார்க்கிறாங்க.    

நாலு பேருக்கு முன்னாடி சொந்தக்கால்ல நின்னு கெளரவமா வாழணும். இதுவரைக்கும் என்னைத் தாங்கிப் பிடிச்சப் பெத்தவங்களுக்கு சாப்பாடு போடணும்னு ஆசை. `நாம ஒரு மாற்றுத்திறனாளியா இருக்கோமே!' என நினைச்சு முடங்கிக்கிடக்காம, என் மனதைரியத்தால்தான் இவ்ளோ தூரம் கடந்து வந்திருக்கேன். மிச்சம் இருக்கிற வாழ்க்கையிலயும் அந்த மனதைரியத்தை நான் விட மாட்டேன். எனக்கான காலம் கூடியசீக்கிரமே வரும்கிற நம்பிக்கை இப்பதான் அதிகமாயிருக்கு” என்றார் உற்சாகத்துடன்.

விடாமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் போராடுபவர்களை, வெற்றி விரைந்துவந்து அணைத்துக்கொள்ளும். அப்படி மகுடம் சூடிய வெற்றியாளனாக ஜொலிக்கும் காலம் வெகுதூரமில்லை!