Published:Updated:

`நாற்காலியில் உட்கார்ந்துட்டீங்க; ஆளும் யோகம் இருக்கு!' - டி.டி.வி-யை குஷிப்படுத்திய திருவனந்தபுரம் அரண்மனை

`நாற்காலியில் உட்கார்ந்துட்டீங்க; ஆளும் யோகம் இருக்கு!' - டி.டி.வி-யை குஷிப்படுத்திய திருவனந்தபுரம் அரண்மனை
`நாற்காலியில் உட்கார்ந்துட்டீங்க; ஆளும் யோகம் இருக்கு!' - டி.டி.வி-யை குஷிப்படுத்திய திருவனந்தபுரம் அரண்மனை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு சமீபத்தில், திருவனந்தபுரம் அரண்மனையிலிருந்து அவருக்கு அழைப்பு வந்ததாம். எதற்காக அழைக்கிறார்கள் என்று தெரியாமல் அதைத் தள்ளித்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் அங்கே விசிட் அடித்திருக்கிறார். பலமான வரவேற்பு காட்டிய அரண்மனை வாரிசுகள், அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்களாம்.

அது அரண்மனை ராஜயோக நாற்காலியாம். வரும்காலத்தில் மக்கள் ஆட்சி நடத்த தகுதி உள்ளவர்களை முன்கூட்டியே பிரசன்னத்தில் தெரியவருமாம். அப்படி வருகிறவர்களை அரண்மனைக்கு அழைத்து திறம்பட ஆட்சி நிர்வாகம் நடத்துவது பற்றி அறிவுரை டிப்ஸ்களை சொல்லி அனுப்புவார்கள். அந்த வகையில், ’தினகரன் ஆத்மா பரிசுத்தமானது. அது ராஜயோகம் கொண்டது. வரும் காலத்தில் நாட்டை ஆளும் தகுதி படைத்தது’ என்று பிரசன்னத்தில் வந்ததாம். அதையடுத்து, தற்போது அரண்மனையில் வசிக்கும் வாரிசுகள் தரப்பில் தினகரனை வரவழைத்து நாற்காலியில் உட்கார வைத்தார்களாம்.

அதுபற்றி அங்கிருந்தவர்கள் கூறும்போது, ‘நேரு ஒரு தடவை இதில் வந்தமர்ந்தார், பின்னர்தான் பிரதமரானார். அடுத்து, நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இந்த சிம்மாசனத்தில் வந்தமர்ந்தார். பிரதமராகிவிட்டார். இப்போது நீங்கள் உட்காருகிறீர்கள். நிச்சயமாகத் தமிழகத்தை ஆளும் யோகம் உண்டு’ என்று சொல்லி குஷியூட்டினார்களாம். அதைத் தொடர்ந்து, நீண்ட நேரம் ஆட்சி நிர்வாகம் எப்படி நடத்த வேண்டும் என்று அட்வைஸ் தந்தார்களாம். ஆர்வமாகக் கேட்டுவிட்டு வந்தாராம் தினகரன். இவர் வந்து போனதை அரண்மனை தரப்பில் பத்திரிகை செய்தி அனுப்பினார்களாம்.