ஜீனி பரேவுக்கு முதன்முறையாகச் செடிகளை அறிமுகப்படுத்தியவர்கள் அவரின் அப்பாவும் அம்மாவும்தான். 1740-ம் ஆண்டு பிரான்ஸில் பிறந்த பரேவுக்குப் பள்ளிக்கல்வி அவசியம் என்று அவர்கள் நினைக்கவில்லை. `நீ எழுதி, படித்து என்ன செய்யப்போகிறாய்? எங்களுக்கு உபயோகமாக வீட்டிலேயே இருந்தபடி மருத்துவத் தொழில் படித்துக்கொள்' என்று சொல்லிவிட்டார்கள். மூலிகையைக் கொண்டு குணப்படுத்தும் முறை மட்டுமே அவர்களைப் பொறுத்தவரை மருத்துவம். எல்லா நோய்களுக்கும் இயற்கை தீர்வை வைத்திருக்கிறது என்பது அவர்களுடைய திடமான நம்பிக்கை. `நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் ஜீனி. எல்லா வகையான செடிகளையும் தெரிந்துகொள். ஒவ்வொன்றையும் அடி முதல் நுனி வரை படி. ஒவ்வொரு செடியையும் கடவுளாக நினைத்து வணங்கு. மனிதர்களிடம் நோய்கள் மண்டிக்கிடக்கின்றன. செடிகளிடம் தீர்வுகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த இரண்டையும் இணைப்பதே நம் பணி. புரிகிறதா?'

ஜீனி பரே ஒருபடி மேலே சென்று செடிகளைக் காதலிக்கவே தொடங்கி விட்டார். ஒரு மலரைக் காட்டிலும் உன்னதமான, பரிசுத்தமான ஒரு படைப்பு இந்த உலகில் இருந்துவிட முடியுமா? இலைகளின்மீது கையைப் படரவிடுவதைக் காட்டிலும் சிலிர்க்கவைக்கக்கூடிய இன்னோர் அனுபவம் இந்தப் பூமியில் இருக்கிறதா? அடுத்த பிறவி என்றொன்று வாய்க்குமானால் ஒரு புல்லின் நுனியாக இருந்துவிட முடிந்ததால் போதும் என்று பரவசப்பட்டுக்கொண்டார் பரே. எந்நேரமும் தோட்டத்திலும் காட்டுப் பகுதியிலும் பழியாய் கிடக்கும் ஜீனியை மூலிகைப் பெண் என்றே சுற்றிலும் உள்ளவர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.

ஒருநாள் ஃபிலிபர்ட் கோமர்சன் என்பவரை ஜீனி காட்டுப் பகுதியில் சந்திக்க நேர்ந்தது. தன்னைப் போலவே உலகை மறந்து ஃபிலிபர்ட்டும் செடி கொடிகளைத் தேடித் தேடி சேகரித்துக்கொண்டிருந்ததை ஜீனி கண்டார். இருவரும் உரையாட ஆரம்பித்தனர். `நான் தாவரவியல் ஆய்வாளர். விதவிதமான செடி வகைகளைச் சேகரிப்பது என் மனதுக்கு நெருக்கமான பொழுதுபோக்கு' என்றார் ஃபிலிபர்ட். `அது சரி, எல்லோரும் புகழும் மூலிகைக் பெண் நீங்கள்தானா? உங்களைப் பார்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். இனி நாம் இணைந்தே செடிகளை ஆராயலாமா? எனக்குத் தெரிந்ததை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்களுக்கு என்னைக் காட்டிலும் அனுபவம் அதிகம் என்பதால் உங்களிடமிருந்து நான் நிறைய கற்கமுடியும் என்று தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?'

அதற்குப் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள ஆரம்பித்தனர். இணைந்தே மூலிகைகளைத் தேடிச் சென்றனர். இணைந்தே இயற்கையை ஆராதித்தனர். ஃபிலிபர்ட் தன் மனைவியைச் சமீபத்தில் இழந்துவிட்டதை அறிந்து ஜீனி வருந்தினார். தன் புதிய நண்பரின் வாழ்வில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைத் தன் அன்பைக் கொண்டு நிரப்ப முயன்றார். இந்த அன்பு காதலாக மாறிக்கொண்டிருப்பதை இருவருமே அறிந்திருந்தனர். இருவரும் அதை வரவேற்கவும் செய்தனர்.

இரு ஆண்டுகள் கழிந்து பிரெஞ்சு அரசாங்கத் திடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது. `பிரெஞ்சு நாட்டின் புகழையும் செல்வத்தை யும் பெருக்கும்வகையில், உலகைச் சுற்றிவர இரண்டு கப்பல்களை அதிகாரபூர்வமாக நியமிக்கவிருக்கிறோம். புதிய பிரதேசங்களைக் கண்டறிந்து அவற்றை பிரான்ஸோடு இணைத்து நம் எல்லைகளை விரி வாக்குவதே இந்தப் பயணத் தின் நோக்கம். பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்கிறார்கள். அந்த வரிசையில் தாவரவியலில் நிபுணத்துவமும் ஆர்வமும் கொண்டவர்கள் எங்க ளோடு இணைய விரும்பி னால் விண்ணப்பிக்கலாம்.'

உடனே தனது விண்ணப் பத்தை அனுப்பிவைத்தார் ஃபிலிபர்ட். அவருடைய பெயர் இணைத்துக் கொள்ளப்பட்டது. `அப்படியானால் நான்?' என்று ஜீனி ஆதங்கத்துடன் கேட்டாரே தவிர, தன்னுடைய கேள்வியின் அபத்தம் அவருக்கு புரிந்துதான் இருந்தது. ஆண்கள் மட்டுமே இத்தகைய பயணங்களில் விண்ணப்பிக்க முடியும். பெண்களை பிரான்ஸ் தடை செய்திருந்தது. ஃபிலிபர்ட்டுக்கு ஆழமான வருத்தங்கள். தன்னுடைய உதவியாளரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் அனுமதி அவருக்கு வழங்கப் பட்டிருந்தது. இருந்தும் தன்னுடைய உதவியாளரும் ஆசானும் காதலியும் வாழ்க்கைத் துணையுமான ஜீனியை அவரால் அழைத்துச் செல்லமுடியாது என்பது கொடுமையானது இல்லையா?

ஜீனி அழுகையைக் கட்டுப் படுத்திக்கொள்ள முயன்றார். ஃபிலிபர்ட்டைப் பிரிந்திருக்க வேண்டுமே என்பது மட்டுமல்ல வருத்தத்துக்குக் காரணம். `நான் ஒரு பெண்ணாக இல்லாமல் போயிருந்தால், உலகம் முழுக்க உள்ள வனப்பகுதிகளையும் அங்கு படர்ந்திருக்கும் பச்சை பசுமைகளையும் ரசித்து மகிழ்ந்திருக்கலாம் அல்லவா? இயற்கையின் படைப்பாற்றலைக் கண்டு வியப்பதில் ஆண் பெண் வேறுபாடு எங்கே வருகிறது?'

அப்போது மின்னல் போல ஒரு யோசனை தோன்றியது. `நான் ஏன் ஓர் ஆணாக மாறக்கூடாது?'

`அதெப்படி முடியும்?' என்று சொல்ல நினைத்த ஃபிலிபர்ட் ஜீனியின் கண்களில் தென்பட்ட வெளிச்சத்தைக் கண்டதும் அமைதியானார். ஜீனி தயாராக ஆரம்பித்தார். கத்தரிக்கப்பட்ட துணி உருண்டை தயாரானது. தன் உடலின் மேல் பகுதியில் மம்மி போல் அடுக்கடுக்காகத் துணியைச் சுற்றிக்கொள்ளத் தொடங்கினார். ஃபிலிபர்ட் உதவிக்கு வந்தார். தலைமுடி கத்தரிக்கப்பட்டது. ஃபிலிபர்ட்டின் ஆடைகளை அணிந்துகொண்டார். மறுநாள் வரிசையாக நின்றுகொண்டிருந்தவர்களுக்கு மத்தியிலிருந்து ஜீனியைத் தன் உதவியாளராகத் தேர்ந்தெடுத்தார் ஃபிலிபர்ட். ஜீனி தன் பெயரை ஜான் என்று மாற்றிக்கொண்டார். இது நடந்தது 1766-ம் ஆண்டு.

லூயி ஆண்டனி போகன்வில்லா என்னும் ராணுவ ஜெனரலின் தலைமையில் ஈடோலி என்னும் பெயர்கொண்ட கப்பல் பிரான்ஸிலிருந்து கிளம்பியது. இந்த ஜெனரல் ஃபிலிபர்ட்டுக்கு நெருக்கமானவரும்கூட என்பதால் அவர் உதவியுடன் ஃபிலிபர்ட் தன் உதவியாளரைத் தன்னுடனே தங்கவைத்துக்கொண்டார். மற்ற நேரங்களில் ஜீனி கப்பலில் உள்ள மற்ற ஆண்களோடு சேர்ந்து பயணம் செய்தார். அவர் களோடு சேர்ந்து உண்டார். அவர் களுடைய பணிச்சுமைகளைப் பகிர்ந்துகொண்டார்.

எந்த வகையில் ஒரு பெண் ஆணிடமிருந்து வேறுபடுகிறார் என்று அவருக்குப் புரியவில்லை. `இவர்கள் செய்யும் எல்லாவற்றையும் என்னால் செய்ய முடிகிறது. கடினமாக உழைக்க முடிகிறது. கனமான பொருள்களைத் தூக்க முடிகிறது. நியாயப்படி ஒரு பெண்ணாகவே முழு சுதந்திரத்துடன் இந்தக் கப்பலில் நான் பயணம் செய்திருக்க வேண்டும். ஆனால், இது ஆண்களின் உலகமாக இருப்பதால் அவர்களே அதிகாரம்மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களே விதிகளை உருவாக்குகிறார்கள். அந்த விதிகள் அனைத்தும் பெண்களை விலக்கிவைக்கின்றன, பாரபட்சமாக நடத்துகின்றன. ஒரு பெண்ணாக இருப்பது இந்தக் கப்பலின் விதிமுறைகளின்படி பெருங்குற்றம் என்பதால் அந்த விதிகளை நான் வளைக்க வேண்டியிருக்கிறது. எதற்காக இந்தப் பொய் வேடத்தை நான் புனைய வேண்டும்? இந்தா எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு துப்பாக்கியை என்னிடம் ரகசியமாக ஃபிலிபர்ட் அளிக்கவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது?'

வெளிப்படையாக ஒருவரும் எதுவும் கேட்கவில்லை என்றாலும் சில பணியாளர்களுக்கு ஜீனியைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டது உண்மை. இவன் ஏன் நம்மோடு அதிகம் கலக்காமல் தள்ளியே இருக்கிறான்? ஏன் எப்போதும் ஃபிலிபர்டுடன் மட்டும் தங்குகிறான்? பகல், வெயில், இரவு எது வந்தாலும் ஏன் இறுக்கமான முழு ஆடைகளை அணிந்துகொள்கிறான்? ஏன் நம்மோடு இணைந்து குளிப்பதைத் தவிர்க்கிறான்?

ஜீனி தன்னுடைய உடலை மொய்த்த கூர்மையான விழிகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு பயணத்தின்மீது மட்டுமே கவனம் செலுத்த முயன்றார். அதற்காகத்தானே இத்தனை சிரமங்கள்? புதிய பிரதேசங்களில் கப்பல் தரை இறங்கும்போது பாய்ந்தோடி சென்று அங்கிருந்து தாவரங்களை ஆராய்ந்தார். புதிய வகை செடிகளைக் கவனமாகச் சேகரித்துக்கொண்டார். புதிய மலர்களை, கனி வகைகளை, மரங்களை நெருங்கிச் சென்று பார்வையிட்டார்.

கிட்டத்தட்ட இரண்டாண்டு காலப் பயணம் முடிவுக்கு வருவதற்குள் ஜீனி யார் என்பதை ஒருநாள் கண்டுபிடித்து விட்டார்கள். சில குறிப்புகளின்படி, தாகித்தி தீவில் ஒருமுறை கரை இறங்கும்போது அங்கிருந்த பழங்குடிகள், `வா பெண்ணே'
என்று ஜீனியை வரவேற்று அழைத்திருக்கிறார்கள். அதிர்ந்துபோன கப்பல் பணியாளர்கள் ஜீனியை இழுத்துக் கொண்டு போய் போகன்வில்லாவிடம் நிறுத்தியிருக்கிறார்கள்.

`ஆம், நான் பெண்தான்' என்று ஜீனி அவரிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார். `உன் உழைப்பும் திறமையும் போற்றத்தக்கது. பரவாயில்லை, இருந்துவிட்டுப் போ' என்று அவர் ஜீனியை மன்னித்துப் பயணம் முடிவடையும்வரை கப்பலில் பணியாற்ற ஒத்துழைத்திருக்கிறார் அவர். இதனால் மனம் நெகிழ்ந்த ஜீனி, பிரேசிலில் தான் கண்ட புதிய, அழகிய மலருக்கு போகன்வில்லாவின் பெயரைச் சூட்டினாராம். பிறகு கப்பல் மொரீஷியஸ் தீவைச் சென்றடைந்தபோது, ஜீனியும் அவர் கணவரும் இறங்கி அங்கேயே தங்கிவிட்டனர். தன் கணவரின் மறைவுக்குப் பிறகு ஜீனி மீண்டும் பிரான்ஸ் திரும்பினார். 1807-ம் ஆண்டு தனது 67-வது வயதில் ஜீனி இறந்துபோனார்.

ஜீனியை போகன்வில்லா மன்னித்து விட்டாலும் கப்பலில் இருந்தவர்கள் மன்னிக்கத் தயாராகயில்லை. ஒரு குழு சினம்கொண்டு ஜீனியை இழுத்துச் சென்று கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்து பழி தீர்த்துக்கொண்டது என்று வாதிடுகிறது ஜீனியின் வாழ்வையும் அவர் பயணத்தையும் ஆராய்ந்துள்ள ஒரு புதிய புத்தகம். அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு நிகழ்வை விவரித்தாலும் வலுவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஆதாரங்களை இந்நூல் அளிக்கவில்லை என்கிறார்கள் விமர்சகர்கள். அப்படி நடந்திருக்க முடியாது என்று மறுக்கவும் அவர்களால் முடியவில்லை. ஜீனியின் வாழ்வும் பணிகளும் இன்னும் இருளில் மூழ்கிக்கிடப்பதையே இத்தகைய மாறுபட்ட, ஒன்றோடொன்று முரண்பட்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இன்றைய தேதியில், தாவரவியல் துறையில் இயங்கியவர்கள் குறித்து ஆராய்பவர்களின் நினைவுகளில் மட்டுமே ஜீனி பரே தங்கியிருக்கிறார். மற்றபடி, உலகை வலம்வந்த முதல் பெண் என்று வரலாறு அவரை நினைவில்வைத்திருக்கிறது. இதையும் சில விமர்சகர்கள், ‘நமக்குத்தெரிந்து முதல் பெண்’ என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று திருத்துகிறார்கள்.

போகன்வில்லா, ஃபிலிபர்ட் ஆகியோரின் பயணக் குறிப்புகளிலிருந்தே ஜீனியை நம்மால் உயிர்ப்பித்துக் கொண்டுவர முடிகிறது. மற்றபடி ஜீனி சேகரித்த செடிகளின் மாதிரிகள் இன்றளவும் பயன்படுகின்றன என்கிறார்கள் அத்துறை சார்ந்தவர்கள். `அதுபோதும் எனக்கு, வேறெதுவும் தேவையில்லை' என்றுதான் அநேகமாக ஜீனியும் சொல்லியிருப்பார்.