Published:Updated:

ஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு! - அனுராதா

ஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு! - அனுராதா
பிரீமியம் ஸ்டோரி
ஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு! - அனுராதா

உழைப்பின் உறுதிகு.ஆனந்தராஜ் - படம் : க.தனசேகரன்

ஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு! - அனுராதா

உழைப்பின் உறுதிகு.ஆனந்தராஜ் - படம் : க.தனசேகரன்

Published:Updated:
ஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு! - அனுராதா
பிரீமியம் ஸ்டோரி
ஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு! - அனுராதா

“ரெண்டு வயசுல தொடங்கின சவால் வாழ்க்கை, 30 வருஷங்களுக்கு மேலாகியும் தொடர்ந்திட்டிருக்கு. இந்த எதிர்நீச்சல்  காலம், என் குறை பாட்டை வென்று எனக்கு வாழக் கத்துக்கொடுத்திருக்கு” என்கிற அனுராதாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கை துளிர்விடுகிறது. சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான இவர், அரசுப் பணியில் இருக்கிறார். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வே எழுத முடியாத சூழலிலிருந்து, இன்று சேலம் வேளாண் பொறியியல் துறை உதவியாளராக உயர்ந்திருப்பது வரை இவர் கொடுத்திருக்கும் உழைப்பு அபாரம்.   

ஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு! - அனுராதா

‘`ரெண்டு வயசில் எனக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. பிளம்பர் வேலை செய்திட்டிருந்த அப்பா, உடல்நிலை சரியில்லாம இறந்துட்டார். அப்போ எனக்கு ஏழு வயசு. அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலைபார்த்த அம்மா விமலா, குடும்பத்தைத் தாங்க ஆரம்பிச்சாங்க. எங்கம்மாவைப் பற்றிச் சொல்லாம என் வார்த்தைகள் முழுமையடையாது. அம்மா கூடப் பிறந்தவங்க நாலு பேர். அம்மாவோட சின்ன வயசுலேயே தாத்தா இறந்துட்டதால, மூத்த பொண்ணான அம்மா, தன் கூடப் பிறந்தவங்க எல்லோருக்கும் கல்யாணம் பண்ணிவெச்சுட்டு கடைசியா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுக்கு அப்புறமும் வாழ்க்கை அவங்களுக்கு வசந்தமாகலை. எனக்கு போலியோ பாதிப்பு, அப்பாவின் இறப்புனு அத்தனை கஷ்டங்
களைக் கடந்தபோதும் தளர்ந்துபோகலை. ‘உன்னால முடியாதது எதுவுமில்லை’னு எனக்கும் தன்னுடைய விடாமுயற்சியை ஊட்டிட்டே இருப்பாங்க. அவங்களாலதான் அடுத்தடுத்த பயணங்களும் பாதைகளும் என் கண்ணுக்குத் தெரிஞ்சது’’ என்கிற அனுராதா தொடர்கிறார்...

‘`அம்மாவும் பாட்டியும் என்னை சிகிச்சைக்காகப் பல இடங்களுக்குக் கூட்டிட்டுப்போனாலும், பலன் எதுவும் கிடைக்கலை. இடுப்புக்குக் கீழ முழுமையா செயலிழந்துடுச்சு. கடும் பொருளாதாரச் சிரமங்களையும் மீறி, ஆபரேஷன், ஷாக் ட்ரீட்மென்ட், ஆயுர்வேதம்னு அம்மாவும் பாட்டியும் எனக்காகப் பாடுபட்டாங்க. படுத்த படுக்கையிலிருந்த நான், தவழ்ந்து நடக்கிற அளவுக்கு முன்னேறினேன். ட்ரை சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டு, சுயமா வெளியிடங்களுக்குப் போக வரத் தொடங்கினேன்.

ப்ளஸ் டூ படிச்சுட்டிருந்த நேரத்தில், திடீர்னு எனக்கு உடல்நிலை சரியில்லாம போக, பரீட்சை எழுத முடியலை. அதுக்காக வீட்டிலேயே முடங்கிடாம இருக்க, கம்ப்யூட்டர் உள்பட பல கோர்ஸ்கள் கத்துக்கிட்டேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்துல கரஸ்ல பி.காம், எம்.காம் மற்றும் பி.ஏ இந்தி முடிச்சேன். இதுக்கிடையில் அம்மா பணி ஓய்வு பெற்றாங்க. பாட்டி இறந்துட்டாங்க. அப்போது அம்மா, ‘ஒரு நாள் நானும் இப்படி உன்னை விட்டுப் போகலாம், உனக்கு எப்போதும் முதல் துணை நீதான் என்பதை மறக்காதே’னு சொல்லி, அடுத்தடுத்து படிக்க ஊக்கப்படுத்திட்டே இருந்தாங்க” என்பவர் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகியிருக்கிறார்.

“சேலத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கோச்சிங் கொடுக்கும் அதியமான் சாரின் அறிமுகம் கிடைச்சது. அவர்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டேன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைக்கும் போயிட்டிருந்தேன். கூடவே, அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமப் போக, வீட்டு வேலை, ஆபரேட்டர் வேலை, அம்மாவுக்கான பணிவிடைகள், இதுக்கு நடுவுல நான்கு வருடங்கள் நிறைய போட்டித் தேர்வுகள்னு எழுதிட்டிருந்தேன்’’ என்பவரின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. ஆனால், அதை அனுபவிக்க முடியாத அளவுக்கு ஓர் இழப்பும் நிகழ்ந்திருக்கிறது.

“2012-ல் குரூப் 4 எக்ஸாம்ல தேர்வாகி, சேலம் வேளாண் பொறியியல் துறையில டைப்பிஸ்ட்டா சேர்ந்தேன். வேலைக்குச் சேர்ந்த மூணே மாசத்துல அம்மாவோட உடல்நிலை ரொம்ப மோசமாகி கோமா நிலைக்குப் போயிட்டாங்க. என்னைச் சுயமா செயல்படுற அளவுக்கு ஆளாக்கின அவங்களை, ஒரு குழந்தையைப்போல பார்த்துக் கிறதை என் வாழ்நாள் பாக்கியமா நினைச்சு செய்தேன். 2015-ல் அம்மா இறந்துட்டாங்க. ஆனா, எந்தச் சூழல்லயும் தளராம வாழ்க்கையை எதிர்கொள்கிற வைராக்கியத்தை  அவங்க எனக்கு வாழ்ந்துகாட்டி கத்துக்கொடுத்துட்டுப் போயிருந் ததால, அதிலிருந்து மீண்டு வந் தேன்’’ என்கிறவருக்கு, 2016-ம் ஆண்டு வேளாண் பொறியியல் துறை உதவியாளராக புரமோஷன் கிடைத்திருக்கிறது. இதற்கிடையே ப்ளஸ் டூ முடித்து, பி.ஏ ஆங்கிலமும் படித்திருக்கிறார்.

“அம்மா இருக்கிறப்பவே எனக்குக் கல்யாணம் பண்ணி டணும்னு ஆசைப்பட்டாங்க. நான், கவர்ன்மென்ட் வேலைக்குப் போன பிறகுதான் கல்யாணம் என்பதில் உறுதியாயிருந்தேன். இப்போ திருமணம் என்பதைவிட, சக மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்கு என்னாலான உதவிகளை, வழிகாட்டல்களைச் செய்யணும் என்பதில்தான் அதிக ஆர்வம் இருக்கு. குரூப் 2 எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணணும் என்பது முதல் இலக்கு. அடுத்த முறை நாம சந்திக்கும்போது, குரூப் 2 கிரேடு ஆபீஸர் அனுராதாவா உங்களுக்கு ஸ்வீட் கொடுக்கணும்’’ என்று புன்னகைக்கிறார் அனுராதா.

கேட்கும்போதே இனிக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!