Published:Updated:

காந்தி முதல் காந்தி வரை...

காந்தி முதல் காந்தி வரை...
பிரீமியம் ஸ்டோரி
காந்தி முதல் காந்தி வரை...

காந்தி முதல் காந்தி வரை...

காந்தி முதல் காந்தி வரை...

காந்தி முதல் காந்தி வரை...

Published:Updated:
காந்தி முதல் காந்தி வரை...
பிரீமியம் ஸ்டோரி
காந்தி முதல் காந்தி வரை...

மகாத்மா காந்தி தொடங்கி ராகுல்காந்தி காலம் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த பேனா ஓய்வெடுத்திருக்கிறது. பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், தன் 95-வது வயதில் ஆகஸ்ட் 22-ம் தேதி தனது மூச்சை நிறுத்திக்கொண்டார். 

காந்தி முதல் காந்தி வரை...

குல்தீப் 95 வயதிலும் மரணத்தின் விளிம்பிலும் கூட விடாமல் (தன் இறுதி நாளுக்கு முந்தைய நாள் வரை) எழுதிக்கொண்டிருந்தார்.  அவர் இறந்துபோன அதே நாளில் நாக்பூரின் ‘லோக்மட் டைம்ஸ்’ பத்திரிகையில் அவருடைய கட்டுரை வெளியானது. அதில் ‘‘இந்துத்துவ தத்துவங்களை பரப்புவதைவிட, பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்’’ என்று எழுதியிருந்தார். குல்தீப்பின் சிறப்பு அதுதான்.

தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் 1923-ல் பிறந்தவர் குல்தீப் நய்யார். பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்களைக் கண்ணால் கண்டவர்.  சட்டம் படித்திருந்தாலும் எழுத்தின்மீதான ஆர்வத்தால், பத்திரிகையாளராகப் பரிணமித்தவர்.

உருது மொழிமீது தனிக் காதல் கொண்டிருந்த நய்யார், முதன் முதலில் ‘அஞ்சாம்’ என்ற ஓர் உருது நாளிதழில் நிருபராகச் சேர்ந்தார். தன் அயராத உழைப்பாலும், ஆற்றலாலும், நேர்மையாலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட இந்தியாவின் பல முன்னணிப் பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். சுமார் 80 பத்திரிகைகளில் சிறப்புப் பத்தி எழுதிவந்தார். சமூகம் மற்றும் அரசியல் தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகள் உலக அளவில் உற்றுநோக்கப்பட்டன. 

இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சியைக் கடுமையாக எதிர்த்து எழுதியும் பேசியும் வந்ததால் மிசாவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

பத்திரிகைப்பணியுடன் அவர் நின்றுவிடவில்லை. மனித உரிமைகள் சார்ந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியிருக்கிறார். பிரிட்டனுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார். 1997-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டார். 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘பியாண்ட் த லைன்’ என்கிற அவரது சுயசரிதை நூல் மிகவும் பிரபலமானது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய நய்யார், “இதழியலை வேறுமாதிரி வடிவமைக்க அதிகாரச் சந்தை முயற்சி செய்கிறது. ஆனால், கலாசாரம் சக்திவாய்ந்தது. அது, வரலாற்றை மீண்டும் தன் இடத்துக்குக் கொண்டுவந்துவிடும். கார்ப்பரேட் சந்தையின் அழுத்தம் இருந்தபோதிலும், ஊடகம் தன் இயல்பான மொழியைப் பேசும்” என்றார். அந்த நம்பிக்கைதான் குல்தீப் நய்யார்.

ஆ.பழனியப்பன்