புத்தகத்தின் பெயர் : 80,000 Hours

ஆசிரியர்: Benjamin J.Todd

பதிப்பகம் : Createspace Independent Pub

உங்களுடைய வாழ்க்கையில் கிட்டத்தட்ட 80,000 மணி நேரத்தைச் செலவிடுவது நீங்கள் பணிசெய்யும் இடத்தில்தான் (40 வருட காலம், சராசரியாக வருடத்திற்கு 50 வாரங்கள், வாரத்திற்கு நாற்பது மணி நேர வேலை என்ற கணக்கீட்டில்). அதனாலேயே உங்களுடைய கேரியர் குறித்த முடிவு என்பது (என்ன வேலைக்குப் போகப்போகிறீர்கள், என்ன துறையைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள் என்பது போன்றவை), உங்கள் வாழ்க்கையில் மிகமுக்கியமான முடிவாகிறது என ஆரம்பிக்கிறது ‘80,000 ஹவர்ஸ்’ எனும் இந்தப் புத்தகம்.

சரியான அறிவுரை

இவ்வளவு முக்கியமான முடிவை எடுப்பதற்குச் சரியான அறிவுரை கிடைப்பதேயில்லை. வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி, அதைப் பெற முயற்சி செய்வது எப்படி என்பதற்கான அறிவுரைகள் கிடைக்கிறதே தவிர, எந்தத் தொழிலில் வேலைதேடுவது என்பது குறித்த அறிவுரைகள் சொல்ல கிட்டத்தட்ட யாருமே இல்லை. பலரிடம் இதுகுறித்துப் பேசிப்பார்த்தோம். ஒன்று, அவர்கள் நண்பர்களிடத்தில் கலந்தாலோசித்து முடிவு எடுத்திருக்கின்றனர் அல்லது அவர்களாகவே சொந்த முடிவை எடுத்திருக்கின்றனர். நாங்கள் இதுகுறித்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் களுடன் இணைந்தோம். 80000hours.org என்ற இணையதளம் இதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு ஆயிரக்கணக்கானோர் எங்களுடைய ஆலோசனையின்படி தங்களுடைய கேரியரை மாற்றியமைத்தனர். இந்தப் புத்தகத்தில் நாங்கள் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம் என்கின்றனர் ‘80000 ஹவர்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதிய பெஞ்சமின் டாட் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள். இது ஒரு கையேடு உருவத்தில் எழுதப்பட்ட புத்தகம். ஆரம்பத்திலேயே எப்படி இந்தக் கையேட்டை உபயோகிப்பது என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது.

கனவு வேலை என்றால் என்ன? தனியொருவன் பணியிடத்தில் பெரிய வித்தியாசத்தை உருவாக்க முடியுமா? உலகத்தில் தீர்க்கப்படவேண்டிய முக்கியமான பிரச்னைகள் என்னென்ன? எந்த துறையில் பணியாற்றுவதன் மூலம் நீங்கள் உலகில் நிறைய பேருக்கு உதவமுடியும்? எந்த வேலை உங்களை எதிர்காலத்தில் பிரகாசிக்கச் செய்யும்? உங்களுடைய கேரியர் பிளானை வடிவமைப்பது எப்படி? வேலையைத் தேடிக்கொள்வது எப்படி என்பது போன்ற பல விஷயங்களையும் இந்தப் புத்தகம் தெளிவுபடுத்துகிறது.

கனவு வேலையைக் கண்டறிதல்

கனவு வேலை என்றால் என்ன? அதை எப்படிக் கண்டறிவது என்ற கேள்விக்கு நாங்கள் எங்கள் ஆய்வின் மூலம் ஆறு முக்கிய காரணி களைக் கண்டறிந்துள்ளோம். பேரார்வம் (passion) என்பது இதில் இல்லவே இல்லை. எனக்குப் பிடித்ததைச் செய்து நான் சாதிப்பேன் என்று நினைப்பதே தவறு. உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் உங்களை எரித்து சாம்பலாக்கிவிட வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை நாங்கள் சொல்லவில்லை. எங்களுடைய நீண்ட ஆராய்ச்சி சொல்கிறது என்கிறார் ஆசிரியர். உதாரணத்திற்கு ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஜென் புத்த சமயம் மிகவும் இஷ்டமான தாக இருந்தது. அதேபோல் அமெரிக்க அரசின் செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் என்ற பெரிய பதவியை வகித்த கோன்டலீசா ரைஸ் என்ற பெண்மணி அரசியலைப் பாடமாக எடுத்துப் படிப்பதற்கு முன்னால் ஒரு திறமைமிகு பாரம்பர்ய இசைக் கலைஞராக இருந்தார். நீங்கள் பணியில் இருந்து கொண்டே உங்களுடைய பேரார்வமான விஷயம் ஒன்றைக் கண்டறிந்து செயலாற்ற முடியும் என்பதுதான் நிஜம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பலருக்கு உதவும் வகையான ஒரு விஷயத்தில் நீங்கள் பேரார்வம் கொள்ளவேண்டும் என்பதுதான்.

அதேபோல் கனவு வேலை என்பது அதிக வருமானத்தைத் தருவது என்ற தவறான எண்ணமும் பலரிடம் இருக்கிறது. தற்போது நிறைய சம்பளம், எதிர்காலத்திலும் நிறைய சம்பளம், அதிகமான மன அழுத்தம், மோசமான வேலை பார்க்கும் சூழல் என்பதெல்லாம் ஒட்டிப்பிறந்த பிறவிகள்தான். மனதுக்குத் திருப்தியாக இருப்பதுதான் கனவு வேலையே தவிர, மேலே சொன்ன விஷயங் களை உள்ளடக்கியது இல்லை. பணம் உங்களைச் சந்தோஷமாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்றாலும், பணத்தால் அதிகரிக்கும் சந்தோஷத்தின் அளவு சற்றுக் குறைவானதேயாகும்.

குறைந்த மன அழுத்தம் தரும் வேலை வேண்டும் என்று பார்த்தால், எந்த வேலை குறைந்த மன அழுத்தத்தைத் தருவதாக இருக்கும்? அப்படி ஒரு வேலை இருக்கிறதா என்ன என்று கேட்டால், இல்லை என்றே சொல்லவேண்டும். ஆனால், வேலை பார்க்கும் விதத்தில் மன அழுத்தத்தைக் குறைவாக வைக்க முடியும். அமெரிக்க அரசு மற்றும் ராணுவ பணியாளர் களிடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போது சாதாரணமாக எக்கச்சக்கமானவர்களை நிர்வகிக்க வேண்டி யிருந்தாலும், குறைந்த நேரமே தூங்கினாலும், நிறைய விஷயங்கள் அவர்கள் முன்னால் தீர்க்க வேண்டியவையாக இருந்தாலும், பெரிய அளவிலான மன அழுத்தத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், செய்யும் வேலையில் நல்லதோர் அதிகாரமும் கட்டுப்பாடும் கொண்டிருப்பதாலும், அவர்களுடைய பணியை அவர்களே திட்டமிட்டுச் செய்துகொள்வதாலும், மாற்றங்களை எப்படி எதிர் கொள்வது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதாலும் மட்டுமே இது சாத்தியமாகிறது என்று கண்டறியப் பட்டது.

அப்படியென்றால் கனவு வேலை என்றால் எதைத்தான் சொல்வது என்று கேட்டால், கனவு வேலை என்பது ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் செயல்பட முடிந்ததாகவும், திறமைக்கு ஏற்ற சவால்களை நம்முன்னே கொண்டுவந்து நிறுத்தி தொடர்ந்து நம்மை ஈடுபாட்டுடன் வைத்திருப்ப தாகவும், ஆதரவுக்கு நல்ல நண்பர்கள் மற்றும் குடும்பத்தைக் கொண்டிருப்பதாகவும், நம்முடைய இயல்பான திறமையைத் தாண்டி சில விஷயங் களைச் சாதித்து காட்டச்சொல்லும் சூழல்களை வழங்குவதாகவும், இதைச் செய்வதில் இவர் கில்லாடி என்று சொல்லும் அளவுக்கு நமக்குப் பெயரைப்பெற்றுத் தருவதாகவும் இருக்கவேண்டும்.

வேலை என்பது நம்மை முழுக்க ஈடுபடுத்திக்கொள்ளும் அளவிலானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாகவும், எப்படி எப்போது செய்யவேண்டும் என்பதைச் சுதந்திரமாக முடிவு செய்து கொள்ளும்படியும், ஒரே மாதிரியான வேலைகள் இல்லாமல் அவ்வப்போது பல மாறுதல்கள் களைக் கொண்டதாகவும், எப்படி இருக்கிறது வேலை என்பது குறித்த நியாயமான பின்னூட்டம் கிடைக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

மனத் திருப்தியுடன் வேலை பார்க்கவேண்டுமென்றால் நாம் செய்யும் வேலையில் நாம் கில்லியாக இருக்கவேண்டும். அப்போதுதான் சம்பளத்தில் ஆரம்பித்து எந்த வேலை நமக்கு வழங்கப்படுகிறது என்பதுவரை நாம் தெளிவான பெறுதல்களைக் கொண்டிருப்போம். உங்களுக்கு வரைவது மிகவும் பிடிக்கும் என்றாலும் அதில் கில்லி யாகத் திறமை கொண்டிருக்க வில்லையென்றால் உங்களைப் பற்றியோ கம்பெனியைப் பற்றியோ சற்றும் கவலைப்படாத போரடிக்கும் கார்டூனிஸ்ட்டாக வளைய வந்து கொண்டிருப்பீர்கள் இல்லையா?

வேலையில் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது பிறருடைய தன்னார்வ ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். இந்தவித தன்னார்வ ஒத்துழைப்பே வேலையில் திருப்தி யாக இருக்க பெரியதொரு காரணி யாக இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.

நெகட்டிவ் விஷயங்கள்

ஒரு சிலவிஷயங்கள் நாம் செய்யும் பணியில் சற்று பெரிய அளவிலான நெகட்டிவான விஷயங்களாகும். உதாரணத்திற்கு, வீட்டிலிருந்து பணியிடத்திற்கு செல்ல அதிக தூரம் இருத்தல் (ஒரு மணிநேர பயணத்திற்கு மேலாக இருத்தல்), பணியிடத்தில் கணக்கில்லாமல் நேரம் செலவிட நேர்தல், சம்பளத்தை ஏனையவருடன் ஒப்பிட்டால் அது உங்கள் தொண்டையை அடைக்கச்செய்தல், வேலையில் நிரந்தமற்ற நிலை போன்றவை முக்கியமான நெகட்டிவ் விஷயங்களாகும். ஆனாலும், பணியிடத்தில் இருக்கும் மற்றபல நல்ல விஷயங்கள் இவற்றை ஓரளவுக்கு மறக்கச்செய்துவிடும் என்கிறார் ஆசிரியர்.

வேலை என்பது நம்முடைய மீதமிருக்கும் வாழ்க்கை முழுவதற்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கவேண்டும். மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உதாரணத்திற்கு, உங்கள் சம்பளம் வாழ்க்கையை ஓட்ட போதுமானதாக இருக்கும் அதேநேரத்தில், உங்களுக்குக் கிடைக்கும் உபரி நேரத்தில் நீங்கள் உங்களுக்குப் பிடித்த பல விஷயங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கூட இருக்கலாம். அதனால் இருக்கும் வேலை எப்படி நம்முடைய எதிர்பார்ப்புடன் ஒத்துப்போகிறது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் என்கிறார் ஆசிரியர்.

ஒரு கையேடுதனைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில் ஒன்பது பிற்சேர்க்கைகள் இருக்கிறது. அவை இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தெளிவாகச் சொல்கிறது.

வேலை தேடுவோரும், நாம் இருக்கும் வேலை சரியானதுதானா என்ற சந்தேகம் கொண்டிருப்போரும் (யாருக்குத்தான் இல்லை இந்த சந்தேகம்!) தங்களுடைய கேரியர்தனை வளமைப்படுத்திக்கொள்ள கட்டாயம் ஒரு முறை படிக்க வேண்டிய புத்தகம் இது.

நாணயம் விகடன் டீம்