பாபு என்ற பெயரை உங்களால் எவ்வளவு மென்மையாக உச்சரிக்க முடியுமோ அதைக்காட்டிலும் நூறு மடங்கு மென்மையானவன் பாபு எனும் கவிஞன். பூக்களுக்கு நடுவே அமர்ந்துகொண்டு பொழுதெல்லாம் பூக்களைத் தொடுத்ததால் இந்த இயல்பு வாய்த்திருக்கலாம்.இன்று அவனின் இறுதி ஊர்வலப் பாதையில் தூவப்படும் பூக்கள், கால்களால் நசுக்கப்படுவதை ஒருபோதும் அவன் ஒப்புக்கொள்ளமாட்டான். Sorry பாபு!

வே.பாபு, தமிழ் நவீன இலக்கிய உலகில் ‘தக்கை’ பாபு என்று அறியப்படுகிறவர். ‘தக்கை’ என்ற சிற்றிதழையும் பதிப்பகத்தையும் நடத்தி வந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு விமர்சனக் கூட்டம் நடத்தியவர். தொடர்ச்சியான இலக்கியச் செயல்பாட்டாலும் தனிப்பட்ட உறவாலும் தமிழ் இலக்கிய ஆளுமைகள் அத்தனை பேரின் அன்பையும் பெற்றவர். இடது அரசியல் நம்பிக்கைகொண்டவர். வாழும்போதே கவிதைகளில் ஒரு பாத்திரமாக அதிகமாக இடம்பெற்ற கவிஞர் என்று பாபுவைச் சொல்ல முடியும். சேலம் ‘சிவா’ லாட்ஜில் ஓர் அறையை இலக்கியவாதிகளுக்கான ‘வேடந்தாங்கலாக’ ஆக்கி வைத்திருந்தவர் பாபு. ‘மதுக்குவளை மலர்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பினை வாசித்தவர்கள் அவரை, அவரது வாழ்வை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள முடியும்.

‘உலகின் ஆகச்சிறந்த / சுதந்திரவாதியென
குடும்பம் இல்லாதவன் / பெருமைகொள்கிறான்
அவன் இஷ்டப்படி / விழிக்கிறான் உண்கிறான்
வயிறுமுட்டக் குடிக்கிறான்
“உங்களோடு யாரும் வரலையா?”
எனும் டாக்டரின் கேள்வியை
யாரிடம் சொல்வதென / எண்களைத் துழாவுகிறான்.’

இந்தக் கவிதைக்கும் பாபுவின் வாழ்க்கைக்கும் கூப்பிடும் தூரம்தான். சில நாள்களாக ‘பிரஷர்’ மாத்திரை எடுத்துக்கொள்ளாததின் விளைவாய் மூளையில் ரத்தம்கட்டிக்கொள்ள, உடல்நலமற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை கைகொடுக்காமல் 10.11.2018 அன்று மாலை 6.03 மணிக்கு இயற்கையில் கலந்துவிட்டார்.

‘மதுவிடுதி ஜன்னலிலிருந்து
பார்த்தால்
அந்தப் பாலம்
வருக வருக என்கிறது
நூற்றியெட்டின் சைரன்.’

வே.பாபு சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதிய கவிதை இது. மரணத்தையும் அழகியலாக்கி சக மனிதருக்கு வழங்கும் பேறு கவிஞனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது, பாபுவுக்கு அஞ்சலி!

வெய்யில் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி