புத்தகத்தின் பெயர் : Brutal Simplicity of Thought

ஆசிரியர் : Lord Saatchi

பதிப்பகம் : Ebury Press

அதிதீவிரமாக முனைந்து எதையும் எளிமைப்படுத்தும் சிந்தனையின் மகத்துவத்தையும், அது எப்படி உலகத்தை மாற்றியது என்பதையும் சொல்லும் புத்தகம் ‘ப்ரூட்டல் சிம்ப்ளிசிட்டி ஆஃப் தாட்.' அதிதீவிர எளிமைப்படுத்தும் சிந்தனை எப்படி உலகை மாற்றியது என்பதைப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக்கொண்டு சொல்கிறது இந்தப் புத்தகம். ஒரு பக்கத்திற்கு ஒரு விஷயம் என்று நான்கே வரிகளைக் கொண்டிருப்பதால் புத்தக அமைப்பிலும் தீவிர எளிமையைக் கொண்டி ருக்கிறது எனலாம். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் புத்தகம் சாட்சி நிறுவனத்தில் பணிக்குச் சேர்பவர்களுக்கான பயிற்சிக்கு உபயோகப்படுத்தப்பட்டு, தொடர் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கேள்வி - பதில் அடிப்படையில் இருக்கும் இந்தப் புத்தகம் சுவாரஸ்யமான பல தகவல்களை நமக்குத் தருகிறது.

நடக்கவே வாய்ப்பில்லாத விஷயங்களை நடத்த நீங்கள் நினைத்தீர்கள் என்றால், அதிதீவிர எளிமைப்படுத்துதல் என்ற ஒரு செயலே உங்களுக்கு உதவுவதாக இருக்கும் என்று சொல்லி ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

இந்த நிலையை அடைய வெற்றுப்பேச்சு, அற்பமான சிந்தனை, சின்ன விஷயங்களில் நாட்டம் போன்றவையெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்காத விஷயமாக இருக்க வேண்டும். அப்படி ஆன பின்பே உங்களுடைய மூளை வைக்கோலில் இருந்து, நெல்மணிகளை பிரித்துத்தரும் கதிரடிக்கும் இயந்திரமாக மாற ஆரம்பிக்கும்.

வின்ஸ்டன் சர்ச்சில் எளிமையின் மகத்துவத்தை முழுவதுமாக உணர்ந்த ஒரு மனிதர். அதனாலேயே அவர் அடிக்கடி ப்ளேஸ் பாஸ்கல் என்பவர் அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதத்தில் சொன்ன விஷயமான, “எனக்குச் சிறிய அளவிலான குறைந்த வார்த்தைகள் கொண்ட கடிதங்கள் எழுத நேர மில்லை. அதனால்தான் அதிக வார்த்தைகள் கொண்ட பெரிய கடிதங் களை எழுதுகிறேன்" என்பதை பலமுறை நினைவு கூர்ந்துள்ளார். ஏனென்றால், எளிமைப்படுத்துதலில் உள்ள சிரமத்தை அவர் முழுவதுமாக உணர்ந்திருந்தார்.

எளிமைப்படுத்துதல் என்பது ஒரு வழிமுறை அல்ல. அது ஒரு பரீட்சை. அது துல்லியத்திற்கான வழி. பலவிஷயங்களை அது நிர்மூலமாக்கவல்லது. ஒருமுறை அமெரிக்கா, பிரிட்டனுக்கு உதவி செய்ய வேண்டிய நிலை. அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மிக எளிமையான வார்த்தைகள் மூலம் அதை விளக்கினார். கடன் மற்றும் குத்தகை என்ற இரண்டு வார்த்தைகள்தான் அது. இதை சற்றே விளக்க அவர் ஓர் உதாரணத்தைச் சொன்னார்.

என்னுடைய பக்கத்துவீட்டில் தீ பிடித்துவிட்டது. என்னிடம் அவருக்குத் தேவையான நீளமான தோட்டத்திற்கு தண்ணீர்விடும் பிளாஸ்டிக் ஹோஸ் இருக்கிறது. அதை உடனடியாக அவருக்குக் கொடுத்துத் தீயை அணைக்க உதவ வேண்டுமே தவிர, அந்த நேரத்தில் அவரிடம், அண்ணே, எங்கள் வீட்டில் ஹோஸ் இருக்கிறது. அதன் விலை பதினைந்து டாலர். எனக்கு பதினைந்து டால ரெல்லாம் வேண்டாம். தீயை அணைத்துவிட்டு பத்திரமாக ஹோஸை திருப்பிக்கொடுத்து விடுங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டி ருக்கக்கூடாது. ஒரு சிறிய தீ மற்றும் ஹோஸின் கதை, மீதம் நடந்த தெல்லாம் என்னவென்று வரலாறு சொல்கிறது.

மிகவும் சக்திவாய்ந்த கோஷங்கள் எல்லாம் எளிமையான வாசகங்களே. உங்கள் நாட்டுக்கு நீங்கள் தேவை, எனக்கு ஒரு கனவு இருக்கிறது, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற வாசகங்கள் எந்த அளவுக்கு அதன் பின்னால் உள்ள எண்ணங்களை வலிமையாகக் கடத்து கின்றன. கண் தெரியாத பிச்சைக்காரர் ஒருவர், எனக்கு கண் தெரியாது என்று தன்னுடைய தொப்பியில் எழுதி வைத்துக் கொண்டு பார்க்கில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்தார். பெரிய அளவில் யாரும் அவரைக் கவனிக்கவில்லை. ஒரு விளம்பர நிறுவன பணியாளர் அவருடைய தொப்பியின் வாசகத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்தார். ‘இது வசந்த காலம். எனக்குக் கண் தெரியாது' என்பதுதான் அந்த மாற்றம். அதிகமான நபர்கள் அதைப்படித்த பின்னர் உதவி செய்ய ஆரம்பித்தனர். எளிமையான விஷயங்கள் அனைவரையும் சென்றடைகிறது; உலகத்தை வியாபித்துக்கொள்கிறது என்கிறார் ஆசிரியர்.

பல்வேறு எளிமையான வாசகங்களையும் அவற்றின் ஆழ்ந்த அர்த்தங்களையும் இந்தப் புத்தகத்தில் வரிசைப்படுத்தியுள்ளார் ஆசிரியர். இறந்தவர்களிடம் இருந்து எதையும் கேட்க முடியாது. பிறக்காத குழந்தையிடம் பேசமுடியாது. அப்படி என்றால் வருங்கால சந்ததியருக்குக் கொண்டு சேர்ப்பது எப்படி? எழுதுவதே வழி!

இன்றைக்கு நாம் சாதாரணமாக உபயோகிக்கும் டிப் டீ பைகள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டன தெரியுமா? டீ போட வேண்டும் என்றால், அதைக் கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி குடிப்பதுதான் சம்பிரதாயமாக இருந்த காலம் அது. நியூயார்க் நகரில் இருந்த தாமஸ் சல்லிவன் எனும் டீத்தூள் வியாபாரி, லாபக்குறைவு காரணமாக டின்களில் டீத்தூளை மாதிரிக்காக டின்களில் போட்டு அனுப்பாமல், சிறிய பட்டு சாஷேக்களில் அனுப்ப, சாஷேக்களை வெட்டி டீத்தூளை எடுக்கவேண்டும் என்பது புரியாமல் சாஷேக்களை அப்படியே வெந்நீரில் போட்டு குடிக்க ஆரம்பித்தபோதுதான், டீ பேக்குகள் உதயமானது. எப்படி இருக்கிறது எளிமையின் பிறப்பு..? என்று கேட்கிறார் ஆசிரியர்.

உற்பத்தியாளர் பொருள்களைச் செய்ய வும் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கி உபயோகிக்கவும் இருந்த காலம் அது. 1950-களின் மத்தியில் கிலிஸ் லண்ட்க்ரென் என்பவர், தான் வாங்கிய புதிய டேபிளை தன் காருக்குள் ஏற்ற முயன்றார். அது உள்ளே செல்லவில்லை. அவர் டேபிளின் கால்களைக் கழற்றிவிட்டு காருக்குள் ஏற்றிச் சென்று வீட்டில் அவராகவே பொருத்திக் கொண்டார். அட, இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து, தான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் சொன்னார். இதனால்தான், 1956-ல் தட்டையான பேக்கிங் (Flat pack) என்பது நடைமுறைக்கு வந்தது.

கடைக்கு வரும் வாடிக்கையாளரை அவர் கையில் எடுத்துச்செல்ல சாத்தியமான அளவைவிட, அதிக அளவு பொருளை வாங்கச் செய்வது எப்படி? 1912-ல் ஒரு சிறு பலசரக்கு வணிகர் அவருடைய வாடிக்கை யாளர்கள் கையில் எந்த அளவு எடுத்துச் செல்ல முடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே பொருள்களை வாங்குவதைக் கண்டறிந்தார். காகிதத்தால் ஆன ஒரு பையைக் கொடுத்தால் அவர்கள் அதிகமான அளவு பொருள்களை வாங்க வாய்ப்புள்ளதே என நினைத்து வடிவமைத்ததுதான் கேரியர் பேக் (கேரி பேக் என இப்போது சொல்லப்படுவது).

எளிமையின் சிறப்பைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை கட்டாயம் படிக்கலாம்.

நாணயம் டீம்