கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஐந்நூறு வைரங்கள்

ஐந்நூறு வைரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐந்நூறு வைரங்கள்

சிந்துஜன் நமஷி ஓவியம் : செந்தில்

ற்றைத் தெருவிளக்கு மட்டும் எரியும்
ரஷ்யச் சாலையில் பெண் உளவாளி
எமிலியைக் கொல்லப் பணிக்கப்படுகிறேன்.

இந்த ராத்திரி வேட்டைகள்
ரத்த தாகம்கொண்டவை
கைகள் வியர்வையில் வழுவழுக்கின்றன
சட்டையில் ஆட்காட்டிவிரலைத் துடைத்துக்கொள்கிறேன்.

ஸ்னைப்பர் வீரனுக்கு
இரண்டாம் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை
இருவரில் யாரோ ஒருவரின் சாவு
இன்று நிகழ்ந்தேவிடும்

ஐந்நூறு வைரங்கள்

மூச்சைப்பிடித்து
உடலசைவைக் கட்டுக்குள்வைக்கிறேன்
ட்ரிக்கரை அழுத்த
சுருண்டுவிழுகிறாள் எமிலி.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து
வாழ்த்துகள் குவிகின்றன.

‘அடுத்த கட்டத்துக்கு நகர
பத்து நிமிடங்கள் காத்திருக்கிறீர்களா?
அல்லது
ஐந்நூறு வைரங்கள் எடுத்துக்கொள்ளட்டுமா?’
கேட்கிறது தொடுதிரை.

என்னிடம் ஏது ஐநூறு வைரம்?
தவிர, வால்கா கரைவரை
போக வேண்டும் எமிலியின் அஸ்தியைக்
கரைத்துவர.