Published:Updated:

“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது!”

“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது!”

பழ.நெடுமாறன்

“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது!”

“தடை என்பதைத் தாண்டி, உங்கள் நூல்கள் அழிக்கப்பட வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இதுவரைக்கும் இந்தியாவில் எந்த நீதிமன்றமும் / நீதிபதியும் ஒரு புத்தகத்தை அழிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததில்லை. ஏராளமான நூல்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சியிலும் சுதந்திர நாட்டிலும் தடைவிதிக்கப்
பட்டுள்ளது. ஆனால், ஒரு நூலை அடியோடு அழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது எழுத்தாளனின் கருத்துச் சுதந்திரத்தையும் எழுத்துச் சுதந்திரத்தையும் அழிப்பதற்குச் சமமானதாகும். எந்த எழுத்தானாக இருந்தாலும், அவனுடைய படைப்பு என்பது மக்களுக்கானது. மக்களுக்குத் தன் படைப்பு போய்ச் சேர வேண்டும் என்பதைத்தான் ஓர் எழுத்தாளன் விரும்புவான். எழுத்தாளனின் படைப்பை அழிக்கும் நிலை எங்கும் யாருக்கும் இனி நேரக் கூடாது.

“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய நூல்கள் இந்திய அளவில் நிறைய வந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ் இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் தடைசெய்யப்பட்டபோது, அந்தத் தடையை ஆதரித்தும் எதிர்த்தும் நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல, ‘விடுதலைப் புலிகள்’ தடைசெய்யப்பட்டபோது, அந்த அமைப்பை ஆதரித்து ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில்

“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது!”

வெளியாகியிருக்கின்றன. அவை எதுவும் தடைசெய்யப்படவில்லை. இயக்கத்துக்குத் தடை என்று சொன்னால், சட்டம் அது குறித்து என்ன சொல்கிறது என்றால், ‘விடுதலைப் புலிகளு’க்கு நிதிஉதவி செய்வதோ, ஆயுத உதவி செய்வதோ, அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் கொடுத்துப் பாதுகாப்பதோ, அவர்களின் செயல்களுக்குத் துணையாக நிற்பதோ குற்றம். ஆனால், எங்கள் மீது ‘தடா’,  ‘பொடா’ வழக்குகள் போட்டு கைதுசெய்தபோது, ‘இவர்கள் புலிகள் அமைப்பை ஆதரித்துப் பேசினார்கள்’ என்பதுதான் காரணமாக இருந்தது. ‘அப்படி ஆதரித்துப் பேசுவது குற்றமே இல்லை’ என்றுதான் நீதிமன்றம் எங்களை விடுதலை செய்தது.அப்படிப் பேசுவது குற்றம் இல்லை என்று சொன்னால், அதுபற்றி எழுதுவதும் குற்றம் இல்லைதானே. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அதற்கு மாறாக, புத்தகத்தை அழிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருப்பது என்பது, இனிமேல் யாரும் அப்படி ஆதரித்து எழுதக் கூடாது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.

புத்தகத்தைத் தடைசெய்வது என்பதோடு, புத்தகம் அழிக்கப்பட வேண்டும் என்று சொல்வதற்குப் பின்னால் ஒரு மர்மம் இருப்பதாகவே எண்ணுகிறேன். ஏனென்றால், வழக்கு தொடுக்கப்பட்டு, 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. பத்து லட்ச ரூபாய் பெருமானமுள்ள 2,000 புத்தகங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. 2,000 புத்தகங்களையும் வழக்கு முடிந்ததும் என்னிடம் கொடுக்க வேண்டும். அதற்காக அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்போல. எனவே, காவல்துறையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் நூல்களை அழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.”

“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே. அப்படியிருக்க விடுதலைப் புலிகள், ஈழத்தில் சில அமைப்புகளுக்குத் தடைவிதித்தது குறித்து முன்வைக்கப்படும் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“எந்த அமைப்பிற்கும் புலிகள் தடை விதிக்கவில்லை. இந்தியாவின் ‘ரா’ உளவுத்துறை, புலிகளுக்கு எதிராகச் சில அமைப்புகளை வளர்த்தது. ஆயுதம் கொடுத்து அவர்களைப் புலிகளோடு மோதும்படி ஏவியது. அப்படி ஏவப்பட்டவர்கள் இந்திய ‘ரா’ உளவுத்துறையின் கையாள்களாக மாறி, குழப்பம் செய்தவர்கள் அல்லது மக்களை மிரட்டியவர்கள் போன்றவர்கள்மீது புலிகள் நடவடிக்கை எடுத்தார்கள். மற்றபடி, புலிகள் மீது விமர்சனம் வைத்தவர்களையோ மாற்றுக்கருத்து உடையவர்களையோ புலிகள் எதுவும் செய்யவில்லை.”

“கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது!”

“கருத்து சுதந்திரத்துக்கு எல்லை ஏதும் இருக்கிறதா?”

“எந்த எழுத்தாளனாக இருந்தாலும், சட்டப்படி எழுத வேண்டும் என்பதைவிட சமுதாயத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனோ, சமுதாயத்தில் சீர்கேட்டைப் பரப்பும் நோக்கத்தோடோ, சமுதாயத்தில் ஒழுக்கக் கேட்டைப் பரப்பும் வகையிலோ எழுதுவது தவறானது. ஆனால், எழுத்தாளர்கள் தங்களுடைய மனசாட்சியின் படிதான் படைப்புகளை உருவாக்குகிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் கவனமாகத்தான் இருக்கிறார்கள்; எழுதுகிறார்கள். இவையெல்லாம் எழுத்தாளர்கள் தங்களுக்கே விதித்துக்கொண்ட விதிகள். எழுத்தை ஆயுதமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். ஒழுக்கக் கேடுகளைப் பரப்பும் கருத்துகளை யாரும் எழுதுவதில்லை. பெற்ற குழந்தையை ஒருவன் கொலைசெய்ய முயலும்போது, அவனிடமிருந்து தன்னுடைய குழந்தையைக் காப்பாற்ற ஒரு தாய் என்ன விலையும் கொடுக்கத் தயாராக இருப்பார். அப்படித்தான் நான் என்னுடைய நூலைக் காப்பாற்ற முயற்சி எடுக்கிறேன். கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லையே இல்லை. சமூதாயச் சீர்கேடுகளுக்குத் துணையாக இருக்கக் கூடாது. மற்றபடி, கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்றது.”