Published:Updated:

“நாம், மக்களின் இதயங்களில் வேலைசெய்ய வேண்டும்!”

“நாம், மக்களின் இதயங்களில் வேலைசெய்ய வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நாம், மக்களின் இதயங்களில் வேலைசெய்ய வேண்டும்!”

மனுஷ்ய புத்திரன்

“நீங்கள் எழுதிய ‘தேவி’ கவிதைக்காக அடிப்படைவாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்பையும் வசைகளையும் பெற்றீர்கள். அந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்?”

“அது ஒரு குப்பையான தருணம். நினைப்பதற்குக்கூட தகுதியற்ற தருணம். தொடர்ந்து மதவாதம் சார்ந்த உரையாடலைச் சமூகத்தில் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக மத அடிப்படைவாதிகள் பொய்யான பல பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்காக ஊடகங்களையும் சமூக வலைதளங்களையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்கு முக்கியமான இலக்காவது கலைஞர்களும் எழுத்தாளர்களும். அவர்கள் எந்தப் பாதுகாப்புமற்ற மென்இலக்குகள். அவர்கள்மேல் ஒரு கோழைத்தனமான தாக்குதல் தொடர்ந்து ஏவப்படுகிறது. கொலை மிரட்டல்கள் கொலையிலும் முடியலாம் என்பதற்கான சாட்சியங்கள்தான் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, கெளரி லங்கேஷ் கொலைகள். கலைஞர்களாகிய நாங்கள் இந்தக் காலகட்டத்தில் உயிர் அச்சமின்றி இந்தத் தீய சக்திகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதுதான் வரலாற்றின் கட்டளை.”

“நாம், மக்களின் இதயங்களில் வேலைசெய்ய வேண்டும்!”

“அந்தச் சம்பவத்திற்குப் பிறகு கவிதைகள் எழுதும்போது, உங்களுக்குள் ஒருவித சுயதணிக்கை உருவாகியிருப்பதாக உணர்கிறீர்களா?”

“அத்தகைய சுயதணிக்கைக்கு ஆட்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தத் தாக்குதலை மேற்கொள்கிறவர்களின் நோக்கம். இதன் விளைவுகள் மோசமானவை. தாக்குதலுக்கு உள்ளாகும் கலைஞர்கள் பலசமயங்களில் மெளனமாகிவிடுகிறார்கள். அதைவிட மோசமானது, இந்தத் தாக்குதலுக்கு நேரடியாக ஆட்படாதவர்களும் ஒருவித அதீத எச்சரிக்கை மனநிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இப்படித்தான் பாசிஸ்ட்டுகள் நம் மனங்கள் மேல் ஆட்சிசெய்கிறார்கள். நான் இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக உள்ளும் புறமும் போராடிக்கொண்டிருக்கிறேன். அச்சத்தின் வழியே நம்மை வெல்ல முடியாது என்பதை உறுதிப்படுத்துவது மிகப்பெரிய சவால்.”

“எம்.எஃப்.ஹுசேன், இந்துமதம் சார்ந்த புனைவுக் காதாபாத்திரங்களை வரைந்தபோது, ‘அவர் இஸ்லாமியப் பெண்களை அப்படி வரைவாரா’ என்ற விமர்சனம் எழுந்தது. இதேபோன்ற விமர்சனம் உங்கள் மீதும் வைக்கப்பட்டது...”

“கலைஞர்களை இவர்கள் எப்போதும் சாதி-மத அடையாளங்களோடு பிணைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இந்துத்துவா அடிப்படைவாதிகளால் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் தாக்கப்பட்டிருக்கிறேன். சாதிய சக்திகளால் பெரும் தூற்றுதலுக்கு ஆளாகியிருக்கிறேன். என்னை ஏதாவது ஓர் அடையாளத்துடன் பிணைத்து நெருக்கடி கொடுக்கலாம் என்று நினைப்பவர்கள் மூடர்கள். அது ஒருபோதும் நடக்காது. நான் எந்த மதத்துக்குள்ளும் அடங்குபவனல்ல.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நாம், மக்களின் இதயங்களில் வேலைசெய்ய வேண்டும்!”

“சமூகமும் மக்களும் இன்னும் ஏற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் தயாராகாத தளத்தில், அவர்களிடம் மிக நுட்பமான காத்திரமான விஷயங்களை வைக்கும்போது இவ்வாறான பிரச்னைகள் உருவாகின்றன. இதை எப்படிச் சரிசெய்வது?”

“எல்லாக் காலங்களிலும் மக்கள் அப்படித்தான் இருந்திருகிறார்கள். நாம் நாகரிக வளர்ச்சியின் நீண்டதூரம் முன்னேறி வந்திருக்கிறோம். மனித உரிமைகள் சார்ந்த அறவியல் மதிப்பீடுகள் சமூகத்தில் வளர்ந்திருக்கின்றன. மதவாத கும்பல் மனோபாவமும் கருத்தியலும் மக்களைப் பின்னோக்கி இழுக்கின்றன. நாம் மக்களின் இதயங்களில் வேலை செய்ய வேண்டும். சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதற்காக சாக்ரடீஸ்கள் தோன்றுவதைத் தடுக்க முடியுமா?”

“நவீன எழுத்தாளர்கள், ஓர் அமைப்பாகத் திரளாமல் உதிரிகளாக இயங்கும் சூழல் பாதுகாப்பற்றது என்று நினைக்கிறீர்களா?”

“எழுத்தாளர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் ஓர் அமைப்பு அல்லது இயக்கம் வேண்டுமென்று நான் கருதவில்லை. மாறாக, எல்லாச் சமூக முற்போக்கு இயக்கங்களோடும் ஓர் எழுத்தாளன் இணைந்து செயல்பட வேண்டும். அது விவசாய, பெண்கள், தொழிலாளர் பிரச்னைகளாக இருக்கலாம். தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளாக இருக்கலாம். சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளாக  இருக்கலாம். இப்படி எந்தவொரு சமூக அநீதிக்கு எதிரான அமைப்புகளோடும் எழுத்தாளன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு செயல்படலாம். ஓர் எழுத்தாளன் என்பவன், எல்லாவிதமான நீதிக்கான இயக்கங்களோடும் ஒரு பங்கேற்பாளனாக இருக்க வேண்டும். அதுதான் சரியானது என்று நினைக்கிறேன்.

என்மீது மதவாத சக்திகள் தாக்குதல் நிகழ்த்தியபோது, எல்லா முற்போக்கு அமைப்புகளும் எனக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தார்கள். எழுத்தாளர் என்பதாலேயே அவர்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எழுத்தாளர்களிலும் சாதிய, மதவாத எண்ணம் கொண்டவர்கள், பல்வேறு விதமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பவர்கள் இருக்கிறார்கள். எனவே, எழுத்தாளர்கள் ஓர் அமைப்பாகத் திரள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. அதனால், முற்போக்கு இயக்கங்களோடு எல்லா முற்போக்கான எழுத்தாளர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவதும், ஒரு தனிப்பட்ட எழுத்தாளனுக்குப் பாதிப்பு ஏற்படும்போது அதை இந்தச் சமூகத்தின் பிரச்னையாக நினைத்து எல்லா முற்போக்கு அமைப்புகளும் அவனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துத் திரள்வதும் அவசியம் என்று நினைக்கிறேன்.”