Published:Updated:

வித்தியாசமான முறையில் புத்தகத்தை வெளியிட்டது த.மு.எ.க சங்கம்!

வித்தியாசமான முறையில் புத்தகத்தை வெளியிட்டது த.மு.எ.க சங்கம்!
வித்தியாசமான முறையில் புத்தகத்தை வெளியிட்டது த.மு.எ.க சங்கம்!

ராமநாதபுரம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் சர்க்கரைப் பொங்கல், செங்கரும்பு, பனங்கிழங்கு ஆகியவற்றுடன் புத்தக வெளியீட்டு விழாவை வித்தியாசமான முறையில் நடத்தி அசத்தினர்.


 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ராமநாதபுரம் கிளையின் சார்பில் மனோதத்துவ நிபுணர் அசரப் அலி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவும், மண்ணின் படைப்பாளிகள், கலைஞர்களுக்குப் பாராட்டு விழாவும் நடந்தது. கிளைச் செயலாளர் அறிவழகன் தலைமையில் நடந்த விழாவில் முரளிமோகன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் மருத்துவர் வான்தமிழ் இளம்பருதி தொடக்க உரையாற்றினார். படைப்பாளிகளைப் பாராட்டி மனநல மருத்துவர் பெரியார் லெனின், மருத்துவர் புகழேந்தி, காவல் ஆய்வாளர் கலையரசன், த.மு.எ.க.ச நிர்வாகிகள் கதிரேசன், முகவை அழகுடையான், கலையரசன் ஆகியோர் உரையாற்றினர். இதைத் தொடர்ந்து சர்க்கரைப் பொங்கல், செங்கரும்பு, பனங்கிழங்கு ஆகியவற்றுடன் புத்தக வெளியீடு நடந்தது.

மனோதத்துவ நிபுணர் அசரப் அலி எழுதிய `உங்கள் குழந்தைகளைப் படியுங்கள்' என்ற நூலை மருத்துவர் பெரியார் லெனின் வெளியிட காவல் ஆய்வாளர் கலையரசன் பெற்றுக்கொண்டார். மற்றொரு நூலான  `திரும்பிப் பார்க்கிறேன்' என்ற கவிதைத் தொகுப்பை  மருத்துவர் புகழேந்தி வெளியிட த.மு.எ.க ச மாநில துணைத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொண்டு நூல்கள் குறித்து கருத்துரையாற்றினார். வித்தியாசமான முறையில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஸ்டாலின், குருவேல், வெங்கடேஷ்  உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கேற்றனர்.